Wednesday, July 18, 2012

ஏ.ஆர். முதலியார்


திரு. இராமசாமி முதலி யார் அவர்கள் திரு. பனகல் அரசரவர்களுக்கு வலக்கை போல் இருந்தவர். திரு. பனகல் அரசரவர்களுக்கு வந்த பெருமை யெல்லாம் அவரைச் சார்ந் தாலும், ஏதாவது சில தப்பாவது, தப்புகளாவது சொல்லக் கூடிய வரிருந்தால் அவ்வளவையும் வாங்கித் தம் தலையில் போட்டுக் கொள்ளக்கூடிய பெரி யவர் நம்முடைய இராமசாமி முதலியார். அவர்களை அறி யாமல் ஒரு காரியமும் நடந் திருக்காது என்றே சொல்லலாம். சாதாரணமாக இந்துக் கோயில் விக்கிரகங்களுக்குச் சொல் லுவதுபோல் திரு. பனகல் அரசரவர்களை மூல விக் கிரகம் என்று சொன்னால், திரு. இராமசாமி  முதலியாரை உற்சவ விக்கிரகம் என்று சொல்லலாம். இவ்வளவு தூரம் அவர்கள் இரண்டறக் கலந்து ஒன்றாக நமது நாட்டினுடைய நன்மையைக் குறித்து, நம் முடைய மக்கள் சுயமரி யாதையைக் குறித்து மனமாரப் பாடுபட்டவர்கள். அப்பேர்ப்பட்ட ஒருவர் அப்பெரியாருடைய படத் திறப்பு விழாவிற்குத் தலைமை வகிப்பது மிகவும் பொருத்த மானது. அதிலும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்துணையோ அவசரக் காரியங்களினிடையே இக்காரியத்தைச் செங்கற்பட்டு போர்டாரவர்கள் கேட்டுக் கொண்டவுடனே - யாதொரு விதமான ஆட்சேபணையும் சொல்லாமல் உடனே இன்றைய தினம் விஜயம் செய்து, இந்தக் காரியத்தை நடத்தித் தலைமை வகித்ததற்கு, செங்கற்பட்டு போர்டின் சார்பாகவும், காலஞ் சென்ற தலைவர் அபிமானத் தால் நன்றி செலுத்திய மக்கள் சார்பாகவும் என்னுடைய மனமார்ந்த நன்றியறிலைச் செலுத்துகிறேன்.
(திராவிடன் 18.2.1929).
செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.
நீதிக்கட்சியின் குறிப்பிடத் தக்க பெருந்தூண்களுள் ஒரு வர் ஏ.ஆர். முதலியார் அவர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டம் பற்றி சிறந்த அறிக்கையைக் கொடுத்த மேதையும் இவரே!
டாக்டர் டி.எம். நாயரின் மறைவிற்குப்பிறகு ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியராக எட்டு ஆண் டுகள் இருந்து அவர் எழுதிய  தலையங்கங்கள் காலத்தை வென்று நிற்கக் கூடியவை.
அவரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் கொண்டாடிய போது அவர் எழுதிய தலையங்கங்களைத் தொகுத்து  (‘‘Mirror of the Year’’)   என்ற தலைப்பில் வெளியிட்டது.
சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது, வெள்ளுடைவேந்தர் தியாகராயர் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியவர்.
இரயில் நிலையங்களிலும், வண்டிகளிலும் பிராமணாள் இதராள் என்று இருந்த பேதம் ஒழிக்கப்படுவதற்கு - இரயில்வே போர்டு உறுப்பினராக இருந்த ஏ.ஆர். முதலியார் காரணமாக இருந்தார் என்பது பெருமிதத் திற்குரியது. அய்க்கிய நாடு களின் பொருளாதார மற்றும் சமூகக் கழகத்தின் முதல் தலை வராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இவர். இலண்டன் வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர்.
சுதந்திர இந்தியாவில் ஆளுநராக இவரை நியமிக்க அரசு முன்வந்தபோது அதனை ஏற்க மறுத்தவர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலையை இவர்தான் திறந்து வைத்தார். 89ஆம் வயதில் இந் நாளில் தான் (1976) மறை வுற்றார்.
இரட்டையர்களான இராம சாமி முதலியார், இலட்சுமண சாமி முதலியார் இருவரையும் அடையாளம் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமை! - மயிலாடன்





இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...