Saturday, April 14, 2012

பாய்ந்து வரும் பகை நெருப்பு! - (1)


- மின்சாரம்
கேள்வி: தமிழ் மொழியைச் செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்.
(தினமலர் வாரமலர் 13-.6-.2004)
விளம்பரப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று சென்னை மாநகரமேயர் வணக்கத் துக்குரிய மா.சுப்பிரமணியம் அவர்கள் முயற்சி செய்தார். அவரே கடை வீதிகளுக்கு வந்து தமிழில் எழுதப் படாத கடைக்காரர்களுக்கு வேண்டு கோள் விடுத்தார்.
இதுபற்றி துக்ளக் 15.-9.-2010 என்ன எழுதியது?
தமிழை வளர்க்கிறோம் என்று அரசு நிருவாகத்தில் புகுந்து குட்டிச் சுவராக்கும் இவர்களை மொழி நக்ச லைட்டுகள் என்றுதான் கருத வேண்டும்.
முதல்வரே தமிழைச் சொல்லி ஏமாற்றுகிறவராக இருப்பதால், சென்னை மேயர் முதல் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வரை தமிழை அமல்படுத்துகிறோம் என்று கம்பு, கடப்பாரை சகிதம் கிளம்பி விடுகிறார்கள். துப்பாக்கிகள் ஏந்துகிறவர்கள்தான் தீவிரவாதிகள் என்பதல்ல. இது போல நடைமுறைக்கு ஒவ்வாத மொழி வெறி பிடித்து அலைகிறவர்களும், அந்த மொழி வெறியைத் தங்கள் அதிகாரத்தின் மூலம் ஜனங்கள் மீது திணிக்கிற வர்களும் தீவிரவாதிகள்தான். இவர்கள் மொழி நக்சலைட்டுகள்.
(துக்ளக் 15-.9.-2010)
சென்னை மாநகர மேயர், குழந்தைகளுக் குத் தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளர்ந்துவிடும் என்று நம்புகிறார். குழந்தைக்குத் தமிழில் பெயர் வைத் தால் தங்கம் பரிசாகத் தருகிறார்.
இவர்கள்தான் பக்தர் களின், குறிப்பாக ஹிந்து பக்தர்களின் நம்பிக்கை களை, மூடநம்பிக்கை கள் என்று கேலி செய்கின்றனர். ஆனால் சினிமா படங்களுக்கும், குழந்தை களுக்கும் தமிழில் பெயர் வைத்தால், தமிழ் வளர்ந்துவிடும் என்பது மட்டும் பகுத்தறிவாகி விடுகிறதாம்.
அப்படியானால் தமிழ்நாட்டுக் குழந்தைக்கு கிளாட்ஸ்டோன்  என்றும், தமிழ்ப்படத்துக்கு ஆங்கிலத் தில் ரோபோமேன் என்றும் பெயர் வைத்தால் ஆங்கில மொழி வளர்ந்து விடும் என்றும் கூறலாமே. என்ன பேத்தல் இது? பெரியார் வழி வந்த பகுத்தறிவு மடத்தின் மூடநம்பிக்கை தான் இது.(துக்ளக் 10-.11.-2010 பக்கம் 15)
தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட் டோம்.        (துக்ளக் 23.-6.-2010)
கேள்வி: தமிழை வைத்து எத்தனை விதங்களில், என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?
பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை? நிறைய வாய்ப்பிருக்கிறது. கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு, கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு என்று எவ்வளவோ விழாக்கள் நடத்தலாமே! கலைஞர் ரெடி, தமிழ் ரெடியா?      (துக்ளக் 4-.8-.2010)
மொழி ஆர்வமா? மத துவேஷமா?
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருதத் துதி களை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும் - புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு
(துக்ளக் 18-.11.-1998)
ஆனந்த விகடன் என்ன சொல்லு கிறது?
விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மக்களைத் திசை திருப்பும் பழைய வார்த்தைதான். (ஆனந்தவிகடன் 8-.11.-1998)
செம்மொழி, மஞ்சள் மொழி, பச்சை மொழி என்று சொல்லி கற்காலத்துக்கு தமிழ் ஜனங்களை அழைத்துச் செல்வதில் குறியாக அலைகின்றனர்.
(துக்ளக் 15-.10-.2008)
கேள்வி:  தமிழக மக்கள் ஹிந்தி மொழி படிப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று கழகங்கள் அஞ்சுகின்றன?
பதில்: மொழிப் பற்று என்பதை வெறி என்ற சுவராக எழுப்பி, தமிழர்களில் ஒரு பகுதியினரையாவது நாம் இந்தியர்கள் என்பது இரண்டாம் பட்சமே என்று நினைக்க வைத்த கழக சாதனை அழிந்துவிடுமே! அந்த பயம்தான் கழகங்களின் அச்சத்திற்குக் காரணம்.    (துக்ளக் 21-.3-.2003)
பார்ப்பனர்கள் தமிழர்களே என்று கூறும் தமிழர்களை இதற்குப் பிறகும் என்னவென்று அழைக்கலாம்?
