Sunday, July 15, 2012

ஜாதிப் பிடியில் பாரதீய ஜனதா கட்சி


பெங்களூரு, ஜூலை 15- இந்துக்களுக்கும், முஸ் லிம்களுக்கும் இடையே பகையை வளர்த்து அதில் முளைவிட்டது தான் பாரதீய ஜனதா கட்சி. இன்று அக்கட்சி, ஜாதி அரசியலுக்குள் சிக்குண்டு தவிக்கிறது.
ராஜஸ்தானில் தொடர்ந்து ஆட்சி அமைத்து வந்தது பார தீய ஜனதா. அம்மாநி லத்தின் குஜ்ஜார்களும், ஜாட்டுகளும் இரு பெரும் சாதி பிரிவுகள். அரசின் நலன்களை எல்லாம் ஜாட்டுகள் அனுபவித்து வந்தனர். இதனால் குஜ்ஜார்கள் அரசிடம் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினர்.  இப்போராட் டத்துக்கு எதிராக ஜாட் டுகள் கலவரம் செய் தனர். குஜ்ஜார்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று பிடி வாதம் காட்டினர். குஜ் ஜார்களின் போராட்டம் வலுத்ததால் வேறு வழியின்றி ராஜஸ்தான் பாரதீய ஜனதா அரசு 2008ஆம் குஜ்ஜார் களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது. அடுத்து வந்த சட்டமன்ற தேர் தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்தது.
கருநாடகம்
அதுபோல், இப் போது கர்நாடகாவிலும் பாரதீய ஜனதாவிற்கு பிரச்சினை வெடித் திருக்கிறது. பாரதீய ஜனதா முதன்முறையாக கர்நாடகத்தில் ஆட் சியைப் பிடிக்க, எடி யூரப்பா கர்நாடகாவின் முதலமைச்சர் ஆனார். அவர்மீது சுரங்க ஊழல் முதல், குடும்பத்தின ருக்கு அரசு நிலங்களை மலிவான விலையில் விற்றதுவரை பல வழக் குகள் உள்ளன. இவ்வழக் குகள் சம்பந்தமாக எடி யூரப்பா கைதாகி சிறைக் குச் சென்றார். அப் போது அவருக்கு பதி லாக சதானந்தா கௌ டாவை பாரதீய ஜனதா முதல்வராக்கியது. எடியூரப்பா இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இப்போது கௌடாவை இறக்கிவிட்டு தனக்கு மீண்டும் முதல்வர் பதவி தர வேண்டும் என்று அடம் பிடித்தார். பார தீய ஜனதா தலைமை அதை ஏற்கவில்லை. எடியூரப்பாவை பல வாறாக சமாதானப்படுத் திப் பார்த்தது. அவர் மசியவில்லை. தனக்கு இல்லாவிட்டாலும் தனது ஜாதிக்காரர் ஒருவர் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். எடி யூரப்பா லிங்காயத்துகள் ஜாதியைச் சேர்ந்தவர். லிங்காயத்துகள் கர்நா டகாவின் பிரதான ஜாதியினர். பாரதீய ஜனதாவில் பலரும் இந்த லிங்காயத்துகள்தான்.
இப்போது வேறு வழியின்றி சதானந்தா கவுடாவை இறக்கி விட்டு லிங்காயத்துக்காரரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக் கியுள்ளது. கர்நாடகாவின் மற் றொரு ஜாதியான ஒக் கலிக்கர் சமுதாய மக் களை திருப்திபடுத்த, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அசோக் என்ப வரை துணை முதல்வ ராக்கியுள்ளது. பாரதீய ஜனதா  இவ்வாறாக ஜாதி பிரிவுக்குள் சிக்கிக் கொண்டு கர்நாடகத்தில் பாரதீய ஜனதா திக்கு முக்காடுகிறது.
புதிய முதல்வருக்கும் சிக்கல்
இந்நிலையில் பதவி யேற்று 2 நாட்கள் ஆகியும் புதிய அமைச் சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள தால் கட்சி மேலிடத்தின் ஒப்புதலை பெற முதல் வர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று டெல்லி சென் றுள்ளார்.
இதற்கிடையில் அமைச்சர் பதவி கிடைக் காத சீனிவாச ஷெட்டி மற்றும் அங்கரா ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜி னாமா செய்யப் போவ தாக மிரட்டியுள்ளனர். துறை ஒதுக்குவதில் சிக்கல், அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க் களின் மிரட்டல் ஆகிய வற்றால் முதல்வராக பதவியேற்ற ஜெகதீஷ் ஷெட்டருக்கு இரண்டு நாட்களிலேயே நெருக் கடி ஏற்பட்டுள்ளது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...