Wednesday, March 7, 2012

ஏன் தோன்றியது திராவிடர் இயக்கம்? அது சாதித்தது என்ன?


வரலாற்றை இளைஞர்கள் தெரிந்துகொள்ளாவிட்டால்
வருணாசிரம தர்மம் மீண்டும் ஆட்டிப்படைக்கும்!
சென்னை லயோலா கல்லூரியில் திராவிடர் கழகத் தலைவர் கொட்டிய சமூகநீதி இனமுரசு!

சென்னை, மார்ச் 7- வரலாற்றை நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ளாவிட்டால், உணர்வு பெறாவிட்டால் வருணாசிரமம், மனுதர்மம் மீண்டும் நம்மை ஆளும், ஆட் டிப் படைக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
சென்னை லயோலா கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற வரலாற்றுத் துறைக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொட்டிய இனமுரசம் வருமாறு:
xஒரு நூற்றாண்டுக்கு முன் லயோலா கல்லூரி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்குக் கல்வி அளிப்பதில் தன் முத்திரையைப் பொறித்தது. கல்வியளித்ததில் கிறித்துவ நிறுவனங்களுக்கு முக்கிய இடம் உண்டு.
சில பிரச்சினைகளில் எங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும், கல்விக் காக இவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நன்றி தெரிவிப்பதில் எவ்விதத் தயக்கமும் கிடை யாது.
வாழ்நாள் சாதனையாளர்
எங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரையில் வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காகப் பாடுபடுவதும், அவர் விரும்பிய ஜாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்காக உழைப்பதும்தான் எனது வாழ்நாள் சாதனை என்று கருதுகிறேன். ஆனாலும், இத்தகைய விருதுகள் எங்கள் பணியில் எங்களை மேலும் உற்சாகப்படுத்தும் - அதற்காக எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.
நம்மிடையே எது பிரிக்கிறது என்பதை விட எது நம்மை இணைக்கிறது என்கிற அளவில் சில பணிகளைச் செய்யலாம்.
எதுபற்றிப் பேசுவது?
இந்தக் கருத்தரங்கில் எதுபற்றிப் பேசுவது என்று கேட்டபொழுது, என்னிடம் சொன் னார்கள், திராவிடர் இயக்க நூற்றாண்டுத் தொடக்கமாக இருப்பதால், அதுகுறித்துத் தமிழிலேயே பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டனர் - அது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான்.
உலகில் வேறு எங்கும் இல்லாத சமுதாய அமைப்பு நம்முடையது. உலகில் எங்குமே பிறக்கும்போதே உயர்வு - தாழ்வு பேசும் ஜாதி அமைப்பு கிடையாது.
ஜாதி என்பது பாதியில் வந்ததாகும். ஜாதி அடிப்படையில் பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது. உத்தியோக வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன.
சமுதாயத்திலே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுக் கிடந்தன. அத் தகைய கால கட்டத்தில்தான் நூறு ஆண்டு களுக்கு முன் திராவிடர் இயக் கம் தோன்ற வேண்டிய கட் டாயமும், தேவை யும் ஏற்பட்டது.
1885 இல் காங்கிரஸ் கட்சி தோற்று விக்கப்பட்டது. தோற்றுவித்தவரும் ஒரு வெள்ளைக்காரர்தான்.
தொடக்கத்தில் வெள்ளைக்காரர்கள்தான் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித் தார்கள். அதற்குப் பின் தலைமை வகித்த வர்கள் எல்லாம் பார்ப்பனர்களே!
வெள்ளைக்காரர் ஆட்சியை வாழ்த்தித் தான் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றுகூட பாராட்டினார்கள்.
காங்கிரஸ் என்றால் பார்ப்பனர்களுக்காகத்தான்
மாநாடுகளுக்குப் பார்ப்பனர்கள் தலைமை வகித்த நிலையில், தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். உத்தியோகங்களில் இந் தியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.
இந்தியர்கள் என்ற போர்வையில் உத்தியோகங்களை அனுபவித்தது எல்லாம் பார்ப்பனர்களே!
