Saturday, February 4, 2012

காற்றில் அதிகமாக இருக்கும் வாயு எது?


காற்றில் அதிக அளவில், அதாவது 78 விழுக்காடு, நைட்ரஜன்(Nitrogen) வாயுதான் இருக்கிறது. 21 விழுக்காட்டிற்கும் குறை வாகத்தான் ஆக்சிஜன்(Oxygen)இருக்கிறது. 1 விழுக்காட்டில் நூறில் மூன்று பகுதி அளவுதான் கரியமிலவாயு (carbon dioxide) இருக்கிறது.
பூமி உருவானபோது வெடித்துக் கிளம்பிய எரிமலைகளின் காரணமாகத் தான் காற்றில் அதிக அளவில் நைட்ரஜன் வாயு இருக்கிறது. அதன் பெரும்பகுதி விண் வெளியில் கலந்துள்ளது. ஹைட்ரஜன் (Hydrogen) அல்லது ஹீலியம் (Helium) வாயுக்களை விட எடை அதிகம் கொண்டது என்பதால் நைட்ரஜன் பூமியின் மேற்பரப்பை ஒட்டியே தங்கிவிட்டது.
76 கிலோ கிராம் எடை கொண்ட ஒரு மனிதரிடம் 1 கிலோ நைட்ரஜன் உள்ளது. வெடியுப்பு என்னும் சால்ட் பெட்ரி (saltpetre) அல்லது பொட்டாசியம் நைட்ரேட் (Potassium nitrate)என்ற பழைய பெயர் கொண்டது நைட்ரி (Nitre). வெடிமருந்தின் ஒரு முக்கியமான பொருள் இது. இறைச்சியைப் பதப்படுத்தவும், அய்ஸ்க்ரீமை பாதுகாக்கவும், கூசும் பற்கள் கொண்டவர்களின் ஈறுகளை மரத்துப் போகச் செய்யும் பற்பசையிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
மனிதர்கள் வாழும் வீடுகளின் தரைகளில் சுரக்கும் நீரில்  இருந்து, இந்த சால்ட்பெட்ரி உப்பு பாளம் பாளமாக அதிக அளவில் கடந்த பல நூறு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உப்பை சேகரிக்கும் ஆட்களின் நேர்மையற்ற செயல்களைப் பற்றி 1601இல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் வீடுகள், தேவாலயங்களில் கூட, கதவை உடைத்துக் கொண்டு நுழைந்து, தரையைத் தோண்டி, அந்த வெடிஉப்பை எடுத்து வெடிமருந்து தயாரிப்பாளர்களுக்கு விற்றுவந்தனர்.
நைட்ரஜன் என்னும் கிரேக்க சொல்லுக்கு சோடா உருவாவது ‘soda-forming’ என்று பொருள்படும்.
அழுத்த உணர்வு கொண்ட அடைப்பான்கள் உள்ள பீர்கேன்களில் இருப்பது நைட்ரஜன்தான்; கரியமிலவாயு அல்ல. சிறிய அளவு நைட்ரஜன் குமிழ்கள் மென்மையான, சிறந்த பானத்தைத் தருகிறது.
காற்றில் இருக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க வாயு ஆர்கன் (Orgon) ஆகும். (1 விழுக்காடு). வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பதை முதன் முதலாகக் கண்டறிந்து கூறிய ராலி பிரபு மற்றும் வில்லியம் ஜான் ஸ்டூவர்ட் ஆகியோரால் அது கண்டுபிடிக்கப்பட்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...