Saturday, August 4, 2012

ஆடிப் பெருக்கு ஆடிப் போச்சே!


ஆற்றில் பதினெட்டுப் படியும் நீர் வழிந்தோடும். புதுமணத் தம்பதிகள் நீராடுவர், தாலி பிரித்துக் கட்டுவர்! அப்படிச் செய்தால் கல்யாணம் ஆகாத பெண்களுக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு விரை வில் அந்தப் பாக்கியம் கிட்டும். எல்லாம் இந்த ஆடிப் பெருக்கில்!
ஆடிப் பெருக்குச் சமயத்தில் ஆற்றில் புது வெள்ளம் பெரும் அளவில் நுரை தள்ளி வருவதால் அந்தத் தருணத்தில் காவிரித்தாய் கர்ப்பிணி என்பது அய்தீகமாம்.
(யாராவது கேள்வி கேட்டுவிடு வார்கள் என்பதற்காக இப்படி சொற் களைத் தயாராக வைத்திருப் பார்கள்! என்பது அய்தீகம்... என்பது நம்பிக்கை என்று சொல்லித் தப்பி விடுவார்கள்).
கர்ப்பிணிப் பெண்ணான காவிரி யின் சகோதரர்தாம் சிறீரங்கத்தில் இருக்கும் ரெங்கநாதராம். இந்த நாளில் தன் தங்கை காவிரிக்குச் சீர்வரிசை செய்வாராம். அதன்படி கர்ப்பிணிப் பெண்கள் விரும்பி உண்ணும் சித்ரான்னங்களான புளியோதரை, மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் வெல்லமும் தேங்காயும் சேர்ந்த வெல்ல சாதம் முதலிய வற்றை காவிரித் தாய்க்கு நிவே தனம் செய்து அனைவரும் உண்டு களிப்பர்.
ரெங்கநாதரின் சீர்வரிசை யாக முறம் ஒன்றில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் பழம், பூ ரவிக் கைத் துணி, கருகமணி, திரு மாங்கல்ய சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, தேங்காய் உடைத்து மற்றொரு முறத்தால் மூடி, தீபங் களை ஒரு வாழை மட்டையில் வைத்து முறத்துடன் ஆற்றில் (காவிரித் தாய் அல்லவா!) மிதக்க விடுவார்களாம்.
இந்தச் சீரைத் தன் தங்கைக்கு செய்வதற்காகவே ரெங்கநாத பெரு மாள் அம்மாமண்டபத்தில் காலை யில் எழுந்தருளி (ஆமாம் தூக்கிக் கொண்டு வருவார்கள்) மாலைவரை அங்கு இருந்து அருள் பாலிப்பாராம்! (பிறகு தூக்கிக் கொண்டு கோயி லுக்குள் வைப்பார்கள்)
- இப்படி ஆடிப் பெருக்கு என்று கூறி அய்தீகத்தை சந்துக்குச் சந்து புனைக் கதைகளை வைத்து அக்கப் போர் செய்கிறார்களே - ஆன்மீக இதழ்களில் அளந்து கொட்டுகிறார் களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி - அதிகம் தேவைப்படாது.
ரெங்கநாதரே அம்மா மண்டத் தில் வந்து தங்குவதாக அய்தீகம் சொல்கிறீர்களே நேற்று நடந்த அந்த ஆடிப் பெருக்கு விழாவில் காவிரித் தாய் அலை புரண்டு வந்தாளா? பதினெட்டுப் படிகளிலும் வழிந்து ஓடினாளா? வெட்ட வெளி யிலே சிலம்பமா! வெட்கம் கெட்ட ரெங்கநாதன் குத்துக்கல்லாகக் குந்த  வைக்கப்பட்டதல்லாமல் அவர் அருள்பாலித்துக் கிழித்தது என்ன?
அவரின் அரும்பெரும் சக்தியால் காவிரியில் கரை புரண்டு தண் ணீரை ஓட வைக்க முடியவில் லையே - ஏன்? பழம், பூ, தேங்காய் சகலத்தை முறத்தில் வைத்து எந்தத் தண் ணீரில் மிதக்க விட்டார்கள்? - ஆற்று மணலிலா?
வெட்கப்பட வேண்டாமா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் அவ்வளவு தானே!
கருநாடகத்துக்காரன் காவிரிக் குத் தண்ணீரை திறந்து விட்டால் தானே உங்கள் ஆடிப் பெருக்கின் அமர்க்களம் எல்லாம்!
உங்கள் ரங்கநாதர் கருநாடகத் துக்காரனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துத் தண்ணீரைத் திறந்து விடச் செய்வதுதானே!
அல்லது அவனின் அற்புத சக்தியால் காவிரியில் தண்ணீரை ஓட வைப்பதுதானே!
இப்படியெல்லாம் எங்கே இருந்து சிந்திக்கப் போகிறீர்கள்? பக்தி வந் தால்தான் புத்தி போய் விடு கிறதே!
சின்ன வயதில் விளையாடும் பொம்மை விளையாட்டு, பெரியவர் கள் ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லையோ!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>



ஆகஸ்ட் 01-15

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...