The Political Carrier of Periyar E.V. Ramasamy  என்ற ஆய்வு நூலை இ.சா. விசுவநாதன் எழுதியுள்ளார்.
அந்தக் காலக்கட்டத்தில் கல்வி வாய்ப்பு எப்படி இருந்தது என்பதை விளக்கியுள்ளார்.
1610 இல் பார்ப்பனர்களின் கல்வி ஆதிக்கம்
500 ஆண்டுகளுக்குமுன் நம் நாட் டின் கல்வி நிலை என்ன? நீலகண்ட சாஸ்திரியின் நூலிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார்.
ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili)  1610 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் எழுதிய கடிதம் நாயக்க மன் னரின் கல்வியமைப்பை விளக்குகிறது. மதுரையில் 10 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். அவர்கள் பல வகுப்பு களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் 200 முதல் 300 வரை இருந்தனர். அவர்கள் எல்லோரும் பிராமணர்களே! என்று குறிப்பிட் டுள்ளார்.
முதல் நீதிபதி யார் என்றால், ஒரு முத்துசாமி அய்யர்தான்; முதல் துணைவேந்தர் யார் என்றால் ஒரு சுப்பிரமணிய அய்யர்தான்!
சூத்திரர்கள் படிக்க வாய்ப் பில்லை. காரணம் வருணதருமம் தான். வருண தர்மத்தின்படி பிரா மணர்கள்தான் படிக்கவேண்டும் என்ற சாஸ்திர நிலை!
திராவிடர் இயக்கம் ஏன்?
இந்த நிலையில் சூத்திரர்களுக் கான - திராவிடர்களுக்கான உரிமை கோரும் ஓர் அமைப்புத் தேவைப் பட்டது அதுதான் திராவிடர் இயக்கம்.
நூற்றுக்கு 97 பேர்களாக நாங்கள் இருந்தும் எங்களுக்கு ஏன் கல்வி வாய்ப்பு இல்லை? உத்தியோக வாய்ப்பு ஏன் இல்லை? என்ற உரிமைக்குரல் கொடுக்கத் தோற்றுவிக்கப்பட்டது தான் திராவிடர் இயக்கம்!
சென்னை மாநகராட்சி உறுப்பின ராக இருந்த டாக்டர் சி. நடேசன்தான் தாழ்த்தப்பட்டவர்களை ஆதிதிரா விடர் என்று அழைக்கப்படவேண் டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தவர்.
மற்ற நாடுகளுக்கும் - இந்நாட்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?
நீதிக்கட்சி என்ற பெயர் ஏன் இந்த இயக்கத்துக்கு?
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்திய ஏட்டுக்குப் பெயர் ஜஸ்டிஸ் - அதன் தமிழாக்கம் நீதி என்ற நிலையில் அக்கட்சிக்கே நீதிக்கட்சி என்று பெயர் அமைந்துவிட்டது.
மற்ற நாடுகளில் சமூகநீதி என்பதற் கும், இந்தியாவில் சமூகநீதி என்பதற் கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. அங்கு வெறும் பொருளாதார பேதம்தான்.
இங்கோ பிறப்பின் அடிப்படையி லேயே ஜாதி பேதம்!
சமூகநீதி தேவைப்படும் இடம்!
எங்கே சமூக அநீதி தலைதூக்கி நிற்கிறதோ, அங்கேதான் சமூகநீதி தேவைப்படுகிறது - அதற்கான உரிமை இயக்கங்களும் வெடித்துக் கிளம்பு கின்றன.
அந்த நீதிக்கட்சி எதற்காகக் குரல் கொடுத்ததோ, எந்த சமூகநீதிக்காகப் போர்க் கொடியை உயர்த்தியதோ அதன் தத்துவம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டதே!
அதன் 46 ஆவது பிரிவில் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளதே!
பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பொரு ளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக் கான திட்டங்களை மிகுந்த அக்கறை யோடு அமல்படுத்தவேண்டும். சமூக அநீதிகளிலிருந்தும் எல்லா வகை யான சுரண்டல்களிலிருந்தும் அவர் களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற பகுதி இடம் பெற்றுள்ளதே!