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பார்வையில் பார்ப்பனர்களின் தொடையில் உட்கார்ந்து கொண்டி ருக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எந்த அடைமொழியைக் கொடுக்க லாம்?
பார்ப்பன ஊடகங்கள் அத் தனையும் நேர்க்கோடு கிழித்தது போல தமிழ் என்று சொன்னாலே ஒவ்வாமை எனும் நோயால் தாக்கப்பட்டு லொக்கு லொக்கு என்று இருமுகிறார்களே - இதற்குப் பின்னும் பார்ப்பனர்களை எடை போடத் தயக்கம் ஏன்?
நீண்ட காலமாக சூத்திர மக்களாக வாழ்ந்து தொலைத்துவிட்டோமே - அந்த அடிமைத்தனத்தின் ஜீவ சுபாவம் இன்னும் நம் மக்களை விட்டு அகலவில்லையா?
தமிழைப்படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூடப் போக முடியாது என்று எழுதி, அதனைத் தமிழில் எழுதி விற்றுப் பிழைக்கும் கூட்டம் தான் இப்படி எழுதுகிறது.
விளம்பர நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்று சொன்னால் மொழி நக்ச லைட்டுகளாம்.
அப்படிச் சொல்லுகிறவர்கள் யார்? ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து அதற்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழுத பி.ஜே.பி. ஆட்சியின் பாதுகாவலர்கள்தான் இப்படி எழுது கிறார்கள்.
இவ்வளவுக்கும் அது ஒன்றும் உயிரோடு இருக்கும் மொழியல்ல - பேச்சு வழக்கு இழந்த செத்த மொழி.
பிணத்துக்குச் சிங்காரிக்கும் இந்த பித்த மனிதர்கள்தான் நம்மைப் பார்த்து மொழி நக்சலைட்டுகள் என்று பதற்றம் இல்லாமல் எழுதுகிறார்கள்.
கோவில்களில் தமிழ் வழிபாடு நடக்க வேண்டும் என்றால் அது துவேஷமாம்! அப்படி எழுதுகிறவர்கள் வழிபாடு சமஸ்கிருதத்தில்தான் இருக்க வேண்டும்; - சமஸ்கிருத ஒலிக்குத்தான் சக்தி என்று சாதிப்பவர்கள்தான் நம்மைப்பார்த்து மொழித் துவேஷம் என்று மொழிகிறார்கள்?
தமிழ் இருந்த இடத்தை ஆக்கிரமித்த சமஸ்கிருதவாதிகள் இப்படி எழுதுவதுதான் வேடிக்கை.
சோழர் காலம் வரை கோவில்களில் தமிழ்தானே வழிபாட்டு மொழியாக இருந்தது? இது பற்றி தமிழ்ப் பேரரசு களின் சரிவும் வீழ்ச்சியும் எனும் நூலில் முனைவர் அ.இராமாசாமி பின்வருமாறு கூறுகிறார்.
சோழர் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாகத் திகழ்ந்தது. அரசாங்க நடவடிக்கைகள் யாவும் தமிழிலேயே நடைபெற்று வந்தன. எனினும் வட மொழியைப் பரப்புவதிலும், வளர்ப்ப திலும் மன்னர்கள் ஆர்வம் காட்டினர். அதைத் தங்கள் பெருமையாகவும் கருதினர். தேவார ஆசிரியர்களின் காலத்தில் கோவில் கருவறைக்குள் ஒலித்த தமிழ் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. கருவறைக்குள் புகுத்தப்பட்ட வடமொழியே கடவுள் மொழியாகவும் கற்பிக்கப்பட்டது.
- என்று குறிப்பிடப்பட்டுள்ளதே (பக்கம் 42) வடமொழி வழிபாட்டு மொழியாக ஆக்கப்படாத காலத்தில், தமிழே வழிபாட்டு மொழியாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் தமிழின் ஒலி கடவுளுக்கு உகந்ததாக இருந்த தில்லையா? சமஸ்கிருதம் திணிக்கப் பட்ட பிறகுதான் அந்த ஒலியின் சக் தியை கடவுள் உள் வாங்கிக் கொண் டதா? செகதலப் பித்தலாட்டம் என்பார் களே, அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே  குத்தகைக்கு விடப்பட்ட ஒன்றாகும்.
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது என்று கற்பிக்கிறாரே. தமிழிலிருந்து ஸம்ஸ்கிருதத்தில் ஏன் மொழி பெயர்க்க வேண்டும்? அவர் கூறுகிறபடி பார்த்தாலும் கூட மொழி பெயர்க்கும்போது தானே அர்த்தம் இருக்கும் - அருள் இருக்காது.
தாம் விரும்புகிற ஓர் இடத்திற்கு இழுத்துச் சென்று அங்கே காவு கொடுக்க முனையும் தந்திரத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.
இவ்வளவுக்கும் இந்தப் பார்ப் பனர்கள் எங்கள் திருஞானசம்பந்தன் பாடிய பாட்டால் பாம்பு கடித்து சாவூருக்குச் சென்ற பூம்பாவை என்ற பெண் உயிர் பெற்றாள் என்று பீற்று வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
எந்த வகையில்    புரட்டிப் போட்டுப் பார்த்தாலும்,  பார்ப்பனர் களின் பக்கங்கள்எல்லாம் புரட்டும், பொய்களும்தான் போட்டி போட்டுக் கொண்டு திமிர் முறிக்கும்.
