- கலி.பூங்குன்றன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
2011 நவம்பர் மாத சிந்தனையாளன் இதழில் தோழர் ஆனைமுத்து அவர்களால் எழுதப்பட்ட குற்றச் சாற்றுகளுக் கும், தவறான தகவல்களுக்கும் விடுதலை பதில் தந்திருந்தது (19.10.2011). அதற்கு பதில் அளிப்பதாக நினைத்துக் கொண்டு டிசம்பர் மாத சிந்தனையாளன் இதழில் 9 பக்கம் அளவுக்கு எழுதியுள்ளார்.
(1) 1971இல் மன்னார்குடியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் பற்றி மறுபடியும் எழுதியுள்ளார். தஞ்சை மாவட்ட முன்னாள் திரா விடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் தொண்டர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் போன்றவர்களே - அந்தக் கருத்தரங்கம் உள் நோக்கம் கொண்டது என்று தெளிவுபடுத் தினர் என்று ஒப்புக் கொண்டுள்ளார். நீண்ட கால இயக்கத் தொடர்புடையவர்களுக்கு அப்பேற்பட்ட சந்தேகம் தோன்றும் அளவுக்கு அந்த கருத்தரங்கை தோழர் ஆனைமுத்து அவர்கள் நடத்தினார் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வரவில்லையா?
அந்தக் கருத்தரங்கில் தந்தை பெரியார் இறு தியாக சொன்னவற்றிற்கு அவரால் ஆதாரம் காட்ட முடியவில்லை. பெரியார் பெருந்தொண்டர் து.மா.பெரியசாமி பெரியார் பேசியதை யெல்லாம் பதிவு செய்தார். அவர் அப்பொழுதே அந்த ஒலி நாடாவை இழந்துவிட்டார் என்று கூறுகிறார். (எல்லாம் புதிர்தான்!) எல்லா மாவட்டங்களுக்கும் சென்று இப்படிப்பட்ட விவாதங்களை இவர்கள் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் கூறினாராம்.
தந்தை பெரியார் அப்படி கூறியிருந்தால் அதற்குப் பின் இரண்டாண்டுகள் உயிரோடு இருந்த நிலையில் அவற்றைச் செயல்படுத்தி யிருப்பார் என்று தோழர் கலி.பூங்குன்றன் எழு தியுள்ளது பெரியாரையே பழிப்பதாகும் என்கிறார்.
எப்படி பெரியாரைப் பழிப்பதாகும்? கேட்டால் இதை நான் செய்வேன் - என்று தந்தை பெரியார் அக் கருத்தரங்கில் பேசவில்லையே! என்று அடுத்த வரியிலேயே குழப்புகிறார்.
அப்படியென்றால் பெரியார் செய்ய விரும் பாததை எடுத்துக் கொண்டு ஏன் சிலம்பம் ஆடுகிறார்? தனக்குச் சரியென்று பட்டதை உடனே செய்யக் கூடிய தலைவர் அல்லவா தந்தை பெரியார்? அவர் செய்வதாகச் சொல்ல வில்லையாம்! கருத்தரங்க ஏற்பாட்டுக்காரர்களான வே.ஆனை முத்து, து.மா.பெரியசாமி, தோலி ஆர்.சுப்பிர மணியம், சொரக்குடி வே.வாசுதேவன் ஆகிய வர்களைக் குறிப்பிட்டு அவர்களைத்தான் பெரியார் பணித்தாராம். இந்த நால்வரும் ஏன் அதைச் செய்யவில்லை என்ற கேள்வி இயல் பாக எழுந்துவிடுமே - தானாக முந்திக் கொண்டு அது ஒரு புதிர் என்கிறார்.
பதில் எழுத வந்தாரா? புதிர் போட வந்தாரா? ஒரே புதிராக இருக்கிறதே! இதற்கு முன் ஒரு புதிர் போட்டுள்ளார்! கணபதியும், நீடாமங் கலம் அ.ஆறுமுகமும் என் அப்படி பேசினார் கள்? என்பது ஒரு புதிர். அந்தப் புதிரை உரிய காலத்தில் தோலுரிப்பேன். அதற்கான போதிய நேரம் 2012 வரை எனக்கு வாய்க்காது என்கிறார். அடுத்து ஒரு புதிரைக் கேளுங்கள்.
இதை 5, 6 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செய்திருக்க வேண்டும் என்று 4.4.1971 மாலை 5.30 மணிக்குக் குறிப்பிட்டார் பெரியார்.
