Sunday, January 29, 2012

செய்திச் சிதறல்கள்!


ஒய்திஸ் கொலவெறிடி? 1-7 கோடி பேர் இணையத்தில் பார்த்தனர்.
ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் ஒன்றும் புரியாத வர்களாக இருக்கிறார்கள் என்று பொருளோ! மொழி யையும் குலைத்து பெண்களையும் இழிவுபடுத்தி, பொருளையும் குழப்பி - ஒட்டு மொத்தத்தில் விளம்பரப் பலூனை வீதியில் பறக்கச்செய்து விட்டனர் அவ்வளவு தான்!
குஜராத் லோக் அயுக்தா தொடர்பான வழக்கில் ஆளுநர் நடவடிக்கை சரி என்கிறது குஜராத் உயர்நீதிமன்றம்
ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? முதல் அமைச் சரைக் கலக்காமல் இந்த முடிவை எடுக்கலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்புவது ஒருபுறம் இருக் கட்டும். கடந்த ஒன்பது ஆண்டு காலமாக லோக் - அயுக்தாவுக்கு நீதிபதியை நியமிக்க எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லையே முதல் அமைச்சர் மோடி. இதை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லையாம்!
இவர்தான் ஊழலற்ற பரிசுத்த யோவான் ஆயிற்றே -  ஏன் நீதிபதியை நியமிக்கவில்லை. மடியில் கனம் - அதனால் பயமோ!
லோக்பால் சட்டம் - ஊழல் ஒழிப்பு என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் தொண்டைத் தண்ணீர் வற்ற குரல் கொடுக்கும் - ரகளை செய்யும் பிஜேபி - தமது ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் லோக் - அயுக்தாவுக்கு கடந்த ஒன்பது ஆண்டு காலமாக நீதிபதியை நியமிக்காததுபற்றி மவுனம் சாதிப்பது ஏன்? ஓ, பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கும்பல் என்றாலே இரட்டை வேடம்தானோ!
வரதட்சணை வழக்கில் தண்டனையைக் குறைக்கலாம்.
மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை
இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்தியத் தண்டனைச் சட்டம் 498ஏ பிரிவின்கீழ் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை, மற்றும் அபராதமும் விதிக்கப்படுகிறது. வரதட்சணை வழக்கில் பிணையிலும் வெளி வர முடியாது.
கணவர்மீது வீண் பழி சுமத்தித் தண்டனை பெற் றுத் தரப்படுகிறது என்று காரணம் சொல்லப்படுகிறது. தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில்கூட இப்படி ஒரு கருத்துப் பேசப்பட்டு வருகிறது. ஏதோ ஓரிரண்டு இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காகத் தண்டனையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்கக் கூடாது.
ஆண் ஆதிக்கம் உடைய ஒரு சமுதாயம், தண் டனையைக் குறைத்தால் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே வாய்ப்பு அதிகம். இதுகுறித்து ஒரு முடிவை எடுக்குமுன் பொதுக் கருத்தைத் திரட்ட வேண்டும். குறிப்பாகப் பெண்களின் கருத்து என்ன என்பதுதான் முக்கியம்.
பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் சட்டமன் றங்களிலும் நாடாளுமன்றத்திலும் அளிக்கப்பட்டு இருந்தால், இதுபோன்ற பிரச்சினைகளில் வலிமை யான கருத்து வெளிப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருக்குமே!

ிருவண்ணாமலை அருகே மேல் செட்டிப்பட்டு கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை கோரி மக்கள் சாலை மறியல் !
பாரதம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஒடிய நிலையில் சுடுகாட்டுக்குப் பாதை கேட்டுப் போராடும் அவல நிலைதான் இன்றும்.
உயிரோடு இருக்கும் பொழுதுதான் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றால், பிணமான பிறகும்கூட நிம்மதி இல்லை என்பதுதான் யதார்த்தம்!
அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான் இந்தப் பிரச்சினை. மேல் செட்டிப்பட்டு கிராமத்தில்கூட தாழ்த்தப்பட்ட 100 குடும்பங்களுக்குத்தான் இந்தப் பிரச்சினை.
பட்டா நிலம் வழியாக செல்லுவதில் சிக்கல்.
செத்தபிறகு ஜாதி என்ன? மதம் என்ன? அனைவருக்கும் பொது மின் சுடுகாடு (கிராமங்கள் உள்பட)  ஏற்பாடு செய்யாவிட்டால் என்ன சுதந்திரம்? சுபிட்சம்? பெரும்பாலும் சுடுகாடுகளில் கால் வைக்க முடிவதில்லை. அவ்வளவு அசுத்தம் - மேலும் சமூக விரோதிகளின் உல்லாச பூங்கா! வெளிநாடுகளில் சுடுகாடு எப்படி தூய்மையாக இருக்கிறது! வெளி நாடுகள் சென்று வரும் நமது அமைச்சர்கள் இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாதா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...