Thursday, January 19, 2012

மனுவாத ஆட்சியைக் கொண்டு வருவதே அன்னா ஹசாரேயின் நோக்கம்


(
இவர் அமெரிக்காவில் பிறந்த இந்தியர். ஒரு கல்வியாளர், சமூக இயலாளர், மனித உரிமைப் போராளியான இவர்  ஜாதிப் பிரிவினைக்கு எதிரானவரும், தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள்  இயக்கங்களின் ஆதரவாளரும் ஆவார்)
அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கம் கடந்த பல மாத காலமாக அரசியலிலும், ஊடகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் நீங்கலான இடது சாரி மக்கள், இந்த இயக்கம் ஒரு முன்னேற்றத் தன்மை கொண்டது என்று தாங்களாகவே நினைத்துக் கொண்டு, அதில் பங்கெடுத் துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு கொண்டனர். ஆனால் அதற்கு முன் அவர்கள் அந்த இயக்கத்தைப் பற்றி சரியாக பகுத்தாய்ந்து பார்க்கவில்லை.
விதிவிலக்காக அருந்ததி ராய் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையைக் குறிப்பிடலாம்.   கட்டுப்பாடற்ற சிவில் சமூக அடிப்படையிலான லோக் பாலி னால் மக்களாட்சிக்கு ஏற்பட இருந்த ஆபத்துகள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்த போதிலும் ஜன் லோக் பால் மசோதாவும், மாவோயிஸ்டுகளைப் போலவே அரசி னைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டது என்று தவறாக ஊகித்துக் கொண்டார்.  இந்தியாவில் வளர்ந்து வரும் மக்களாட்சி பற்றிய எதிர் பார்ப்புகளிலிருந்து பார்ப்பன முதலாளிகளைக் காப்பாற்றும் ஒரு முயற்சி அது என்றும் கூட நம்மால் கூற முடியும். விக்கிலீக் மற்றும் அதனைத் தொடர்ந்த ஊழல் விவகாரங்கள் வெளியான ஒரு நேரத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட் டுள்ளது என்று ராய் சுட்டிக் காட்டியுள் ளார். அந்த இயக்கத்திற்கு பெரும் பெரும் நிறுவனங்கள் அளிக்கும் ஆதரவையும், இயக்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அளவற்ற நிதி உதவியையும் வெளிச்சத் திற்கு கொண்டு வந்திருக்கிறார். அன்னா ஹசாரேயின் இயக்கம், மக்களாட்சியின் ஒரு வெற்றியல்ல, பேச்சுக் கலையின் வெற்றியே என்று ரஞ்சித் ஹோஸ்கோட் கூறியிருப்பது நினைவு கூரத்தக்கது.
ஹசாரேயின் இயக்கம் பற்றி ஊடகங்கள் மிகைப்படுத்தியே கூறிவந்துள்ளன
பொதுமக்களின் ஆதரவை எந்த அளவுக்கு இந்த இயக்கம் பெற்றிருக் கிறது என்று கூட ஒருவர் கேட்கக் கூடும்.  அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இன்றி, வெறும் நூற்றுக்கணக்கான மக்கள் சூழ அமர்ந்திருந்த அன்னா ஹசாரேயின் படத்தை அவுட்லுக் ஏடு தனது அட்டைப் படத்தில் போட்டிருந்தது. அந்த இயக்கத்திற்கு இருந்த பொதுமக்கள் ஆதரவை ஊடகங்கள் எப்போதுமே மிகைப்படுத்தியே கூறி வந்திருக்கின்றன என்றே தோன்றுகிறது. உண்மையில், இந்த இயக்கத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய கூறுகளில் ஊடகங்களின் பங்கு என்ன என்பது மிகவும் முக்கிய மான ஒன்றாகும்.
ஆனால் இந்த இயக்கம் ஏன் வளர்கிறது என்பது பற்றிய பகுத்தாய்வில் ஓர் உண்மையை எவரும் கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அது ஜாதி பற்றிய கூறுதான். அதைப் பற்றித்தான் இக் கட்டுரை ஆய்வு செய்ய முன்வந்துள்ளது.
இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களே ஹசாரே இயக்க ஆதரவாளர்கள்
இந்திய மக்களாட்சியில் இடஒதுக்கீடு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது; தாங்களும் அப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மக்களிடம் இருந்தும் எழுந்துள்ளது. அன்னா ஹசாரேயை ஆதரிப்பவர்களில் முக்கிய மய்யமாக விளங்குபவர் களுக்கு இட ஒதுக்கீட்டு நடைமுறை என்றாலே கசப்பாக இருப்பதாகும். கிரந்திகாரி மனுவாதி மோர்ச்சா என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.  அதன் தலைவர் பரத்வாஜ் என்பவர், இடஒதுக் கீடுதான் அனைத்து வகையான ஊழல்களுக்கும் ஆணிவேராகும். (தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...