Saturday, January 21, 2012

உதவத் தெரிந்த அக்கா


அந்தத் தெருவில் யார் வீட்டிலாவது வீட்டம்மா உடல் நலமின்றி இருப்ப தாகத் தெரிந்தால் புஷ்பா அக்கா சோறு சமைத்து, காய்கறி நறுக்கி சாம்பார், பொறியல் வைத்து விட்டு வருவது பழகிய காட்சி. அக்காவுக்கு தகவல் அனுப்ப வேண்டிய தில்லை. அவருக்கே தெரி யும்; உதவப் புறப்பட்டு விடுவார். இதனால் ஒரு நாள் அக்கா ஊரில் இல்லை என்றாலும் தெரு வில் பரஸ்பரம் கேட்டுக் கொள்வார்கள்; புஷ் பாக்கா காணோமே? என்று.

இந்தப் பழக்கம் கார ணமாக அக்கா சொல்லும் நல்ல நிகழ்ச்சி எதுவா னாலும் 15 பேருக்குக் குறை யாமல் ஆஜராகி விடு வார்கள்; வார பஜனையோ, கோவில் தரிசனமோ, மாத்ரு போஜனமோ எதுவா னாலும்.

இப்படித்தான் போன வாரம் அருகிலுள்ள ஒரு பள்ளியில் ராமாயண மகோத்சவம் நடப்பது தெரிய வந்ததும் காலை யிலேயே அக்கா பள்ளியில் ஆஜர். வாசலை பெருக்கி, தண்ணீர் தெளித்து, பல வண்ண ரங்கோலி போட்டு விட்டு அரங்கில் சென்று அமர்ந்தார். அவரது தெரு மக்களும் வந்து சேர்ந்தார் கள். அக்கா மடியில் பக்கத்து வீட்டுக் குழந்தை உரிமையுடன் வந்து அமர்ந் தது. அய்ரின் கண்ணு, இந் தப் பெரியவருக்கு நமஸ்தே சொல்லு என்று அக்கா சொன்னது கேட்டது.

ஆம். அக்காவுக்கு எல் லோரும் தோழிகள். இவர் என்ன சமூக சேவகியா, கவுன்சிலரா? நடுத்தர வர்க்க இல்லத்தரசி. இரு பிள்ளைகளின் தாய். கணவர் ஸ்வயம் சேவகர்.

(விஜயபாரதம் 27.1.2012) ஆர்.எஸ்.எஸ். வார ஏடு

யார் இந்த அக்கா? இவர் கணவர் ஒரு ஸ்வயம் சேவக் என்கிறதே யார் அந்தக் கணவர்.

அக்காவின் பெயர் என்ன?

அக்காவின் கணவர் பெயர் என்ன?

எந்த மாநிலம்?

எந்த ஊர்?

முகவரியே கிடை யாதா? மொட்டைத் தாதன் குட்டையில் விழுந் தான் என்றால் ஏதாவது புரியுமா?

ஆர்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் தொண் டில் சிறந்தவர்கள், பொது நலத் தொண்டர்கள் என்று பூதாகரமாகக் காட்டி, அமைப்புக்கு ஒரு கவர்ச்சியைக் காட்ட வேண்டும். அதன் மூலம் ஆர்.எஸ்.எசுக்கு ஒரு மரியாதையை, விளம் பரத்தை ஏற்படுத்த வேண் டும். அதற்காக எந்தக் கட்டுக் கதைகளையும் அளந்து விடத் தயார்! இதுதான் ஆர்.எஸ்.எஸ்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...