Monday, July 16, 2012

உ.பி.யில் பா.ஜ.க., தந்திரம் ஜாதி வாலைப் பிடித்துத் தொங்கிடத் திட்டம்


புதுடில்லி, ஜூலை 16- பார்ப்பனர்- பனியா - தாகூர் ஜாதிக் கூட்டணியின் மூலம் உத்திரப் பிரதேச மாநில ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு கண்ட பாரதீய ஜனதா கட்சி இப்போது வேறு விதமான ஒரு ஜாதி கூட்டணி அரசியல் செய்ய திட்டமிட்டுள்ளது.
யாதவர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமூகத்தினருக்கு மாநிலக் கட்சியின் அனைத்து நிலைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் அளிப்பது என்ற முடிவுக்கு இக்கட்சி உள்ளதாம். சமூ கத்திலும், கல்வி நிறுவன சேர்க்கை களிலும், வேலை வாய்ப்புகளிலும் இந்த சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித் துவம் அளிப்பதை எதிர்க்கும் பா.ஜ.கட்சி தனது அரசியல் லாபத் துக்கு மட்டும் அவர்களுக்கு பிரதி நிதித்துவம் தரப்போவதாக நாடகம் ஆடத் திட்டமிட்டுள்ளது.
ஏமாறுவார்கள்
விபீஷணர்களும் இவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து அவர்களுக்கு முட்டுக் கொடுக்க முன்வருவார்கள். ஆனால் அவர் களின் உதவியைப் பெற்றுக் கொண்டு பதவிக்கு பா.ஜ.க. வந்துவிட்டாலும், ஆட்சியிலோ அல்லது அதன் திட்டங்களின் பயன்களிலோ இந்த மக்களுக்கு உரிய பங்கு நிச்சயமாக அளிக்கவே மாட்டார்கள்.
தொடர்ந்து உத்திரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. சரிவை சந்தித்து வரும் நிலையில் தனது ஜாதி அரசியலை மாற்றிக் கொள்ள அது முன்வந்துள்ளது. 2007 இல் 17 விழுக்காடு வாக்குகள் பெற்று 51 சட்டமன்ற இடங்களில் வெற்றி பெற்ற  பா.ஜ.க., 2012 இல் 15 விழுக்காடுகள் வாக்குகள் பெற்று 47 சட்டமன்ற இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
அமைப்புகள் கலைப்பு!
இப்போது இக்கட்சி இம்மாநி லத்தில் உள்ள மாநில, மாவட்ட, நகர கட்சி அமைப்புகளைக் கலைத்து விட்டது.  அனைத்து நிலைகளிலும் யாதவர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், முஸ்லிம் சமூகத்தின ருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும், வட்டங்களிலும்  உள்ள ஜாதி வாரியான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பற்றி பட்டியல் தயாரித்து அளிக்கும்படி கேட்டுள் ளது. அவ்வாறு பட்டியல் தயாரிக் கும்போது சரியான ஜாதி கூட்டணி பற்றிய கருத்தையும் மனதில் கொள்ளவேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. மாநிலத்தில் கட்சியின் பல்வேறுபட்ட நிலைகளில் உள்ள பொறுப்புகள் இவர்களுக்கு அளிக்கப் படும்.  2014 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலுக்கு கட்சியை வழிநடத்திச் செல்ல இயன்ற இளம் தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாம். காங்கிரஸ், சமாஜ் வாடி கட்சிகளைப் பார்த்து பா.ஜ.க. சூடு போட்டுக் கொள்கிறது போலும்.
ஒரு வட்டத்தில், செல்வாக்கு மிகுந்த காயஸ்த அல்லது யாதவ தலைவர் ஒருவராவது நமது குழுவில் இடம் பெற்றிருக்கவேண்டும். அதே போல கட்சியின் அனைத்து நிலை களிலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் சரியான பிரதிநிதித்துவம் அளிக் கப்படவேண்டும். பா.ஜ.கட்சி ஒரு ஜாதியின் ஆதிக்கத்தில் இருப்பது போன்ற தோற்றம் அளிக்கக்கூடாது என்று மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனராம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...