அன்று கொடுத்த குரல் - இன்று அரசமைப்புச் சட்டத்தில்!
நூறு ஆண்டுகளுக்குமுன் திரா விடர் இயக்கம் கொடுத்த குரலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் இடம்பெறச் செய்துள்ளார்.
தந்தை பெரியார் அவர்களின் பணியைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது அண்ணா அவர்கள், ஞரவவபே உடிரவேசநைள  வடி ய ஊயயீளரடந என்று அழகாகச் சொன்னாரே!
மற்றுமொரு முக்கிய தகவல் நமது பார்ப்பனர் அல்லாத இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன் றாகும்.
சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள்
சூத்திரர்கள் என்றால் ஏதோ பாரத ரத்னா பட்டம் என்பதுபோல நினைத் துக் கொண்டு இருக்கிறார்கள்!
சூத்திரர் என்பதற்கு மனுதர்ம சாஸ்திரம் பொருள் கூறியுள்ளது. அது எத்தனைப் பேருக்குத் தெரியும் என்பதுதான் கேள்வி.
சூத்திரன் என்பவன் ஏழு வகைப் படும்.
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4. விபச்சாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்ட வன்
7. தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்
- என்று மனுதர்மம் - அத்தியாயம் எட்டு; 415 ஆவது சுலோகத்தில் கூறப்பட்டுள்ளதே!
நமது ஆவணங்களில், மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் எல் லாம் இந்த நாட்டுக்குரிய பார்ப்பனர் அல்லாத மக்களை சூத்திரர் என்று தானே குறிப்பிட்டு வந்தார்கள்.
இழிவுப்பட்டத்தை ஒழித்தது யார்?
இந்த இழிவுப்பட்டத்தை ஒழித்தது யார்? எதிராகக் குரல் கொடுத்தது யார்?
திராவிடர் இயக்கம்தானே?
பார்ப்பனர் அல்லாத இளைஞர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. மைதானத்தில்  1927 அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் நடைபெற்றது.
அம்மாநாட்டில் பனகல் அரசர், தந்தை பெரியார், டாக்டர் ஏ.இராமசாமி முதலி யார் முதலியோர் கலந்துகொண்டனர்.
திராவிடன் இதழ் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.
சென்னை அரசு தனது ஆவணங்களில் சூத்ரா என்ற சொல்லைப் பயன்படுத்து வது பெரும்பான்மையாக உள்ள பார்ப்ப னரல்லாத சமூகத்தினரின் சுயமரியாதை உணர்வை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது என இம்மாநாடு கருதுகிறது. அதனால் கடந்த கால ஆவணங்களிலிருந்து இந்த சொல்லை நீக்குவதுடன் அலுவலக ஆவணங்களில் இனி இச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாதென அனைத்து இலாகாக்களுக்கும் உடனடியாக ஒரு ஆணை பிறப்பிக்கவேண்டுமென அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
ஒட்டுமொத்த சமூகத்தின் சுயமரி யாதையினைப் பற்றியது இத்தீர்மானம் என அவர் கூறினார். பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரர் என்றழைக்கப்பட்டனர்; அவர் களும் இது ஏதோ தங்களுக்கு அளிக்கப் பட்ட மரியாதை என்பதாகவே கருதி, இதுவரை அதில் நிறைவு பெற்றவராகவே இருந்து வந்தனர். ரிக் வேதம், மனுதர்ம சாஸ்திரப்படி ஒரு சூத்திரன் என்பது தாசி மகன் என்றும், பார்ப்பனருக்கு சேவை செய்யவே பிறந்தவன் என்றும் பொருள் தருவதாகும். இந்தப் பட்டமும் அதன் விளக்கமும் இவர்களுக்கு உண்டாக்கும் இழிவைப் போல் இழிவைத் தருவது வேறெதுவுமிருக்க