Tuesday, April 24, 2012

பொருத்தமா புளுகுங்கடா - அட போக்கத்தப் பசங்களா?


திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களைச் சம்பந்தப்படுத்தி இவ்வாரம் வரதராஜ அய்யங்காரின் வார ஏடான குமுதம் ரிப்போட்டரில் வம்பானந்தா என்ற பெயரில் ஒரு கயிறு திரித்து, புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டி, துளிகூட உண்மை கலப்பில்லாத ஒரு செய்தியை இவ்வார பொய்யை மூலதனமாக்கி, காசு சம்பாதிக்கப் புறப்பட்டிருக்கிறது.
தி.மு.க.வில் ஏற்பட்டுள்ளதாக ஏடுகளால் வர்ணிக்கப்படும் செய்திகளைக் கண்டு, அதுபற்றி தி.மு.க. தலைமை கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தும் வகையில், தந்தை பெரியார் சிந்தனை வயப்பட்ட நிலையில் அறிக்கை விடுத்தார் கழகத் தலைவர் கி.வீரமணி.
இதற்கு முன்னர் ஒரு வார காலம் அவர் மலேசியா, சிங்கப்பூர் நிகழ்வுகளுக்குச் சென்று 20.4.2012 அன்று தான் சென்னை திரும்பினார். 21ஆம் தேதி சென்னை விடுதலை அலுவலகத்தில் இருந்த நிலையில் மேற்காட்டிய அறிக்கையை விடுத்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் அவர் தி.மு.க. தலைவரையோ, பொதுச் செயலாளரையோ, வேறு எந்த தி.மு.க. பொறுப்பாளரையோ சந்திக்கவும் இல்லை; தொலைப்பேசி வாயிலாகக் கூடப் பேசியதும் இல்லை.
அப்படியிருக்க, ஏதோ அவர் பேராசிரியரைப் போய்ப் பார்த்ததாகவும், பிறகு கலைஞரிடம் சொன்னதாகவும், கலைஞர் அறிக்கைவிடச் சொன்னதாகவும் தம் மனம்போன வாக்கில் புளுகித் தள்ளியிருக்கிறது அய்யங்காரின் அக்கிரகார வ(ம)யமான வக்கிர வார ஏடு!
அய்யங்கார் சுவாமிகளோ, அவரின் மாமா ஆனந்தாக்களை இப்படி மேய விட்டு, கயிறு திரித்து காசு சேர்ப்பதைவிட வேறு சில லாபகரமான தொழில் செய்து கோடிகளைச் சேர்க்கலாமே -- அட வெட்கங்கெட்ட பூணூல்  புளுகர்களே!
உடுமலைக்கவிராயர் எழுதினார்:
பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாச் சொல்லுங்கடா - அடப்போக்கத்தப் பசங்களா? என்று.
அந்தப் பாட்டு வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
21ஆம் நூற்றாண்டிலேயே இப்படி என்றால் முந்தைய புராணப் புளுகுகள் எப்படி உருவா யிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியுமே!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...