Sunday, July 22, 2012

விதிமுறைகளை கர்நாடக அரசு கடைபிடிக்கவில்லை


காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு

புதுடெல்லி, ஜூலை 22-தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதற்காக பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை. கடந்த 2002ஆம் ஆண்டில் காவிரி நதி நீர் ஆணையம், வறட்சி காலத்தில் எந்த அளவின் அடிப் படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற வரன் முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த விதிமுறைகளை கர்நாடக அரசு முற்றிலுமாக கடைபிடிக்கவில்லை.
இதே நிலைதான் இந்த ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப் பாசன விவசாயப் பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவின் படி கடந்த ஜூன் மாதம் தமிழகத் துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தராததால் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் விவசாயி கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, காவிரி நதி நீர் ஆணை யத்தின் உத்தரவின் அடிப் படையில் தமிழகத்துக்கு தண் ணீரைத் திறந்துவிடுமாறு கர் நாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உட னடியாக கூட்டுமாறு பிரதமருக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், தலைக் காவிரியிலி ருந்து வரும் தண்ணீரை கர்நாடக அரசு பல்வேறு தடுப்பணை களைக் கட்டி தேக்கி வருகிறது. இதனால், தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைப்படுகிறது. அந்த தடுப்பணைகளில் தண்ணீர் அதிக அளவு தேக்கப்படாமலிருந்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே, கர்நாடக அரசு தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கிவைக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


1புரியும் வரை
2வரைந்து பழகுவோம்
3சுடோகு
4சுடோகு
5ஜூலை மாதத்தில்.......
6படப்புதிர்
7விளையாட்டு
8சின்னக்கை சித்திரம்
9சிந்தனை செய்!
10லண்டன் ஒலிம்பிக் 2012
11ராகுல் வென்றது எப்படி?
12உங்களுக்குத் தெரியுமா?
13சேதி தெரியுமா?
14Funny Facts of English
15உலகில் புதுசு சூரிய ஆற்றல் விமானம்
16இரு சக்கர மகிழுந்து
17சூழல் காப்போம்
18பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா
19சேதி தெரியுமா?
20தலைவர்கள் வாழ்வில்........
21கடலின் வரலாறு
22விளையும் பயிர் வீரத்துடன் நேர்மை
23விந்தைக் கணக்கு
24உலக புகழ் பெற்றவர்கள் பசுமை வெளி இயக்கம் கண்ட வாங்கரி மாத்தாய் 1940 -2011
25ஞாயிற்றைக் கடந்த வெள்ளி....
26தகுதி-திறமை-மோசடி:தகர்த்த மாணவன்
27விளையும் பயிர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...