Monday, July 30, 2012

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 80


நமது இயக்கத்துக்குத் தவறான நோக்கங்கள் கற்பிக்கப்பட்டு, பார்ப்பனர் கள் மீது துவேஷம் கொண்டிருப்பதாக நம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்பதுடன், சில்லறைத்தனமானதுமா கும். தங்களுக்குத் தனியாக பிரதி நிதித்துவம் வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரியபோது, அவர்கள் இந்துக்களை வெறுத்தார்களா?
உருவாக்கப்பட உள்ள கவுன்சிலில் பெரும்பகுதியினர் இந்தியர் களாக இருக்க வேண்டும் என்று இந்தி யர்கள் கேட்டபோது, ஆங்கிலேயரை அவர்கள் வெறுத்தார்களா? அவையில் அதிகாரிகள்  உறுப்பினர்களின் எண் ணிக்கை பாதியிலிருந்து அய்ந்தில் ஒரு பாகமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் அல்லாத உறுப் பினர்கள் கோரிய போது அதிகாரி உறுப்பினர்களை அவர்கள் வெறுத் தார்களா? இல்லை என்றால், நம் மீது மட்டும் இந்த வெறுப்புக் குற்றச்சாட்டு ஏன் சுமத்தப்படுகிறது?
இத்தகைய குற்றச் சாட்டுகள் நமது நோக்கத்தை எட்டுவ திலிருந்து நம்மை தடுத்து நிறுத்தி விடப்போவதில்லை என்பதை நமது எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றே தோன்றுகிறது. பொதுப் பணிகளிலும், சட்டக் கவுன்சில்களிலும் தாங்களே ஏகபோக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பார்ப்பனர்கள் விரும்பு கின்றனர் என்ற எண்ணத்தையே, இத்தகைய தடைசெய்யும் தந்திரங்கள் நம் மனங்களில் ஏற்படுத்தும். எவர் மீதும் நமக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. நமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே நாம் விரும்புகிறோம்.
நம்மை நாமே உயர்த்திக் கொள்ளவே நாம் முயல்கிறோமே அன்றி, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க முயலவில்லை.  ஒரு நடைமுறை மீதே, தற்போதுள்ள வாக் குரிமை, சட்டமன்ற அமைப்புகள் என்ற நடைமுறை மீதே நாம் தாக்குதல் நடத் துகிறோம்.  எந்த ஒரு தனிப்பட்டவர் மீதோ, ஒரு சமூகத்தின் மீதோ எந்தக் குறையையும் நாங்கள் கூறவில்லை. எங்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந் தால்,  1892 மற்றும் 1909 ஆம் ஆண்டு களில் அறிமுகப்படுத்தப்பட்ட நடை முறையைத் தொடர்ந்து இயல்பாக ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர் பார்த்து அவற்றைத் தவிர்க்க நடவடிக் கைகள் மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்பதுதான் அந்தக் குறை. இத்தகைய பின்விளைவுகள் மிகவும் மோசமான வைகளாக ஆகவில்லை என்பதில் அய்ய மேதுமில்லை.
சட்டக் கவுன்சில்களை பெரும் அளவில் விரிவுபடுத்தும் திட் டத்தை அறிமுகப்படுத்தி, இந்தக் கவுன்சில்களுக்கு நிருவாகக்கட்டுப்பாடு மற்றும் வரி விதிக்கும் அதிகாரங்களை அதிக அளவில் அளிக்கத் திட்டமிடும் போது,  இத்தகைய அதிகாரங்களால் பாதிக்கப்படக்கூடிய  மக்கள் தங்களுக்கு வர உள்ள ஆபத்துகளைக் கண்டு அஞ்சி, அத்தகைய அதிகாரங்கள் தங்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வகையில் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோருவது இயல்பானதேயாகும்.
ஆங்கிலோ இந்தி யர்கள் அதிகாரத்தில் இருந்தபோது,  நிருவாகிகளுக்கு சுயநலம் என்று எதுவும் இல்லாமல் இருந்ததாலும், இயல்பாக ஒரு தலை சார்பாக ஆதரவு காட்டச் செய்யும் உள்ளூர் மக்களுடனான தொடர்புகள் அவர்களுக்கு  இல்லாமல் இருந்ததாலும்,  அவர்கள் ஒருதலை சார்பாகச் செயல் படாமல் நடுநிலை வகித்தார்கள் என்ற ஒரு பாதுகாப்பு மக்களுக்கு இருந்தது. அதற்கு மாறாக,  மற்ற சமூகங்களின் நலன்களுடன் மோதல் போக்கைக் கொண்டுள்ள நலன்களைப் பெற்றுள்ள ஒரு சமூகம் பெரும் அதிகார நிலைக்கு உயருமானால்,  மற்ற சமூக மக்களின் முன் னேற்றத்தை விட, தனது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திலேயே அந்த சமூகம் அதிக அக்கறையும், ஆர்வமும் இயல்பாகவே கொண்டிருக்கும் என்பதால், ஒரு தனிப்பட்ட சமூகத்தின் கைகளில் இவ்வாறு அதிக அளவு அதிகாரங்கள் குவிக்கப்படுவது பற்றி மற்ற சமூக மக்கள் அச்சம் கொள்வது இயல்பேயாகும்.
ஹங்கேரியின் வரலாற்றை நாம் படித்ததில்லையா? அந்த நாட்டில் மாக்யார்கள்  ஆற்றிய செயல்களைப் பற்றி நாம் அறிந்திருக்கவில்லையா? அவர் களின் கைகளில் அதிகாரங்கள் குவிக் கப்பட்டதே அந்நாட்டின் அழிவுக்குக் காரணமாக ஆகிவிடவில்லையா? இத் தகைய ஒரு நிலை நம் நாட்டிலும் ஏற்படுவதற்கு நாம் அனுமதிக்கலாமா? அப்படி இல்லையென்றால், ஒரு அதிகார மற்றும் செல்வாக்கு சமநிலையை உரு வாக்க மட்டுமே நாம் முயலும்போது, தவறான நோக்கங்களை நமது முயற் சிக்குக் கற்பிப்பது ஏன்? பழைய ரணங் களைக் கிளற வேண்டும் என்பது நமது விருப்பமல்ல. அதனால் எந்த ஒரு நல்ல பயனும் ஏற்படப் போவதில்லை.
ஆனால், தங்களின் சொந்த நலன்களைப் பாது காத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை ஏதேனும் ஒரு வழியில் முறியடிக்க முனையும்போது,  கடந்த கால வரலாறு திரும்புகிறது என்ற உண்மையையே அது உணர்த்துகிறது. சமூக அடிப்படையில் ஒரு திட்டத்தை உருவாக்குவது கடினமான செயலாகவும் இருக்கக்கூடும். என்றாலும், அத்தகைய ஒரு திட்டத்தில் இருந்து தப்பிச் செல்வது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல.  எந்த வகையிலும் நாம் அதனை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
பின்னர் நெல்லூரைச் சேர்ந்த ஒரு செல்வந்தரான நிலச்சுவான்தாரரான திரு. கே.ஆதிநாராயணரெட்டி மாநாட்டுக் குத் தலைவராக திரு. தியாகராய செட்டி யார் அவர்களை முறைப்படி முன்மொழிய, உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், பெர் ஹாம்பூர் நகர்மன்றத் தலைவருமான  திரு. ஏ.பி.பட்ரோ வழிமொழிந்தார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...