Tuesday, February 14, 2012

ஏன் இந்த கொலை வெறி?

நாள் ஏடுகள், தொலைக்காட்சி களை எடுத்தாலோ, திறந்தாலோ அதில் செய்திகள் பிரிவைப் படிக்க, பார்க்கத் துவங்கினால்,  எங்கும் கொலை! கொலை! தான். அடுத்தபடி திருட்டு - அதற்காகக் கொலை! வன்முறை வெறியாட்டங்கள்.
முன்பு எப்போதும் இல்லாத கூலிப் படைகளை ஏவி, கைக்குண்டு எறிதல், கத்தியால் குத்திக் கொல்லு தல், கழுத்தை அறுத்து பிணத்தை மறைத்து அல்லது எரித்து விடுதல் - இவைதான்!
அப்பப்பா...! இதனைவிட அரு வருப்பும், வேதனையும், விசாரமும் நிறைந்த நிகழ்வுகளே உலகில் இல்லையா என்று வெறுப்புடன் கேட்கவே தோன்றுகிறது!
மற்றொருபுறம் தற்கொலைகளும் கூடவே! அதிலும் குறிப்பாக மாணவ இளிந்தளிர்கள் மிகவும், எளிதில் உணர்ச்சி வயப்பட்டு, மார்க் குறை வாக வங்கியதை ஆசிரியரோ, பெற்றோர்களோ கண்டித்ததால் உடனே தூக்கு மாட்டிக் கொள்வது, ஏதாவது தூக்க மாத்திரை, விஷங் களைத் தேடி உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலமும் அன்றாட நிலவரம் போல் ஆகி சமுதாயத் தின்கீழ் இறக்கம் வேகமாக வளரு கிறது!
சென்னையில் கடந்த 9.2.2012 அன்று  ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவரின் உயிரை  ஒரு பள்ளி மாணவன் கத்தியால் குத்திப், போக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நல்ல மனம் படைத்த அனைவரையும் உறையச் செய்து விட்டது!
நன்றாக மாணவர்கள் படிக்க வேண்டும்; அதன்மூலம் அம்மாணவனின் எதிர்காலம் ஒளிமயமாகிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, தாயினும் சாலப் பரிந்து, தந்தையின் கண்டிப்பு போன்ற பங்களிப்பையும் சேர்த்து செய்து கடமையாற்றிய ஒரு ஆசிரியையை பலவிடங்களில் கத்தியால் குத்திக் கொன்றுவிட்ட செய்திதான் இப்போது சூடாக விவாதிக்கும் பொருளாகி தமிழ்நாட்டிலும், ஏனைய பிற பகுதிகளிலும் இருக்கிறது!
செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட பையன், பெற்றோர்கள் கண்டிப்புப்பற்றி நினைக்கிறபோது, அறிவுவயப்பட்டு, நன்கு படிக்கும் மாணவனாகி விடுவ தற்குப் பதில், ஆசிரியையைப் பழி தீர்க்க கத்திவாங்கி புத்தகத்திற்குள் வைத்து இருந்தான் என்பதை நினைக்கும்போது, மாணவர் உலகம் இப்படியுமா நடப்பது என்ற ஆத்திரம் நம் அனைவருக்கும் கொப்பளித்துக் கொண்டு வீறிடுகிறது! - கவலையும் கொள்ளச் செய்கிறது.
ஆனால், அவனது வெறிச் செயலுக்கு மூல காரணங்களையும் கண்டறிந்து, நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும் நாம்!
இப்படி ஒரு எண்ணம் - அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து, வீட்டில் பெற்றோர்கள் போதிய அளவு நேரத்தை மாணவனுடன் செலவழிக்காமல் பணம் கொடுத்ததும் செல்லம் கொடுத்தது ஒரு காரணம் என்ற போதிலும்கூட, நமக்குத் தெரிய முக்கிய முதற் அடிப்படைக் காரணம் அக்னி பாத் என்ற ஒரு ஹிந்தி சினிமா படத்தை அவன் திரும்பத் திரும்பப்பார்த்து, வன்முறை காட்சிகளைச் சுவைத்த ரசிகனாக மாறிய கொடுமையே யாகும்!
அதில் கொலைகள் நியாயப்படுத்துவ தாகவோ அல்லது சர்வ சாதாரணமான தீர்வு போலவோ காட்டப்பட்டிருக்கக் கூடும். (நாம் பார்க்காததால் ஊகத் தின்மீது கூறுகிறோம்).
இது அவனது ஆழ்மனம் - அடி மனத்தில் இப்படி ஒரு கொலை வெறியைத் திட்டமிடச் செய்துள்ளது!
பிஞ்சு மனதில் நஞ்சைப் பாய்ச்சி யுள்ளது! தொலைக்காட்சி மெகா சீரியல் களைப் பார்த்தால் சூழ்ச்சி, வில்லத்தனம், வன்முறை, சதி அதில் இன்னும் கேவல மான அளவுக்கு மகளிரை சதிகாரி களாக்கிக் காட்டும் கொடுமை மிகவும் வெட்கப்படத்தக்க வேதனையான காட்சிகளாகும்!
சமூகத்தை வாழ வைக்க வேண்டிய - பலரும் நாய் விற்ற காசு குரைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது! என்ற போக்கில் வருவாய்க்காக பொது ஒழுக்கத்தை, அறத்தை, பலி பீடத்தில் நிறுத்தி லாபமடையவே பார்க்கின்றனர்!
இவர்களைவிட, வறுமையின் கொடுமை தாங்க முடியாததால் உடலை விற்கும் பரிதாபத்திற்குரிய மகளிர் எத்தனையோ மடங்கு  மேலானவர் கள் என்றே கூற வேண்டும்!
சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு சிறுவன், கடை முதலாளி பெரியவரை கயிறு போட்டுக் கொன்று கல்லாவில் திருடினான். வாக்குமூலம் கொடுத்த போது ஒரு திரைப்படம் பார்த்து இப்படிச் செய்யத் திட்டமிட்டேன் என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னான்!
இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம் உண்டு!
ஒரு நல்லாசிரியை இப்படியா உயிர்த் தியாகம் செய்வது?
கல்வித் தொண்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த அந்த மகேஸ்வரி ஆசிரியை நம் அனைவரது வீர வணக்கத்திற்கு உரியவர்!
அவரது பெயரால் விருது  வழங்கி மாணவர்  - ஆசிரியர்  - பெற் றோர் என்ற முத்தரப்பு உறவினைப் பலப்படுத்தச் செய்ய வேண்டும்!
மகேஸ்வரிகள் ஒவ்வொரு வகுப்பறையிலும் வாழ்ந்து கொண்டி ருப்பர் மறையவே மாட்டார்கள்!
கொலைவெறி பாடல்களை, ராகத்திற்காக ரசிக்க வைக்கும் ரசனையேகூட நிறுத்தப்பட வேண் டும்! மனித நேயத்தைக் காப்பாற்ற முன் வாருங்கள்!


.
 2

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...