Saturday, March 24, 2012

மீண்டும் 'டெசோ' தேவைப்படுகிறது! திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி முக்கிய அறிக்கைகீதையின் மறுபக்கம் ஆந்திர நாட்டு நாத்திகப் பேரறிஞர் நாரல. வெங்கடேசராவ்


அய்யா, அண்மையில் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் அரும்பாடு பட்டு அற்புதமாக எழுதியுள்ள கீதையின் மறுபக்கம் எனும் நூலினைப்  படித்து முடித்தக் கையோடு இதை எழுதுகிறேன்.
இந்த நூலினை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர் ஆந்திர மாநில சுதந்தர சிந்தனை யாளர் நாரல வெங்கடேசராவ் (யான் இதுவரை அவரின் பெயர் நாரல வெங்கட்டராவ் என்பதாக கருதியிருந்தவன்) என்றும் அவர் எழுதியுள்ள ஆங்கில நூலான ஜிக்ஷீலீ கிதீஷீ நிவீணீ தான் என துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது மட்டுமின்றி பல்வேறு அத்தியாயங்களிலும் - நாரல வெங்கடேசராவ் அவர்களின் கருத்து களை பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
நாரல. வெங்கடேச ராவ் அவர்களையும் அவரின் நாத்திகவாத கருத்துக்களையும் என்னுடைய தெலுங்கு நண்பர்களின் வாயிலாக கேட்டு ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன். 55 ஆண்டுகட்கு முன்னர் அவர் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தெலுங்கு பத்திரிகையான ஆந்திர பிரபாவன் ஆசிரியராக பொறுப்பேற்று இருந்தகாலம் அது. அவரால் எழுதப் பெற்ற தெலுங்கு கவிதை ஒன்றினை என்னிடம் கொடுத்து படிக்கும்படி தெலுங்கு நண்பர் ஒருவர் கூறியதின் பேரில் எனக்கும் ஓரளவு தெலுங்கு படிக்கத் தெரியும் என்பதால் படித்துப்பார்த்து பெரு மகிழ்வுற்றேன்.
அந்த தெலுங்கு கவிதை இதோ:
சர்வ சமுடைன சர்வேசுடு உண்டே!
தினரக் கடவ் தேவுடே உண்டே!
கொந்தரு கோட்லதோ குலகல னேல?
எந்தரோ கூட்டிக்கு மாடக னேல?
என்பதே (தமிழாக்கம்)
சர்வமுகம் சமமெனக் காக்கும் சர்வேதவரன் இருந்தால்-
தினமும் படியளக்கும் தேவன் இருந்தால் ---
கொஞ்சம்பேர் கோடிகளில் (கோட்டையில்) குலவுவது ஏன்?
எவ்வளவோ பேர் கூழுக்கும் குமைவது ஏன்?
மேலும் அய்யா வீரமணி அவர்கள் கீதையின் மறுபக்கம் என்ற நூலில்  -நாரல -வெங்கடேச ராவ் அவர்களின் முத்தான கருத்துகளை மூன்று பத்திகளில் குறிப்பிட்டுள்ளார்.
அணு: கிரகணங்கள் ஏற்படுவது எதனால் என்றால் இராகுவும் - கேதுவும் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதால்தான் என மூட நம்பிக்கை கருத்துக்கூட பல கோடி மக்களால் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்ட கருத்துதானே; அதையே இன்று ஏற்று நம்பிக் கிடந்தால் அதைவிடக் கொடுமை வேறு உண்டா? அதுபோன்றே இதுவும் என்று கூறிவிட்டு
இப்படிப்பட்ட மனப்பான்மை உடைய வர்கள் பல்கலைக் கழகங்களிலும், தேசீய விஞ் ஞான ஆய்வுக் கூடங்களிலும் நமது தொழில் நுட்ப நிறுவனங்களிலும், ஏன் நமது வெட் கத்திற்குரிய நிலையில் அரசுத் தலைமை பொறுப்புகளிலும் அங்கம் வகிப்பது எவ்வளவு மோசமான நிலைமையை நமது நாட்டில் தோற்றுவித்துள்ளது? இதனால்தான் நமது தேசிய வாழ்வில் ஒவ்வொரு முனையும் சீர்கெட்ட நிலையில். பகுத்தறிவின்றி பழைமைப் பாசியால் பாதிக்கப்பட்டுள்ளது என்னும் கருத்தினை ஆணித்தரமாகக் கூறி சாட்டையடி கொடுத்துள்ளார்.
மேற்கண்டவாறு பகுத்தறிவு நாத்திக கொள்கைகளையும் புராண இதிகாச கீதை போன்ற நூற்களின் பித்தலாட்டங்களையும் தோலுரித்துக் காட்டிய ஆந்திர அறிஞர் திரு. நாரல வெங்கடேசராவ் அவர்களை மீண்டும் எனக்கு நினைவூட்டி அவரைப்பற்றி தேடலை யான் மேற்கொள்ள வழி வகுத்த தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களை பாராட்டி மகிழ்கிறேன். ஆம். கற்றாரை - காற்றோரே காமு றுவர் என்ற பழமொழி என் நினைவில் நிழ லாடுகிறது.
கீதையின் மறுபக்கம் என்ற நூல் கீதையின் கருத்துகளை மட்டும் மறுக்கும் நூலாக எனக் குப்படவில்லை. அதினிலும் மேலாக திராவிட இன உணர்வுக்கும் நாத்திக கருத்துக்கும் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையையும் உணர முடிகிறது.
-வேலை. பொற்கோவன்
வேலம்பட்டி


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...