Friday, August 10, 2012

பிள்ளையார் ஊர்வலங்கள்


பிள்ளையார் என்ற இந்து மதக் கடவுளுக்குப் பல நாமகரணங்கள் உண்டு என்றாலும், அதனைப் பெரிது படுத்தி விளம்பரம்செய்து இந்தியத் துணைக் கண்டத்தின் தேசியத் திருநாள் போல பிள்ளையார் சதுர்த்தியைப் பெரிதுபடுத்தி யுள்ளனர்.
இதனை முக்கியப் புள்ளியாக வைத்து இந்துத்து வாவுக்கு ஒரு புதிய உந்து சக்தியை உண்டாக்குவதற்கான வகையில் மூளையைச் செலுத்தியவர் மகராஷ்டிரப் பார்ப்பனரான பாலகங்காதரத் திலகர்.
பிள்ளையார் என்பதற்கு இன்னொரு பெயர் வினாயகர் என்பதாகும். கவுதம புத்தருக்கு இந்தப் பெயர் உண்டு. இந்தப் பெயரை உருட்டல் புரட்டல் செய்து, எங்கெங்கெல்லாம் புத்தர் உருவச் சிலைகள் இருந்தனவோ அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, இந்த விநாயகனாகிய பிள்ளையாரின் சிலை களைச் செய்து வைத்துவிட்டனர்.
ஆரியப் பார்ப்பனர்களின் மனப்பான்மையைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது.
பொம்மைகளைக் கோயில்களில் கடவுள் களாக்கி, அவற்றின் ஏஜென்டுகளாகப் பார்ப்பனப் பெருச்சாளிகள் புகுந்து கொண்டு மக்களின் அறியாமை, அச்சம், பேராசை  இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தங்களைப் பிறவி முதலாளிகளாக ஆக்கிக் கொண்டு, சுரண்டல் வேலையை அதிகார பூர்வமான தொழிலாக செய்து கொண்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்தாம்.
விநாயகன் என்ற கடவுளின் உருவத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு மிருகமே இருக்க முடியாது என்கிறபோது எப்படி கடவுளாக இருக்க முடியும் என்ற கேள்வி எழாமல் போகாது.
உருவமற்றவர் கடவுள் என்று ஒரு புறத்தில் ஓதிக் கொண்டு, இவ்வளவு ஆபாசமாக ஒரு கடவுளை ஆரியப் பார்ப்பனர்கள் உருவாக்கியுள்ள பித்தலாட்டத்தை என்ன சொல்ல!
எந்த அளவுக்கு விநாயகனைப் பயன்படுத் தினார் திலகர் என்றால், இரண்டு ஆங்கில அதிகாரிகளை படுகொலை செய்யும் அளவுக்கு வெறியை ஊட்டினார்.
புனேயில், பிளேக் நோய் பரவியதால், அந்த நோய்க்குக் காரணமான எலிகளை வேட்டையாட ஆங்கிலேயர் ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தவும் பட்டது.
அந்தத் தருணத்தில் இந்த திலகர் என்னும் பார்ப்பனர்  - கிறிஸ்தவர்களாகிய வெள்ளைக் காரர்கள் நமது கடவுளான விநாயகரின் வாகனத்தைக் கொல்லுகிறார்கள். இதனை அனுமதிக்கலாமா என்ற ஆவேச வெறியைக் கிளப்பினார்.
இதன் காரணமாக இந்துத்துவா வெறியர்கள் இரு ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர். இதன் காரணமாக திலகர் தண்டிக்கப்படவும் செய்தார்.
அந்தக் காலந்தொட்டு  நாடு தழுவிய அளவில் பிள்ளையார் ஊர்வலங்களை சிறுபான்மையினரி டம் கலகம் விளைவிக்கும் ஒருயுக்தியாக மேற் கொண்டனர். இந்த அனுபவம் சென்னையிலும் உண்டு.
விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண் டும் என்றால் வீட்டுக்குள் கொண்டாடிக் கொண்டு தொலையலாம். வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணறுகளிலும், குளங்களிலும் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கலாம். (அப்படித்தான் நடந்து வந்தது;) திலகரின் திட்டத்துக்குப் பிறகுதான் வீதிகளில் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் கைங்கர்யம் நடைபெறத் தொடங்கியது.
நீர்நிலைகளில் கரைக்கப்படும் பிள்ளையார் பொம்மைகளில் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கக் கூடாது. இராசயனக் கலவையான வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது தண்ணீரை நஞ்சாக்கும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கிறது.
அது குறித்து எந்தவித மதிப்பையும் கொடுக் காமல் பல வண்ணப் பிள்ளையார்களை ஊர்வல மாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக் கிறார்கள்.
குறிப்பிட்ட  அடி உயரத்திற்கு மேல் பிள்ளையார் பொம்மைகள் எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டும், அதை இந்துத்துவவாதிகள் பொருட்படுத்துவதில்லை. இந்த முறையாவது காவல்துறை என்ன செய்யப்போகிறது என்பதை யும் பார்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...