அதாவது, 1965-66-இலேயே இப்படி கருத் தரங்குகளை நடத்தியிருக்கவேண்டும் என்று பெரியார் கருதினாராம். அது ஏன்? இதுவும் ஒரு பெரிய வினா. என்னால் விடை தரப்படவேண்டிய வினா. அதற்கு விடை தர ஆயத்தமாக உள் ளேன். உண்மையான பெரியார் தொண்டர்கள் இதற்கெல்லாம் எனக்கு உதவிட முன்வாருங் கள் என அன்புடனும், பணிவுடனும் கோருகிறேன் - அடுத்து இப்படி ஒரு புதிரை போடுகிறார்.
இவரிடத்தில் உண்மை இருக்குமானால் அதைப் போட்டு உடைக்க வேண்டியதுதானே? அதற்கு ஏன் உண்மையான பெரியார் தொண் டர்களைத் தேடிக் கொண்டு ஒற்றைக்காலில் நிற்கிறார்? நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு புதிர் புதிர் என்று பூச்சாண்டி காட்டுகிறாரே - இந்த வயதில் இந்த விளையாட்டுகள் எல்லாம் தேவையா?
அய்யா மறைவுக்குப் பின் மேலும் பொறுப்பாகவும், கட்டுப் பாடாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்ற தகைமையின்றி, அம்மாவின் தலைமையை எதிர்த்தும் சுற்றறிக்கை போர் நடத்திப் பார்த்தார் - பயனில்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை (மூட்டை) கட்டிக் கொண்டு விட்டேன் என்ற நிலை! இப்பொழுது ஆற்றாமையின் வெளிப் பாட்டால் அலமருகின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
முடிந்த அளவுக்கு உருப்படியான பெரியார் தொண்டை செய்ய ஆசைப்படாமல் 40 ஆண்டு களுக்கு முன் அப்படி நடந்தது - இப்படி நடந் தது என்று பிரமை பிடித்தது போல எழுதுவது எல்லாம் நல்லது அல்ல; இந்த வயதில் இவையெல்லாம் தேவையா?
தந்தை பெரியார் கொள்கையில் இவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையும், மதிப்பும் இருக் கின்றன என்பதற்குப் பெரிய ஆய்வு தேவைப் படாது. கட்சியின் பெயர் ஒன்றே போதும். மார்க்கிய - பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியாம். பெரியாரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டு மார்க்சை முதலிடத்தில் கொண்டவர்கள் எல்லாம் பெரியாரைப் பற்றிப் பேசக் கிளம்பி விட்டார்கள். இதன் பொருள் என்ன? பெரி யாரின் கருத்துகள், சிந்தனைகள் போதுமானவையல்ல என்று எண்ணுவதுதானே? இந்த நாட்டுக் கான பொதுவுடைமை எது என்று தந்தை பெரியார் பேசவில்லையா? பொது வுரிமையா? பொது உடைமையா? என்பதுபற்றி எல்லாம் பகுத்தறிவுப் பகலவன் பேசாத -எழுதாத கருத்துக்களா? ஏன், தோழர் ஆனைமுத்து அவர்களே இந்த வகையில் பெரியார் கருத்துக்களை எடுத்து வைத்தது உண்டே! (சிந்தனையாளன், 18.9.1976 பக்கம் 8)
அதற்குப் பிறகு ஏன் இந்த சறுக்கல்? தந்தை பெரியாரின் கொள்கைகளை, சிந்தனை களை முழுமையாக நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொண்டவர்களை நோக்கி, பெரியாரை இரண் டாவது இடத்துக்கு தள்ளியவர்கள் வினா தொடுக்க அடிப்படை தகுதியே கிடையாது!
அதுவும் முதலில் பெரியார் சம உரிமைக் கழகம் (1976) - அடுத்து மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி (1988). பெயர் வைப்பதில் கூட இவ்வளவு தடுமாற்றமா? (2) இடஒதுக்கீடு சம்பந்தமாக அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களிடம் பேசியதுபற்றி ஆனைமுத்து அவர்கள் குறிப் பிட்டுள்ளார்.உடன் சென்ற சேலம் சித்தய்யன் அவர்கள் ஆனைமுத்து உங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்தான் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களிடம் அறிமுகப் படுத்தினாராம். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? திராவிடர் கழகத்தின் கடைசி கருப்புச் சட்டைத் தொண்டன் கூட இந்த நிலைக்கு ஆளாக மாட்டானே!
பொதுவாக ஆனைமுத்து அவர்களைப் பற்றி அப்படி ஒரு கருத்து உண்டு. அதை மெய்ப் பிக்க இதுவும் ஒரு சான்றே!
