Wednesday, August 22, 2012

ராஜபக்சே மகனுக்கு விண்வெளிப் பயணம் ஒரு கேடா?


கொழும்பு, ஆக. 22- இனவெறி சிங்கள அதிபர் ராஜபக் சேவின் மகன் விண்வெளியில் பறக்கப் போகிறானாம் - கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சேவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ருசியா முன்வந்துள்ளது.

இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்குப் போக வேண்டும் என்று ரோஹித ராஜபக்சே அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ருசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக் சேவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி யிருக்கிறார். இதையடுத்து ரோஹித ராஜபக்சே விரைவில் ருசியா செல்ல இருக்கிறார். இதற்காக பெருந்தொகையான பணத்தை ராஜபக்சே, ருசியாவுக்குக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை இலங்கை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து ராஜபக்சேவை விளாசத் தொடங்கியிருக்கின்றன. நாட்டின் விலைவாசி விண்ணை முட்டி நிற்கையில் ராஜபக் சேவின் மகனுக்கு விண்வெளி பயணம் ஒரு கேடா? என்றும் அந்த கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...