இயலாது. சில காலத்துக்கு முன் சென்னையின் வடக்குப் பகுதி கருப்பு நகரம் என்றழைக்கப் பட்டதைவிட இது மிகவும் மோசமானது. மக்களின் போராட்டத்தின் காரணமாக இப்பெயர் ஜார்ஜ் டவுன் என மாற்றப்பட் டதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். பஞ் சமர் என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் இதற்கு எதிராக மறுப்பு தெரிவித்ததால், தற்போது அவர்கள் ஆதிதிராவிடர் என்ற ழைக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அரசுப் பணியில் உள்ள பணியாளர்களின் வகுப்பு வாரியான எண்ணிக்கையினை அளிக்க சட்டமன்ற மேலவை கேட்டுக் கொண்டதற்காக சென்னை மாகாண சுயாட்சி அரசு பதில் அளிக்கும்போது, அரசின் பார்ப்பனச் செயலாளர் ஒருவர் சமீபத்தில் சூத்ரா என்ற சொல்லை பார்ப் பனரல்லாதாரைக் குறிக்கப் பயன்படுத்தி யுள்ளார். மத நம்பிக்கை கொண்டு இருந்த அரசாங்கத்தின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின்போது, எந்த அரசு அறிக்கை யிலும் இப்பட்டம் பயன்படுத்தப்பட வில்லை. ஆனால், தற்போதுள்ள உள்துறை அமைச்சரோ ஒரு பார்ப்ப்பனரல்லாதவர். டாக்டர் சுப்பராயன் அவர்களிடம் நாம் கோருவதெல்லாம், அரசு ஆவணங்களி லிருந்து இச்சொல் நீக்கப்படவேண்டும் என்பதுதான். இத்தீர்மானத்தை வழி மொழிந்த திரு. டி.ஆர். ரத்தினம் அவர்கள் சூத்ரா என்ற இச்சொல் சமூகத்தை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளதால், அரசு ஆவணங்களில் ஆட்சேபணைக்குரிய இத்தகைய சொல் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது எனக் கூறினார். இத்தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பலத்த கைதட்டல் களுக்கிடையே நிறைவேற்றப்பட்டது.
அதற்குப் பிறகு தானே இந்த இழி பட்டம் பதிவேடுகளில் ஒழிந்தது. திராவிடர் இயக்கத்தின் மிகப்பெரிய - இன இழிவை ஒழிக்கும் செயல்பாடு அல்லவா இது?
பச்சையப்பன் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு மறுப்பு!
பக்கத்திலிருக்கும் சென்னைப் பச்சை யப்பன் கல்லூரியின் நிலைமை என்ன? பார்ப்பனர் அல்லாத வள்ளலான பச்சை யப்ப முதலியார் அவர்களின் அருங் கொடையால் உருவாக்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி.
அக்கல்லூரியில் கிறித்தவர்கள், முசுலிம் கள், தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப் பட்டதில்லையே - தடையிருந்ததே! பிறகு அந்தக் கதவு திறக்கப்பட்டது எப்படி? நீதிமன்றம்வரை சென்று தாழ்த்தப்பட்ட வர்களும் இந்துதான் என்று தீர்ப்புப் பெற்ற பிறகுதானே தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க் கப்பட்டனர். இந்த வரலாறெல்லாம் எத்தனைப் பேருக்குத் தெரியும்!
வரலாற்றை மறந்தால்...
இளைஞர்கள் கடந்தகால வரலாற்றைத் தெரிந்துகொள்ளாவிட்டால், உணர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் பழைய வருணாசிரமம்தான்; மனுதர்மம்தான் திரும்பும், நம்மை ஆட்சியும் செய்யும்.
கேட்பார்கள் சிலர்; இன்னும் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினையா என்று?
இது ஒன்றும் தனி மனிதர்பற்றிய பிரச் சினையல்ல; ஒரு ஆதிக்கத்தை, சுரண்டலை, கலாச்சார ஊடுருவலை எதிர்க்கும், தடுக் கும் முயற்சியாகும்.
எது துவேஷம்?