அவருடைய கடந்த கால கதைகளை அறிந் தவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமான ஒன்றல்ல.
சிந்தனையாளன் இதழில் (சூன் 2004) தலையங்கப் பகுதியில் அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தன்னிலை விளக்கம் ஜோராகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூவிக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருக்க, முருக்கன்குடி தெருக்களில் ஒரு கார் ஓடியது; சிறுவர்கள் அதைத் தொடர்ந்து ஓடினர். 1946இல் இந்திய - மற்றும் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. சென்னக்குணம் என்ற ஊருக்குச் சென்று தேர்தல் நடப்பதைப் பார்த்தேன். அதே ஊரில் 1946 அக்டோபரில் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றது. அதை நடத்தியவர்களில் நானும் ஒருவன். அப்போது நான் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன்.
நான் 4.3.1940 முதல் பார்ப்பனரல்லாத சுயமரியாதை இயக்கத்தினன். 28.10.1944 முதல் திராவிடர் கழகத்தவன்.
1946 அக்டோபர் முதல் 1958 முடிய திரா விடர் கழகம், வன்னியர் சங்கம் இரண்டிலும் தீவிரமாக செயல்பட்டவன். வன்னியர் சமூகத்துக்கு ஒரு நல்ல தலைவரே அமைய வில்லை. அதனால்தான் அச் சமூகம் முன்னேறவில்லை என 1958இல் தந்தை பெரியார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அன்று முதல் துப்புரவாக சாதி சங்கத் தொடர்பை அறுத்துக் கொண்டேன். இன்று வரை அப்படியே உள்ளேன் என்று சிந்தனையாளன் இதழின் பெயர் போட்டு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பெரிய விளக்கம் தேவைப்படாது. ஜாதி சங்கத்திலும், திராவிடர் கழகத்திலும் ஒரே நேரத்தில் இருந்ததாகச் சொல்லும் ஒருவர் எப்படிப்பட்ட கொள்கைவாதி என்பதை வாசகர் களின் முடிவுக்கே விட்டுவிடலாம். இது என்ன இரட்டை வேடம்! 1944 முதல் 1958 வரை 14 ஆண்டுகள் இப்படி இருந்திருக்கிறார். ஆகா! எப்படிப்பட்ட கொள்கை வீரர்! இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி என்பது சாதாரணமானது தானா? இவர்கள் எல்லாம் கொள்கைகளைப் பேச வந்ததுதான் வேடிக்கை!
இதற்குப் பெரிய விளக்கம் தேவைப்படாது. ஜாதி சங்கத்திலும், திராவிடர் கழகத்திலும் ஒரே நேரத்தில் இருந்ததாகச் சொல்லும் ஒருவர் எப்படிப்பட்ட கொள்கைவாதி என்பதை வாசகர் களின் முடிவுக்கே விட்டுவிடலாம். இது என்ன இரட்டை வேடம்! 1944 முதல் 1958 வரை 14 ஆண்டுகள் இப்படி இருந்திருக்கிறார். ஆகா! எப்படிப்பட்ட கொள்கை வீரர்! இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி என்பது சாதாரணமானது தானா? இவர்கள் எல்லாம் கொள்கைகளைப் பேச வந்ததுதான் வேடிக்கை!
(3) திராவிடர்கழகம் வைத்த கோரிக்கை ஒன்றுதான் - வருமான வரம்பு ஆணை நீக்கம். அதற்கு அதிக விலையை தி.க. தந்தது. அதற்கான வெற்றியில் அவர்கள் பூரிப் படையலாம். அது மிகச் சரி.
ஆனால் 50 விழுக்காடு ஆக இட ஒதுக் கீடு அளவு உயர்த்தப்பட்டதில் அதன் பிரச விப்பில், அவர்களின் பங்கு எதுவும் இல்லை என்பதை வெட்கத்தோடு அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
வருமான வரம்பு ஆணை ஒழிக்கப்பட்ட தற்குக் காரணம் திராவிடர் கழகம் என்பதை வேறு வழியின்றி எப்படியோ ஒப்புக் கொண்டு உள்ளார். அந்த ஒழிப்பின் தொடர்ச்சிதானே 31 சதவிகிதம் 50 ஆக உயர்ந்தது?
