Monday, July 23, 2012

சிங்களர்களால் 23 மீனவர்கள் சிறைபிடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்


ராமேசுவரம்,ஜூலை 23-ராமேசுவரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளுடன் 23 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறும்போது  :-

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்து இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும், 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று (22 .07 .2012) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று உள்ளனர்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

JULY 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...