Tuesday, August 21, 2012

வ.உ.சி.யின் இனப்பற்று


(திருச்சியில் 3.5.1936ல் கூடிய பார்ப்பனரல்லாதார் மாநாட்டுக்கு தூத்துக்குடியிலி ருந்து கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்அவர்கள் எழுதி அனுப்பிய  வேண்டு கோள் கடிதம்).
அய்யன்மீர்,
நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்டமட்டில், அதிலும் முக்கியமாக தமிழ்நாடு சம்பந்தப் பட்டமட்டில், பெருந்தொகையினர் களாகிய பார்ப்பனரல்லாதார்கள் பல துறைகளிலும் சிறு தொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்துக்குட் பட்டு, பின்னிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவு நிலைமையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை.
அதைப்பற்றி நான் பெரிதும் கவலை அடை கின்றேன். பார்ப்பனருடைய ஆதிக் கத்தை உதறித் தள்ளிவிட்டு பார்ப் பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
மீட்சிக்கு ஒரு வழி
பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலி ருந்து பார்ப்பனரல்லாதார்கள் வெளிப்படுவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழியாவது: பார்ப்பன ரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சியினரா யினும், சுயமரியாதைக் கட்சியினரா யினும், சுயேச்சைக் கட்சியினராயினும், காங்கிரஸ் கட்சியினராயினும், காங் கிரஸ் முன்னேற்றத்திலும் பிராமண ரல்லாதார்கள் முன்னேற்றத்திலும் சம அபிமானமுள்ள என் போன்றவர் களாயினும், பார்ப்பனர் ஆதிக்கத்தை வெறுத்து, காங்கிரசைவிட்டு விலகி நிற்கும் எனது நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றவர் களாயினும் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனருக்குள்ள ஆதிக்கத்தை ஒழித்து, பார்ப்பன ரல்லாதார்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்.
அவ்வாறு உழைக்க முற்படுங்கால் பார்ப்பனரல்லாதார்களுக்குள் இருக்கிற மேற்கூறிய ஜஸ்டிஸ் கட்சியினர், சுயமரியாதைக் கட்சி யினர் முதலிய பல கட்சியினர்களும் தத்தம் கட்சிக்குரிய சொந்தக் கோட்பாடுகளை ஏனைய கட்சி யினர்க்குள் புகுத்தவோ, எனைய கட்சியினர்கள் அங்கீகரிக்கும்படிச் செய்ய முயலவோ கூடாது.
ஒவ்வொரு கட்சியினரும்  ஒவ்வொரு கோட் பாட்டைக் கொண்டிருக்கலாம்; தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனரல்லாதார்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயத்தில் எல்லாக் கட்சியினர் களும் ஒன்று சேர்ந்து உழைக்கலாம். இவ்வாறு செய்வதில் முரண்பாடு ஒன்றும் இல்லை.
பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்வார்கள்!
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியைக் கைப்பற்றுவதற்கு பார்ப்பனரல்லாதார்கள் முயற்சி செய்கின்றார்கள் என்று தெரிந்தவுடனே, பார்ப்பனர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க உத்தியோகஸ்தரல்லாதார் கள், வைதீகர்கள், வைதீகரல்லா தார்கள் - எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு சூழ்ச்சி செய்வார்கள்.
அச்சூழ்ச்சியாவது: பார்ப்பனரல்லா தார்களில் உலக அனுபவம் இல்லாத இளைஞர்களையும், வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாத வறிஞர் களையும், கோடாரிக் காம்புகள் போன்றவர்களையும் பார்ப்பனர்கள் பொய்யுபதேசம், பொருள் கொடுத்தல் முதலியவற்றால் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியுள் இழுத்து சில பதவிகள் கொடுத்து, அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாத உண்மையான தேசாபிமானிகளைப் பிரசங்கங்கள் வாயிலாகவும், பத்தி ரிகைகள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும் நிந்திக்க வும், தேசத் துரோகிகள் என்று பறைசாற்றவும் முற்படுவார்கள்.
அப்போது அவ்விளைஞர்களையும், அவ்வறிஞர்களையும், அக்கோடாரிக் காம்புகளையும் பார்ப்பனரல் லாதார்களுடைய வழிக்குத் திருப்புவது அசாத்தியமான காரியம். அவர்கள் பிரசாரங்களுக்கெல்லாம் ஒற்றிக்கிரட்டியாக பார்ப்பனரல்லா தார்கள் தங்கள் சொல்லுக்குட்பட்ட இளைஞர்களையும், வறிஞர்களையும் கொண்டு எதிர் பிரசாரங்கள் செய்ய வேண்டும். முன்வைத்த காலைப் பின் வைக்கலாகாது. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
வேற்றுமைகளை மறப்பீர்!
பார்ப்பனரல்லாத சகோதரர்களே! சாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலியவற்றையெல்லாம் விடுத்து, நீங்களெல்லோரும் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும், நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக.
உங்கள்மீதுஅன்புள்ள,
- வ.உ. சிதம்பரம்பிள்ளை
ஆதாரம்: குடிஅரசு 17.5.1936


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...