Saturday, January 14, 2012

சென்னை பெரியார் திடலில் மூன்று நாள்கள் தை-1தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா! அறிஞர் பெருமக்கள் கலையுலக பெருமக்கள் பங்கேற்கின்றனர்


சென்னை, ஜன 14- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சென்னையில் மூன்று நாட்கள் தமிழ்புத்தாண்டு பொங்கல் விழா, பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் வகையில் திராவிட இனம் எழுச்சி பெறும் உறுதிமிக்க திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை பெரியார் திடலில் தை 1,2,3 (ஜனவரி 15,16,17) ஆகிய மூன்று நாள்கள் திராவிடர் திருநாளாக  வெகு சிறப்பாக நடைபெற உள்ள இந்நிகழ்வில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய மிக்க கலை நிகழ்ச்சிகளும், தமிழர்களின் பாரம்பரிய பல்சுவை உணவு விற்பனைக் கண்காட்சியும் நடைபெறு கின்றன.
பாரம்பரியப் பல்சுவை உணவுகளான சுடசுட எண்ணெயில் பொரித்து வழங்கப்படும் அசல் மணப்பாறை முறுக்கு முதல், திருவில்லிபுத்தூர் தித்திக்கும் அருமையான பால்கோவா, வாயில் போட்டவுடன் வழுக்கிச் செல்லும் திருநெல்வேலி அல்வா, உலகப் புகழ்பெற்ற விருதுநகர் வீச்சுப் புரோட்டாவும், திண்டுக்கல் சிறுமலைப் பழத்துடன் இன்னும் ஏராளமாய்ச் சுவைக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்நாள் விழா
15.1.2012 அன்று மாலை நடைபெறும் விழாவில் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை, டி.கே.எஸ்.கலைவாணன் குழுவினரின் ஏன் தமிழ் புத்தாண்டு? கிராமிய இசை மற்றும் திருச்சி கலைக் குழுவினரின் மார்கழியின் உச்சியில் மலரட்டும் தை ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.
இரண்டாம் நாள் விழா
16.1.2012 அன்று மாலை நடைபெறும் விழாவில்  திருத்தணி பன்னீர்செல்வம் அவர்களின் தனி ஆவர்த்தனம், திண்டுக்கல் சரவணன் மற்றும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் பங்கேற்கும்    நகைச்சுவை நிகழ்ச்சி, மற்றும் தை -1 தமிழ் புத்தாண்டு விளக்க கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி
17.1.2012 அன்று மாலை நடைபெறும் விழாவில்   தஞ்சை செல்வி கலைக் குழுவின் கிராமியத் திரைஇசை நிகழ்ச்சியும் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சியும்  நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தொழிலதிபர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பெருமக்கள் தேர்வு செய்யப்பட்டு, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது, சாதனையாளர் விருது  இவ்வாண்டு மூன்று நாள்களிலும் வழங்கப்படுகின்றது.
முக்கிய பிரமுகர்கள்
இம்மூன்று நாள் விழாவிலும் நடிகர்கள்   அருள்நிதி (கலைஞரின் பெயரன்), நடிகர் இயக்குநர் பொன் வண்ணன், நடிகை சரண்யா, நடிகர் ஒளிப்பதிவாளர் இளவரசு; திரைப்பட இயக்குநர்கள் சற்குணம்,  அமுதன்;  தமிழ்ப்பணியாற்றும் சான்றோர்கள்  மா.ஆண்டோபீட்டர், முனைவர் இளங்கோவன், ஒரிசா பாலு; எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் பாஸ்கர் சக்தி,  அஜயன்பாலா, ; தொழிலதிபர்கள் அபிராமி ராமநாதன், சிவக்குமார், போஸ்டர் ஆனந்தன்; ஓவியர்  அரஸ், அரசு ஆர்ட்ஸ் அரசு  ஆகியோர் பாராட்டப்பட இருக்கின்றனர்.மூன்று நாட்களிலும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் அறிஞர் பெருமக்களும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
இம்மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர்  கி.வீரமணி அவர்கள் பங்கேற்கின்றார்.
ஆரியப் புரட்டை முறியடிக்க, தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை உணர்வை ஊட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா இது! தமிழர்களே!,  குடும்பம் குடும்பமாகத் திரள்வீர்! திரள்வீர்!! தமிழர்கள் ஏற்றம் பெற திராவிட இன உணர்வினை கூர்மைப்டுத்திட வாரீர் வாரீர் என்று அழைக்கின்றோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...