பார்ப்பனர்கள்மீதான துவேஷம் என்று குற்றஞ்சாட்டிய காலத்தில் தந்தை பெரியார் பளிச்சென்று பதில் கூறினார். கொசுக் கடிக்காமல் இருப்பதற்காகக் கொசு வலை கட்டிக் கொண்டால் அதற்குப் பெயர் கொசு துவேஷம் என்று பொருளா? என்று கேட்டாரே!
இதோ என்னிடம் இருப்பது தமிழ் நாட்டில் காந்தி என்னும் புத்தகம். காந்தியார் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தால் அ.இராமசாமி பி.ஏ. அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் 521 ஆம் பக்கத்தில் காணப்படும் பகுதி மிக முக்கியமானது - தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.
காந்தியாருக்கே உரிமை வாங்கிக் கொடுத்த இயக்கம் இது
நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர் செல்வமும், உமாமகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரை யாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பதுகூட இப்போது சுவையாக இருக்கும்.
உமாமகேசுவரம் பிள்ளை: பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.
மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப்பற்றிப் பலவிதமாகக் கூறு கிறார்கள். பிராமணர் - பிராமணரல்லா தாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும், சிறிது காலத்தில் அவை மறைந்து விடும் என்று டாக்டர் வரதரா ஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்ற வர்கள் இதில் தலையிடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட் டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும், என்னைப் போன்ற வர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற் படுத்திக் கொடுக்கவேண்டுமென்றும் கூறு கிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டு களுக்குமுன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டில் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள் என்று காந்தியார் கூறினார்.
இது 1927 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி. 1925 ஆம் ஆண்டுக்குமுன் காந்தி யார் சீனிவாசய்யங்கார் வீட்டுத் தாழ்வாரம் வரைதான் அனுமதிக்கப்பட்டார். 1925-க்குப் பிறகு 1927 இல் காந்தியாரின் மனைவி சீனிவாசய்யங்கார் வீட்டின் அடுப்பங்கரை வரை செல்ல முடிகிறது என்றால், இதன் பொருள் என்ன?
1925 ஆம் ஆண்டுக்குமுன் என்றால் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்காத காலம்- அந்த வகையில் பிரச்சாரம் நடக்காத காலம் - அதனால் மகாத்மா காந்தி சீனிவாசய்யங்கார் வீட்டின் தாழ்வாரம் வரை செல்ல முடிந்தது. 1927 இல் அய்யங்கார் வீட்டின் அடுப்பங்கரை வரை செல்ல முடிகிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியதுதானே! (பலத்த கைதட்டல்).
தந்தை பெரியாரின் தொண்டு, பிரச் சாரம் மகாத்மாவையே அய்யங்கார் வீட்டு அடுப்பங்கரைவரை செல்ல அனுமதியைப் பெற்றுத் தந்தது - திராவிடர் இயக்கத்தின் சாதனை காந்தியார் வரை ஊடுருவிச் சென்றுள்ளது.
தலையெழுத்து மாற்றப்பட்டது எப்படி?
ஒரு காலத்தில் கல்வி நீரோடையில் ஆரிய முதலைகள்! இன்று முத்தன் மகன் குப்பன் கணினிப் பொறியாளர்.
கல்வி கற்காதது தலையெழுத்து என்று நம்பிய நிலையை மாற்றி, அந்தத் தலை யெழுத்தை மாற்றி எழுதியது யார்? எப்படி நடந்தது?
சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்களின் அறிவுப் புரட்சி. ரத்தம் சிந்தாப் புரட்சியின் அறுவடை தானே இது!
இதே லயோலா கல்லூரியில் சென்னை மாநில பிரதமராக இருந்த ராஜகோபாலாச் சாரியார் என்ன பேசினார்?
சமஸ்கிருதத்தைப் படிப்படியாகத் திணிக்கத்தான் இப்பொழுது இந்தியைப் புகுத்துகிறேன் என்று பேசவில்லையா?
அதனை முறியடித்ததும் திராவிடர் இயக்கம்தானே! இன்றைய தினம் சமூகநீதிக்குரல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல - இந்தியா முழுமையும் எதிரொலிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு ரையிலேயே (Preamble) Justice - Social என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என் றால், இதற்கு மூல காரணம் சமூகநீதி இயக் கமான திராவிடர் இயக்கம் அல்லவா!
மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் அவர்கள்பற்றி புரட்சிக்கவிஞர் பாடினார்.
தொழும் என்றால் கும்பிடுவது என்று பொருளல்ல - தந்தை பெரியார் அவர் களின் கொள்கையை ஏற்கும் - பின்பற்றும் என்று பொருளாகும் என்று குறிப்பிட்டார்.
கருத்தரங்கில் ஏராளமான இருபால் மாணவர்களும், பேராசிரியர்களும், பல்துறைகளைச் சார்ந்த பிரமுகர்களும் பார்வையாளர்களாகக் கலந்துகொண் டனர்.

லயோலா கல்லூரி வரலாற்று ஆய்வு மய்ய ஆண்டு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழர் தலைவர்

சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை  ஆய்வு மய்யத்தின்  ஆண்டு மாநாடு மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இருநாள் மாநாட்டில்  அறிஞர் பெருமக்கள் பலரும் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேருரையாற்றிப் பெருமை சேர்த்தனர்.
6.3.2012 அன்று மாலையில் நடைபெற்ற  நிறைவு விழாவில்  லயோலா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் பேரா.பி.பி. ஜெயசந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர், லயோலா கல்லூரியின் வளர்ச் சிக்கும், சிறப்பான செயல்பாடுகளுக்கும் பங்களித்த கீழ்க்குறிப்பிடப்பட்ட பெரு மக்களுக்கு பாராட்டுகள் வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது. லயோலா கல்லூரி ரெக்டர் மறைத்திரு கே.அமல்
லயோலா கல்லூரியின் தாளாளரும் செயலாளருமான மறைத்திரு டாக்டர் சி.ஜோ அருண். லயோலா கல்லூரியின் முதல்வர் மறைத்திரு டாக்டர் பி.ஜெயராஜ் லயோலா கல்லூரியின் துணை முதல்வர் மறைத்திரு டாக்டர் எஸ்.ஆரோக் கியம் இந்த நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  வரலாறு மற்றும் சமூகசேவைத் துறைகளில் பெரும் தொண்டாற்றியுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெரு மக்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது.  டாக்டர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
மறைத்திரு. டாக்டர் அல் போன்ஸ் மாணிக்கம், முதல்வர், புனிதசேவியர் கல்லூரி, பாளையங் கோட்டை,
பி.எஸ்.ஞானதேசிகன், மாநிலங் களவை உறுப்பினர் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
பேரா. கருணானந்தன், முன்னாள் பொதுச் செயலாளர், ஏ.யூ.டி மற்றும் ஏ.சி.டி.ஏ. விவேகானந்தா கல்லூரி யின் முன்னாள் பேராசிரியர். டாக்டர் நந்திதா கிருஷ்ணன், இயக்குநர், சர்.பி.சி. ராமசாமி அய்யர் பவுண்டேஷன், சென்னை.
டாக்டர் ரெட்டி,  நிருவாக இயக் குநர், அப்பல்லோ மருத்துவமனை கள்.
திரு. தொல்.திருமாவளவன்,  மக் களவை உறுப்பினர் மற்றும் தலை வர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
பேரா. டாக்டர் ஜி.வெங்கட் ராமன், பேரா சிரியர் மற்றும் துறைத் தலைவர், வரலாற்றுத் துறை, சென்னை பல்கலைக் கழகம்
மறைத்திரு டாக்டர் சேவியர் அல்போன்ஸ், முன்னாள் முதல்வர், லயோலா கல்லூரி.
பின்னர், முக்கிய விருந்தினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி சிறப்புரை ஆற்றினார்.
முடிவில், லயோலா கல்லூரி வரலாற்று ஆய்வு மய்யப் பொரு ளாளர் மறைத்திரு டாக்டர் ஜி. ஜோசப் அந்தோணிசாமி நன்றி கூறினார்.
நாட்டுப் பண்ணுடன் இந்த விழா இனிதே நிறைவுற்றது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...