Monday, July 9, 2012

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோயில்களா? சட்ட விரோத நிகழ்ச்சியை அரசு தடுக்குமா?


மதுரை, ஜூலை 9- உசிலம்பட்டி வட்டத்திலுள்ள போச்சம்பட்டி ஊராட் சியில் உள்ள சமத்துவபுரத்தில் இரண்டு கோயில்கள் சட்ட விரோத மாக கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓரிடத்தில் காளியம்மன் கோயி லும், மற்றொரு இடத்தில் விநாயகர் கோயிலும் கட்டுவதற்கு முன்னோட் டமாக, சமத்துவபுரத்தின் இரு இடங்களில் சிமென்ட் மேடைகள் கட்டப்பட்டு அங்கு காளியம்மன் கற்சிலையும், விநாயகர் கற்சிலையும் வைக்கப்பட்டுள்ளன.
ஜாதி, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒற்றுமை யாக வாழ்வதற்காக தந்தை பெரியார் பெயரில்  கலைஞர் ஆட்சியில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், உயர்ஜாதியி னர், மதசிறுபான்மையினர் குடும்பங் களும் கலந்து வசிக்க ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இலவசமாக அரசு வீட்டை குடியிருப்பாகப் பெற்று பயன டைந்த மக்களே பெரியார் நினைவு சமத்துவப்புரத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித மத வழிபாட்டுத்தலமும் இருக்கக் கூடாது என்ற சட்டத்திற்கு விரோத மாகவும் கோயில்கள் கட்டுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
போத்தம்பட்டி சமத்துவபுரத்தில் கோயில் கட்டுவதற்கு அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம் மாள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த சமத்துவபுரத்தில், 2011 இல் தொடங்கப்பட்டது முதல் 22 கிறித் துவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின் றன. இங்கு ஒரு தேவாலயம் கட்ட இந்த 22 குடும்பங்களும் அனுமதி கோரி வருகின்றனர் என்று பாண்டி யம்மாள் கூறுகிறார்.
சமூக விரோதிகள்
உசிலம்பட்டி வட்டத்தில்  பெரும் பான்மையினராக உள்ள சில ஜாதி இந்துக்கள் போத்தம்பட்டி சமத்துவ புரத்தில் உள்ள பல வீடுகளைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களில் பலர் பணத்தை அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் ஆவர். கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதால், அவர்களின் சமத்துவபுர வீடுகளைக் கடன் கொடுத்தவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.
சமத்துவபுர விவகா ரங்களை இப்போது இந்தக் கும்பல் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாகக் கூறப்படுகிறது. அவர்கள் செல்வாக்கும், அதிகாரமும் மிக்கவர் களாக இருப்பதால் அவர்களிடம் எதுவும் கேட்க முடிவதில்லை என்று சமத்துவபுரத்தில் குடியிருக்கும் மற்ற மக்கள் கூறுகின்றனர்.
நரிக்குறவரை அடக்கம் செய்யக் கூடாதாம்
சமத்துவபுரத்தில் குடியிருந்த நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனபோது, அவரது உடலை சமத்துவபுரத்துக்கு அருகில் அடக்கம் செய்வதை இந்த ஆட்கள் தடுக்க முயன்றனர் என்று பாண்டியம் மாள் என்பவர் இந்த கும்பலின் அராஜகப் போக்கைப் பற்றி கூறினார். இங்கு கோயில் கட்டுவதைத் தடுக்க, தான் ஏற்கெனவே மதுரை ஆட்சியர் அன்ஷூல் மிஸ்ராவிடம் மனு கொடுத் திருப்பதாகவும் பாண்டியம்மாள் கூறினார்.
கோட்டாட்சியர்
இது பற்றி கேட்கப்பட்டபோது, சமத்துவபுரத்தில் கோயில் கட்டுவது விதிகளுக்கு எதிரானது. சமத்துவ புரம் உருவாக்கப்பட்டதன் நோக்கத் தையே அது சிதைத்துவிடும். நாங் கள் உடனடியாக நடவடிக்கை எடுப் போம் என்று வருவாய் கோட்டாட் சியர் சாந்தி கூறினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...