Thursday, June 28, 2012

கேப்டனிடம்ஒருகேள்வி!


சட்டசபைக்கு  விஜய்காந்தை வரச்சொல் என்கிறார்கள். நான் வந்தால் பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தைக் குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கிற ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் இப்படிச் சொன்னவர் கவுண்டமணியோ, செந்திலோ, விவேக்கோ, வடிவேலோ அல்ல.
வெள்ளித் திரையில் கொடிய வர்களைப் புரட்டி எடுக்கும் ஹீரோ கேப்டன் விஜய்காந்த்தான்! 18-.5.-2012 தினமலர் மதுரை பதிப்பு நாளிதழ் கட் டம் கட்டி செய்தியை வெளியிட் டிருக்கிறது.
கானல் வெளியை நீர் என நம்பிக் காலம் தள்ளும் பேதமை, ஒரு கட்சியின் தலைவரைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துவதை பகுத்தறிவாளர் களால் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? சகித்துக் கொள்ள முடியும்?
முதன் முதலில் தேர்தல் களத்தில் இவர் குதித்தபோது எனக்கும் கடவுளுக்கும்தான் கூட்டு என்று சொல்லி நகைச்சுவை விருந்தளித்தார்.
எந்தெந்த தொகுதிகளை இவரும் கடவுளும் பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படாமலே அந்தத் தேர்தல் நடந்து முடிந்தது. விருத்தாசலம் தொகுதியில் இவர் மட்டுமே வெற்றி என்ற செய்தி வந்தது. கடவுளின் கூட்டணி அன்றோடு கரைந்து போனது.
இன்று நாள்தோறும், எல்லா மாவட்டங்களிலும் காய்ச்சலால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் செத்துக் கொண்டிருக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. டெங்கு, டைபாய்டு, மலேரியா, பறவை, பன்றி என காய்ச்சலில்தான் எத்தனை வகை! இவற்றை அழித்து ஒழிக்க அறிவியலும், மருத்துவமும்தான் போராடிக் கொண்டிருக்கின்றன.
மேலே இருப்பவனால் வேடிக்கை பார்க்கத்தான் முடியும் போலும்! கடவுள் நம்பிக் கையில், ஜோதிட நம்பிக்கையில் விஜயகாந்துக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா! நேரில் வந்து உதவத்தான் யோக்கியதை இல்லை. முதல்வரின் கனவில் தோன்றியாவது கட்டணங் களை உயர்த்தக் கூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்தியிருக்கலாமே கடவுள். ஏன் செய்யவில்லை?
கேப்டன் அவர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேயாக வேண்டும். உங்கள் பார்வையில் அடல்ஸ்ஒன்லி கேள்வியாகக் கூட அது இருக்கலாம். மன்னித்துவிடுங்கள். இதோ கேள்வி:
மேலே இருந்து இங்கே நடப் பதையெல்லாம் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்க நாம் அனுமதிக்கலாமா? அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? இதனால் நம்முடைய சுதந்திரமும் ஆளுமையும், உரிமையும் கேள்விக் குறி ஆகாதா? பட்டப் பகலில் பகிரங்கமாக நடப்பவைகளை மட்டும்தான் பகவானால் பார்க்க முடியுமா?
அர்த்த ராத்திரியில் அடைக்கப்பட்ட நம் வீடுகளில், தாழிடப்பட்ட படுக்கை அறைகளில் நிகழும் அந்தரங்கங் களையும் கண்டுகளிக்க அவனால் முடியுமா? விளக்குகள் அணைக்கப் படுகிறதே முன் எச்சரிக்கையினாலா? இறைவனது பார்வைக்குப் பயந்துதான் இப்படி நடக்கிறதா? இருட்டறையில் உள்ள உலகத்தைப் பார்க்க அவனால் முடியாது என்றால் எல்லாம் வல்லவன் என்பது வடிகட்டிய பொய்தானே?
உண்மையில் நீங்கள் ஓர் மனித நேயர் என்றால் தந்தை பெரியார் காட்டிய வழிக்குத்தான் வந்திருப்பீர்கள். மனிதனை முழுமனதோடு நினைக்க, நேசிக்க வேண்டுமானால், கடவுளை நீக்கியாக வேண்டும்.
அதைத்தான் கடவுளை மற; மனிதனை நினை என்று நமக்குக் கற்றுத் தந்தார் பகுத்தறிவுப் பகலவன் நம் பெரியார்.
- சிவகாசி மணியம்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
<< முன்புஅடுத்து >>



JULY 01-15

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...