Monday, July 9, 2012

சதானந்தகவுடா


கருநாடக மாநிலத் தில் நடைபெறும் பி.ஜே.பி. யின் சடுகுடு அரசியலில், சதுரங்க விளையாட்டில் சதானந்த கவுடா காவு கொடுக்கப்பட்டார் என்று அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் மிகச் சரியாகவேதான் சொல்லி இருக்கிறார்.
தென் மாநிலங்களில் கருநாடக மாநிலத்தில் மட்டுமே பி.ஜே.பி.யால் ஆட்சியைப் பிடிக்க முடிந் தது. அப்படி ஒரு முடிவைக் கொடுத்ததில் கருநாடக மாநில மக்கள் இப்பொழுது மிகவும் வெட்கப்பட்டு, தொங்க விட்ட தலையை நிமிர்த்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
பி.எஸ்.எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாற்று குடலைப் பிடுங்குகிறது. ஊழல் காரணமாக பதவி விலக நேர்ந்த அந்த மனிதருக்கு வீராப்பு மட்டும் அடங்கிப் போய் விடவில்லை. அவருடைய ஆலோசனையின் பெயரில்தான் சதானந்த கவுடா முதல் அமைச்சர் ஆக்கப்பட்டார். எடியூ ரப்பா சுழற்றும் கொம்பு களுக்கெல்லாம் ஆடுடா ராஜா ஆடுடா! என்ற குரங்காட்டி ஆணைக் கெல்லாம் சதானந்த கவுடா மசியவில்லை என்றதும் உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார்! என்று முழுவீச்சில் இறங்கினார்.
நேர்மை,  நெறிமுறை, தார்மீகம் பற்றியெல்லாம் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும் பி.ஜே.பி.யோ இதற்கு மேல் யாரும் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள முடியாது என்கிற அள வுக்குக் கீழிறக்கத்தின் அதளபாதாளத்தைத் தொட்டுவிட்டது!
சதானந்தாவைக் கீழே இறக்கி நான் சொல்லும் ஜெகதீஷ் ஷெட்டரைப் பதவியில் அமர்த்துங்கள். இல்லையேல் ஆட்சி யையே கவிழ்ப்பேன் என்று ஒட்டாரம் பிடித்த பி.எஸ்.எடியூரப்பாவின் கட்டளைக்கு பி.ஜே.பி. தலைமை அடிபணியும் பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது. சதானந்த கவுடா அப்பாவி போலும்! உமா பாரதிக்குப் பதில் தற் காலிகமாக மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த ஆசாமி மறுபடியும் உமாபாரதிக்கு விட்டுக் கொடுத்தாரா?
கிடைத்த பதவியை மிரட்டலுக்குப் பயந்து கீழே போட்ட சதானந்த கவுடா அரசியலில் ஓர் அப்பாவி என்றுதான் பரிகசிக்கப்படுவார்!
அதோடு, தடி எடுத்தவருக்குத் தலை குப்புற சாய்ந்து தண்டனி டும் பிஜேபியின் தலைமை யும் பரிகசிக்கப்படும்!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...