Wednesday, August 1, 2012

ஆவணி அவிட்டமாமே!


நாளை ஆவணி அவிட்டமாம்! பார்ப்பனர்கள் நாளை பூணூலைப் புதுப்பிக்கும் நாள்.
இடஒதுக்கீட்டால் ஜாதிக்குப் புத்துயிர் ஊட்டப்படுகிறது என்றெல் லாம் நீட்டி முழங்கும் பார்ப்பனர்கள் அனைவரும் (சோ உள்பட) நாளைய தினம் தவறாமல், மறக்காமல் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள்.
இந்தப் பூணூலை அணிந்த பிறகுதான் எந்த ஒரு பார்ப்பனச் சிறுவனும் துவிஜாதி (இரு பிறவி யாளன்) பிராமணன் ஆகிறான். பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்பதற்கான டமார அறிவிப்புதான் இந்த பூணூல் அணிவிப்பு.
பார்ப்பனர்களைத் தவிர மற்ற செட்டியாரும், ஆசாரியாரும், பத்தரும் பூணூல் அணிந்து கொள்கிறார்களே என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்குச் சாத்திரத்தில் அங்கீ காரம் கிடையாது. இதுகுறித்து மனுதர்ம சாஸ்திரம் பச்சையாகவே நெற்றியில் மொத்துவது போலவே எழுதி வைத்திருக்கிறது.
பிராமணனுக்குப் பஞ்சு நூலா லும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலா லும், வைசியனுக்கு வெள்ளாட் டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது. (மனு தர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 44)
இதில் சூத்திரனுக்குப் பூணூல் தரிப்பது தடுக்கப்பட்டுள்ளது என் பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
இராமானுஜர்கூட ஆதிதிராவிடர் களுக்குப் பூணூல் அணிவித்துப் பார்த்தாரே! பாரதியாரும் அதுமாதிரி முயன்றார். ஆனாலும் மூக்கறுபட்டது தான் மிச்சம்.
இந்து மதம், பார்ப்பனீயம் அதனை அனுமதிக்காது. பிறப்பால் பேதம் கற்பிக்கப்பட்ட சமுதாயத்தில் மாற்றங்கள் என்பது குதிரைக் கொம்பே! சீர்திருத்தவாதி என்று பார்ப்பனர்கள் கூறும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 1938இல் சென்னை மாநிலப் பிரதம ராக இருந்தபோது ஆசாரியார், ஆச்சாரியார் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் ஆயிற்றே!
பார்ப்பனர்கள் சூத்திரர் வீடு களுக்கு விவாஹசுப முகூர்த்தங்களை நடத்தி வைக்கும் பொழுது மட்டும் ஒரு முகூர்த்த நாழிகைக்குப் பூணூலைத் தரிக்கச் செய்வார்கள். ஏன் அந்தப் பதவி உயர்வு என்றால் சூத்திரனுக் குக் கல்யாண உரிமை சாஸ்திரப்படி கிடையாதே! அதே நேரத்தில்  சூத்தி ரர்களின் பொருளைச் சுரண்டவும் வேண்டாமா?
மேலும் வேத மந்திரங்களைச் சூத்திரங்களின் காதுகளில் ஓதுவும் கூடாது என்பதால் தற்காலிகமாக மாப்பிள்ளையின் தோளில் பூணூலை மாட்டி, கல்யாணம் முடிந்து தட்ச ணையையெல்லாம் தட்டாமல், பாக்கியில்லாமல், கறாராகப் பெற்றுக் கொண்ட நிலையில், மறக்காமல் ஆம்! மறக்கவே மறக்காமல் மாப் பிள்ளை தோளில் பூட்டப்பட்ட அந்தப் பூணூலைக் கழற்றச் சொல்லி, குப்பையோடு குப்பையாகக் கூட்டி ஒதுக்கச் செய்த பிறகுதான் மேற்படி யான் நடையைக்கட்டுவான்.
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும்கூட பூணூலைப் புதுப்பிப்பதற் காகவே ஒரு நாளை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் தனியே ஒதுக்கி வைத்து ஜாதி ஆணவக் குறியான பூணூலை மற்றவர்களைச் சூத்திரர்கள் பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் என்பதை மறைமுக மாகத் தெரிவிக்கும் அறிவிக்கும்  வகையில்  புதுப்பிக்கிறார்களே!  அதனை அனுமதித்துக் கொண்டும் இருக்கிறோம் என்றால் அதன் பொருள் - நம் மக்களுக்குப் போது மான அளவுக்கு மான உணர்வு பொங்கி எழவில்லை - வீறுகொண்டு கொந்தளிக்கவில்லை என்றுதானே பொருள்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...