Wednesday, December 7, 2011

சிறீரங்கத்தில் பார்ப்பனர்கள் பல்லக்கில் ஏறுவது முறியடிப்பு!

கழக முயற்சிக்குக் கைமேல்பலன்!
சிறீரங்கத்தில் பார்ப்பனர்கள் பல்லக்கில் ஏறுவது முறியடிப்பு!
பெரியார் சிலைக்கு பல அமைப்புகளும் மலர்மாலைகள்
சிறீரங்கத்தில் பல்லக்கில் பார்ப்பனரைத் தூக்கிச் செல்லுவது முறியடிக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி காவல்துறை பாதுகாப்போடு நடந்துசெல்லும் காட்சி இது (7.12.2011).
திருச்சி, டிச.7- திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் மனி தனை மனிதன் சுமக்கும் பிரம்மரத முறையை இன்று நடத்தியே தீருவோம் என்ற பார்ப்பனர்கள் முயற்சி முறி யடிக்கப்பட்டது.
திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரம்மரத முறைக்கு  கோவில் இணை ஆணையர் ஜெயராமன்  கடந் தாண்டு தடைவிதித்தார். ஆனால் பார்ப்பனர்கள் தடை மீறி பிரம்மரதம் நடத்துவோம்  என்று கூறி    நீதிமன்றம் வரை சென்றார்கள். நீதிமன்றம் பிரம்மரத முறையை அனு மதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில்  கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று மாலை  கைசிக புராணம் பாடத் தொடங்கி இன்று (டிச.7) அதிகாலை முடித்துவிட்டு பார்ப்பனர்கள் பிரம்மரதத்தில் ஏறி (மற்றவர்கள் தூக்கிச் செல்லுவது) வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏற்கெனவே நீதிமன்றத் தில் தடையிருப்பதாலும், திரா விடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரி வித்து வந்ததாலும், இந்த பிரம்மரத முறையை ஏற்றுக் கொள்ள பார்ப்பனர்கள், இந்து மதவெறி சக்திகளை துணைக்கு அழைத்திருந்தன. இந்த அமைப்புகள் நகரெங்கும் சுவரொட்டி களையும் ஒட்டியிருந்தன.
இந்நிலையில் திருச்சி யில் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்க வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பிரம்மரத முறையை தடுத்து நிறுத்துவோம் என்று அவசர அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையினை துண்டு பிரசுரமாக திருவரங்கம் முழு வதும் மாவட்ட தி.க. தலைவர்  மு.சேகர் தலைமையில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. காவல்துறை இணை ஆணையரைச் சந்தித்து, திராவிடர் கழகத் தலைவர் எழுதிய அறிக்கையினை கழகத் தோழர்கள் அளித்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அகிலபாரத இந்து மகாசபா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற   மத வெறி  அமைப்புகள் உறு துணையாக இருந்தும் கூட திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட அமைப்பு களின் கடும் எதிர்ப்பைக் கண்டு நடுங்கி, இந்த பிரம் மரத முறை வேண்டாம் என்று கூறி பராசரப்பட்டர், நரசிம்ம பட்டர் ஆகியோர் நடந்தே வீட்டிற்குச் சென்றனர். திரு வரங்கத்தில் அசம்பாவிதங் கள் ஏற்படும் என்ற அச்சத் தால்  காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் திருவரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெற்றி மனித சமுதாயத்திற்கான வெற்றி என கூறி திருவரங்கத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்துக் கொண்டாடின.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...