இந்தி ஏன் தமிழ்நாட்டில் எதிர்க்கப்படுகிறது? இந்தியர்கள் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானாம்.
இந்தியன் எங்கே இருக்கிறான்? காவிரி பிரச்னையில் இருக்கிறானா? முல்லைப் பெரியாறு பிரச்னையில் இருக்கிறானா?    சேது சமுத்திரத் திட்டத்தில்தான் இருக்கிறானா?
முப்பது கல் தொலைவில் இலங்கையில் நம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அய்யகோ, நம் இந்திய மக்கள் அல்லவா படுகொலை செய்யப் பட்டார்கள் - இது அநியாயம், அக்கிரமம்  என்று எந்த இந்தியன் எழுந்து குரல் கொடுத்தான்?
தமிழன் என்றால்தான் கசக்கிறது - இந்த சோ ராமசாமி அய்யர் கூட்டம் இந்தியன் என்ற பார்வையிலும் போர்வையிலுமாவது குரல் கொடுத்ததுண்டா?
அப்பொழுது மட்டும்  ஈழத்தில் அடிபடுவது, உதைபடுவது தமிழன் தான்; நன்றாக உதைப்படட்டும் என்ற எண்ணம்தானே இந்தப் பார்ப் பனர்களுக்கு ஏற்படுகிறது?
தமிழன் என்று சொல்லக்கூடாது, இந்தியன் என்று சொல்ல வேண்டும் எனும் பார்ப்பனர்கள் அந்த இந்தியன் படுகொலை செய்யப்படும் பொழுது, அந்த இடத்தில் இந்தியன் என்ற  நினைவு வராது - தமிழன் என்ற எண் ணமே தலை தூக்கும் இந்தப் பார்ப் பனர்களுக்கு. அந்த அளவுக்குத் தமிழன் என்றால் நஞ்சினும் கொடிய வெறுப்பு - எதிர்ப்பு.
அதே நேரத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் (பார்ப்பனர்கள்) பாதிக் கப்பட்டால் சோ அய்யர்வாள் எப்படி எழுதுகிறார்?
லட்சக்கணக்கான இந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது;. சொந்த நாட்டிலேயே - ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்தாலும் அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை.
(துக்ளக் 20-.8.-2008)
இதில் இன்னொரு திருகுதாளத் தையும் கவனிக்க வேண்டும்.
இந்தியர்களோடு இந்துக்கள் என்ற அடைமொழி வேறு. அதே பார்வை யில் ஈழத்துத் தமிழர்களை ஏன் பார்க்கக்கூடாது? அவர்கள் அவாள் பார்வையில் இந்துக்கள் அல்லவா?
எந்த வகையிலாவது ஈழத்தமிழர் களுக்குக் கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஏற்படவே ஏற்படாது; -காரணம் தமிழினத்தின் மீதான கடும் துவேஷமே!
தமிழை செம்மொழி ஆக்கினால் காவிரியில் தண்ணீர் வருமா? ஏழை வீட்டுக்கு மட்டன் பிரியாணி கிடைக் குமா என்று ஒரு தமிழன் வாயி லிருந்து வருமா? பார்ப்பான் வாயி லிருந்துதான் வரும் ;- காரணம் அவன் அந்நியன் என்பதே!
தமிழ் செம்மொழியானால், காவிரி யில் தண்ணீர் வரும் என்று யார் சொன்னது? செம்மொழி கோரிக்கை அதற்காகவா வைக்கப்பட்டது? தமிழ் என்னும் மொழியின் மீது கொண்ட கட்டுக்கடங்கா காழ்ப்பு நெருப்பு இந்தக் கைபர் கணவாய்க் கூட்டத்துக்கு இருப்பதுதானே இந்தச் சொல் லாடல்களுக்குக் காரணம்?
ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்தார்களே, அத னால் வயல்கள் எல்லாம் முப்போகம் விளைந்தனவா? தேனாறும், பாலாறும் அப்படியே பாய்ந்தோடினவா?
அறுபத்து மூவர் விழாவை மயிலையில் நடத்துகிறார்களே, மின்வெட்டு ஒழிந்து போய்விடுமா?
பார்ப்பன ஏடுகள் கேட்ட கேள்விகளை இந்தத் தமிழன் நடத்தும் ஏடுகள் கேட்க வேண்டாமா? கேட்கா விட்டாலும் பரவாயில்லை, இந்தத் தமிழ் ஏடுகள் அவாள் ஏடுகளு டன் சேர்ந்து கொண்டு அல்லவா ஆன்மீக சிறப்பு இதழ்களை வெளி யிட்டு தங்கள் இன இழிவுக்குக் கட்டியம் கூறுகின்றன.
இந்த இழிதன்மை தமிழரிடம் குடிகொண்டிருக்கும் வரை பார்ப்பன சுனாமி பதம் பார்க்காமல் விடுமா?
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...