Sunday, January 15, 2012

பொங்கலோ பொங்கல்!


தமிழர்களின் புத்தாண்டான தை முதல் நாளில் தமிழர்களின் இல்லங்களில் எல்லாம் பொங்கலோ பொங்கல்! என்ற புத்தொலி கேட்கும்.
எந்த ஓர் இனத்திற்கும் தனித் தன்மையான பண்பாட்டு அம்சங்கள் உறுதியாக உண்டு. அந்த வகையில் தமிழர்களின் பண்பாட்டுத் தோட்டத்தில் மலர்ந்து மணம் வீசும் மலர்தான் இப்பொங்கல் பொன்னாள்!
இன்னும் ஒரு வகையில் சொல்லவேண்டுமானால், உலகெங்கும் நடைபெறும் அறுவடைத் திருவிழா                 (ழயசஎநளவ குநளவஎயட)வாகவும் இப்பொங்கல் தமிழ் நாட்டுக்கு அமைந்துவிட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடை தமிழின விவசாயிகள் மத்தியில் நடனமிடும் நம்பிக்கை மொழியாகும்.
வீட்டைத் தூய்மைப்படுத்தி வீதியில் வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் இவ்விழாவிற்கு முன்னதாக நடைபெற்று முடிந்துவிடும். புத்தாண்டான தை முதல் நாள் பொங்கலன்று தமிழர் இல்லங்களில் புதுப் பொலிவு கண்சிமிட்டும்.
செந்நெல், செங்கரும்பு, இஞ்சி, மஞ்சள், பழங்கள் என்று வகை வகையாக இவ்விழாவில் மேலோங்கி நிற்பதைக் காணமுடியும். அந்த வகையில் இயல் பாகவே இயற்கையில் அமைந்த இனிய விழாவாகவும் இவ்விழா பொலிவதை என்னென்று சொல்ல!
காணும் பொங்கல் என்று ஒரு நாளை ஒதுக்கி, உற்றார் உறவினர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதும் வாழ்த்துக்களைக் கூறுவதும் நம்மிடையே உள்ள இடைவெளிகளை நிரப்பும் தன்மை கொண்டதாகும்.
வேளாண்மைக்கு உற்ற தோழனாக விளங்கும் கால்நடைகளை ஓம்புவதும் பொருத்தமானதாகும்.
இது போல எல்லா வகையிலும் பொருத்தமாக தமிழர்களுக்கு அமைந்திருப்பது போல மற்ற இனத்தவர்களுக்கு அமைவது என்பது அரிதினும் அரிதே!
மற்ற மற்ற நாடுகளில் அவர்களுக்காக பண்பாட்டு விழாவைக் கொண்டாடும்போது எந்த அயல் பண்பாட்டுக் குறுக்கீடுகளும் இருப்பதில்லை.
ஆனால் தமிழர்களுக்கோ நம்மைப் பிடித்த ஆரிய கிரகணம் நம்முடைய மகிழ்ச்சியில், நம்முடைய பண்பாட்டுத் திருவிழாவில் தன் அற்பப் புத்தியைக் காட்டிக் கொண்டு சிரிக்கிறது; வாதப் பிரதி வாதங்களுக்கு இடம் கொடுக்கிறது - தமிழ் நாட்டுக்கு இது பெரும் கெட்ட வாய்ப்பே!
ஆரியப் பார்ப்பனர்களுக்கு என்று ஒரு நாடு கிடையாது. அவர்களுக்கென்று இருக்கும் சமஸ்கிருத மொழியோ செத்துச் சுண்ணாம்பாகிவிட்டது.
இந்த விரக்தியிலும், வெறுப்பிலும் தமிழர்களுக்கு என்று இருக்கின்ற தனிச் சிறப்புகளை அவர்களால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. தங்கள் ஆற்றாமையைப் பல வழிகளிலும், வடிவங்களிலும் காட்டிக் கொண்டு விடுகிறார்கள்!
அதன் வெளிப்பாடுதான் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மறுப்பது. தமிழ் செம்மொழி என்றால் கோணலாகச் சிரிப்பது போன்ற சில்லறைத் தனங்களில் அற்பத்தன்மைகளுடனும் அவர்கள் நடந்து கொள்கின்றனர்.
தமிழர்களிடம் அவர்கள் பதிய வைத்துள்ள மூடத்தனமான கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை ஒரு வகையில் அவர்களுக்கு அரணாக அமைந்து விடுவதால் பார்ப்பனர்களின் பிழைப்பு நடந்து கொண்டே இருக்கிறது.
தமிழர்களைத் தன்னுணர்வு கொள்ளச் செய்யவும், பண்பாட்டு மீட்சி பெறவும், அவர்களின் புத்தியை பிணைத்திருக்கும் பக்தி விலங்கை உடைப்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.
இந்த அடிப்படைப் பணியைத்தான் தந்தை பெரியார் மேற்கொண்டார்; திராவிடர் கழகம் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது.
தமிழர்கள் முன் நிற்கும் தலையாய பணி இதுதான். இங்கு பக்தி என்பது கடவுள் நம்பிக்கை என்பதை விட ஆரியத்திற்கு அடிமைப்பட்ட தன்மையே!
நம் பணி மேலும் வலிமையாகத் தொடரவும் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வீறுகொண்டு எழச் செய்யவும் தமிழர்களின் புத்தாண்டுப் பொங்கல் பொலிவு நாளில் உறுதி எடுப்போம்!
தமிழா தமிழனாக இரு! என்று தமிழர் தலைவர் கொடுத்த முழக்கம் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கட்டும்!
பொங்கலோ பொங்கல்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...