Wednesday, February 15, 2012

இந்து முன்னணி சொன்னால்... இரு ஆசிரியர்களை சிறையில் தள்ள வேண்டுமா?


சென்னை மீஞ்சூரில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10ஆம் தேதி நடந்த ஆண்டு விழாவில் நவீன இராமாயணம் எனும் பெயரில் மாணவர்கள் பங்கேற்ற நாடகம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த நாடகத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைந்து விட்டதாகக் கூறி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு காவல் நிலையத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் இருவ ரைக் கைது செய்து வழக்குத் தொடுத்ததன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது என்ன கொடுமை! பள்ளிக் கூடங் களில் ஆண்டு விழாக்களில் கலை நிகழ்ச்சி கள் நடத்துவது என்பது இயல்பான ஒன்று தான். இதில் என்ன குற்றம் கண்டுபிடித்து விட்டனர்?
எந்த வகையில் இழிவுபடுத்திவிட்டனர்? இராமாயணமே ஒரு குப்பைதான் - ஆபாசக் களஞ்சியம்தான். கம்பன் சீதையை வருணிப் பது என்ற பெயரில் அசிங்கப்படுத்தியிருப் பதைவிட, ஆபாசப்படுத்தியதைவிட வேறு யாராவது அசிங்கப்படுத்திவிட முடியுமா? அதுவும் பிரம்மச்சாரியான அனுமானிடம் போய் சீதையின் உள்ளுறுப்புகள் வரை எப்படி எப்படி இருக்கும் என்று வருணித்தானே - இராமாயண பக்தர்கள், இந்து முன்னணி வகையறாக்கள், கம்ப இராமாயணத்தைக் கொளுத்தியிருக்க வேண்டாமா? செய்தார் களா?
பிள்ளையார் ஊர்வலம் என்று கூறி புதுப்புது டிசைன்களில் பிள்ளையாரை உருவாக்கி இழுத்துச் செல்லவில்லையா? பிள்ளையாரின் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கி யைக் கொடுத்து கார்கில் பிள்ளையார் என்று அழைக்கவில்லையா?
எந்தப் புராணத்தில் கார்கில் பிள்ளையார் சொல்லப்பட்டு இருக்கிறது? அப்படி எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளை யார்ப் பொம்மைகளை ஆற்றிலும், கடலிலும் போட்டு என்ன பாடுபடுத்துகிறார்கள் - மிதிக்கிறார்கள் - அடிக்கிறார்கள் - துவம்சம் செய்கிறார்கள் இதே இந்து முன்னணி வகையறாக்கள்.
வல்லப கணபதி என்று கூறி ஒரு பெண் ணின் குறியில் பிள்ளையாரின் துதிக்கையை நுழைய விடும் உருவத்தை கோவில்களில் வைத்துப் பூஜை செய்கிறார்களே - இதைவிட
இழிவும், ஒழுக்கக் கேடும், ஆபாச சாக்க டையும் வேறு என்னவாம்?
இந்து மதக் கோவில்களிலும், தேர்களி லும், கோபுரங்களிலும் கொக்கோகம் வெட் கப்படும் அளவுக்கு உருவங்களைச் செதுக்கி வைத்துள்ளனரே - இந்து முன்னணி வகை யறாக்கள் கோடாரியை தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்க வேண்டாமா?
சிவலிங்கத்தைக் கும்பிடுகிறார்களே, அதன் விளக்கம் என்ன?
சிவன் - பார்வதிகளின் குறிதானே? ஓம் என்னும் தத்துவம் இதற்குள் குந்திக் கொண்டு இருக்கிறது என்று பரப்புரை, பொழிப்புரை சொல்லிக் கொண்டு அலையும் ஒரு கும்பல் பள்ளி ஒன்றில் பிள்ளைகள் நடத்திய கலை நிகழ்ச்சியில் ராமனை அவமதித்து விட்டனர். ஆகா, எங்கள் மனம் ரத்தக் காயமாகி விட்டது என்று ஒப்பாரி வைப்பதில் ஒரு துளி அளவாவது அறிவு நாணயம் உண்டா?
இவ்வளவுக்கும் அந்தப் பள்ளி நிகழ்ச்சியில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டு இருக்கிறாரே!
அவர் ஏதாவது அந்த நிகழ்ச்சி பற்றிக் கருத்துத் தெரிவித்து உள்ளாரா?
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்தால், மனு கொடுத்தால் காவல் துறை கச்சை கட்டிக் கொண்டு கிளம்பிவிட வேண்டுமா? இந்து முன்னணி ஆட்சியா நடக்கிறது?
இராமாயணத்தைப்பற்றி தந்தை பெரியார், அண்ணாவின் கணிப்பென்ன - கருத் தென்ன? அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியில் இராமாயணக் கதை அடிப்படையில் கலை நிகழ்ச்சியை நடத்திய ஒரு பள்ளியின் ஆசிரியர்களை கைது செய்வதா? சிறையில் அடைப்பதா? பள்ளிகளின் நிருவாகிகளைக் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டுமா? சிறையில் அடைத்தது இரு ஆசிரியர்களை அல்ல - அண்ணாவை என்பதை அண்ணா தி.மு.க. ஆட்சி மறந்து விட வேண்டாம்!
அந்தப் பள்ளி ஆசிரி யர்கள் மீது போடப்பட்ட வழக்கைத்  திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்கும் வேலையை உடனே செய்ய வேண்டும். சென்னையில் இராவண லீலா நடத்தி ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை எரித்த வழக்கில் அவ்வாறு செய்தது குற்றமல்ல என்ற நீதிமன்ற தீர்ப்பைத் திராவிடர் கழகம் வாங்கி வைத்துள்ளது என்பதை நினைவூட்டுகிறோம்.
வழக்கு விசாரணையில் இந்த உண்மை கள் எல்லாம் தெரிய வந்தால் சட்ட விரோத மாக கைது செய்யப்பட்டதற்குக் காவல்துறை பொறுப்பேற்க வேண்டிவரும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
- கறுஞ்சட்டை -

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...