Wednesday, July 25, 2012

சிலை திருட்டுகள்


இந்தியா முழுமையும் கோயில் சிலை திருட்டு கள் நடந்துகொண்டு இருக்கின்றன;  குறிப்பாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் விலையுயர்ந்த சாமி சிலைகள் உண்டு. அவற்றில் பல அய்ம்பொன் சிலைகள். இந்தச் சிலைகள் திருடப்பட்டு வெளி நாடுகளில் கொழுத்த விலையில் விற்கப்படு கின்றன.
நெடுநாள் திருடன் இப்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிலை களைத் திருடுவதற்கு உள்ளூர் ஆள்களைக் கைக்குள் வைத்துள்ளனர். ஒரு சரியான வலைப் பின்னலுடன் சிலை திருட்டு கைதேர்ந்த கலையாக - தொழிலாக நடத்தப்பட்டு வருகிறது.
கோயில் அர்ச்சகர்களே சிலைகள் திருடப் படுவதற்கு உடந்தையாக இருப்பதும் உண்டு. போலிச் சிலைகளை வைத்துவிட்டு மூலச் சிலை களைக் கடத்திக் கொண்டு சென்று விடுவதும் உண்டு.
எது போலி, எது ஒரிஜினல் என்பது யாருக்குத் தெரியும்? வெளிநாடுகளில் இந்திய பழங்கால சிலைகளுக்குக் கிராக்கி அதிகம். அய்ம்பொன் னால் செய்யப்பட்டது என்பதற்காக மட்டும் அல்ல - அவை நடனமாடுவது போலவும், நான்கைந்து கைகளைக் கொண்டதுபோலவும் இருப்பது அவர்களைப் பொறுத்தவரை ரசிக்கத்தகுந்த தாகவே கருதி, வீட்டின் வரவேற்பறையில் வைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் சிவபுரத்து நடராசன் கையில் இருந்த ஒரு தட்டு, சிகரெட் புகையின் சாம்பலைத் தட்டுவதற்குப் பயன்பட்டதும் உண்டு.
சிலை திருட்டைப்பற்றி எல்லாம் பக்கம் பக்கமாகச் செய்திகளைப் படத்துடன் வெளியிடும் ஏடுகள், இதழ்கள், இந்தக் கடவுள் சிலைகளுக்கு ஏதும் சக்தியில்லை; அவை வெறும் பொம்மைகள் - இவற்றைத்தான் நம் நாட்டு மக்கள் சக்தியுள்ள சாமிகள் என்று வழிபடுகின்றனர் என்று
ஒரு வரி எழுதுவதில்லையே - ஏன்?
கல்லோ, உலோகமோ தான் இவை - இவைகளுக்கு ஏது சக்தி என்று நாத்திகர்கள் சொல்லும்பொழுது என்ன சொல்லுகிறார்கள் இந்த ஆஸ்திக சிகாமணிகள்?
நீங்கள் சொல்லுவது உண்மைதான் என்றாலும், அவற்றுள் மந்திரம் செலுத்தி சக்தி ஊட்டப்படு கிறது என்றுதானே சொல்லி வந்தனர். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்தச் சாமி சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கப்படுகின்றனவே - அப்பொழுது அந்தச் சாமி சக்தி எங்கே போனது? என்ற கேள்விக்கு அறிவு நாணயமாகப் பதில் சொல்லவேண்டாமா?
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்துள்ளனரே - அதற்கெல்லாம் எவ்வளவுப் பெரிய சக்தி உண்டு, அருள்பாலிக்கும் திறனுண்டு என்றெல்லாம் கத்தைக் கத்தையாக எழுதி வைத்துள்ளார்களே - அவை எல்லாம் உண்மையல்ல - சுத்த பொய் மூட்டை என்பது இப்பொழுது அம்பலம் ஆகிவிடவில்லையா? இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் கூட கோயில்களுக்கு மக்கள் செல்லுவது அசல் மடத்தனமும், பைத்தியக்காரத்தனமும் அல்லவா!
ஒன்றுக்கும் உபயோகமற்ற இந்தப் பொம்மை களைக் கருவறைக்குள் அடித்து வைத்துக் கொண்டு மக்களைச் சுரண்டுகிறார்களே - அதுபற்றி மறு சிந்தனை தேவைப்படவில்லையா?
இந்தச் சொத்துக்களைப் பயன்படுத்தி மக்களுக்குக் கல்விக் கூடங்களைத் திறக்கக் கூடாதா? வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாதா?
கடவுளை மற, மனிதனை நினை என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறிய கருத்து எவ்வளவு உயர்ந்தது - மனிதநேயமிக்கது என்பதை உணர்ந்து பார்க்கவேண்டாமா?
யாரோ கொள்ளை அடிப்பதற்கும், யாரோ பிழைப்பதற்கும் பயன்படுவதற்குப் பதிலாக வெகுமக்களுக்குப் பயன்படும்படிச் செய்வதுதான் ஒழுக்கமும், நேர்மையும், பொறுப்பான சிந்தனையுமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...