1980 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கே காரணம் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் இட ஒதுக்கீட்டில் கொண்டு வந்த வருமான வரம்பு ஆணை தானே? ஆனைமுத்து அவர்கள் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலிலும் அந்தத் தோல்வி தொடரும் என்ற நிலையில் வருமான வரம்பு ஆணையை ரத்து செய்த தோடு மட்டுமல்லாமல், இட ஒதுக்கீட்டில் வேறு யாருக்கும் சளைத்தவன் அல்ல நான் என்று காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் - நெருக்கடியால் தானே 31 அய் 50 சதவிகிதமாக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.? அந்த நெருக்கடியைக் கொடுத்ததே தி.க. தான் என்பதை மறைமுகமாக தோழர் ஆனை முத்து அவர்களும் ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் அதற்கு மாறாக வாய்ச் சாங்குலித் தனம் அடிப்பது ஏன்?
வருமான வரம்பு ஆணை தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குக் கூட தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு குறைந்த பட்சம் அழைப்பாவது உண்டா? வாய்க்காலைக் கடக்க முடிகிறதா என்று முதலில் பாருங்கள். கடலில் நீச்சல் அடிப் பதைப் பின்னர் பேசிக்கொள்ளலாம்.
50 சதவிகிதம் கொண்டு வந்ததற்குப் பிறகும் அதற்கு எப்படி எப்படி எல்லாம் ஆபத்து வந்தது? வீதி மன்றத்தில் மட்டுமல்ல - உச்சநீதிமன்றம் வரை தொடர்ந்து சென்று (Intervener) காப்பாற்றியது யார்? வருமான வரம்பு ஆணைரத்துக்கோ, 50 சதவிகித பாதுகாப்புக்கோ தோழர் ஆனைமுத்து அவர்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன? போராட்டங்கள் என்ன? நீதிமன்ற நடவடிக்கைகள் என்ன? விரலை மடக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். லாட்ஜில் உட்கார்ந்து கொண்டு நான்கு பேர் பேசினோம் - அமைச்சரிடம் மனு கொடுத் தோம் என்பதெல்லாம் கவைக்கு உதவுமா?
நாள் ஒன்றுக்கு முதல் அமைச்சரிடமும், அமைச்சர்களி டமும், அதிகாரிகளிடமும் ஆயி ரக்கணக்கான மனுக்களை மக்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனு கொடுப்ப தாலேயே காரியம் ஆகிவிடும் என்றால், நாடு எங்கேயோ போயிருக்குமே!
அதுவும் இட ஒதுக்கீட்டில் ஒன்றைச் சாதிப்பது என்பது சாதாரணமானதுதானா? தந்தை பெரியார் அவர்களே எவ்வளவு போராட வேண்டியிருந்தது? எத்தனை மாநாடுகள்? எத்தனைப் போராட்டங்கள்? என்ன விளையாட்டுக் காரியமா? மனு கொடுத்தேன் மந்திரியிடம் வேலையாகிவிட்டது என்று சொல்லுவதற்கு. இப்படி எல்லாம் சொல் லுவதற்கு வெட்கப்பட வேண்டாமா? (தோழர் ஆனைமுத்து பயன் படுத்தியுள்ள வார்த்தை தான்!) ஆணை பிறப்பித்தாரே தவிர, எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மனதில் ஒரு தோல்வி உணர்வு குமைந்து கொண்டே தான் இருந்தது. பல நேரங்களில் அதனை வெளிப்படுத்தவும் செய்தாரே!
கோவை மாநகராட்சி தொடக்கவிழாவில் (22.7.1981) ஏழை மக்கள் ஒன்று சேர்ந்து உரிமைக் குரல் கொடுத்தால், இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வர நான் நிச்சயம் விரும்புகிறேன் என்றாரே! அதோடு நிறுத்தினாரா? பாரதி விழாவிலே (17.12.1982) என்ன பேசினார் முதல்வர் எம்.ஜி.ஆர்.?
வருமான வரி செலுத்த வேண்டாதவர்களை பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகக் கருதி அவர்களுக்குச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது என்று பேசவில்லையா?
உடனடியாக ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளைப் பெரியார் திடலில் கூட்டி அதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கச்செய்தது திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தானே?
வண்டி வண்டியாக இருக்கிறது தகவல் களும், நடவடிக் கைகளும். கிட்டே நெருங்க முடியாது ஆனைமுத்து போன்றவர் களால்.
(4) கடைசி கடைசியாக ஒரு சவால் விட்டுள்ளார் - திராவிடர் கழகத்தை நோக்கி - சபாஷ் - சரியான சவால் - வரவேற்கிறோம்.
என்ன எழுதுகிறார்? இரண்டு கேள்வி களை நம் முன் வைக்கிறாராம் - விடை சொல் லுங்கள் பார்ப்போம் என்று வீராவேசம் கொப்பளிக்க எழுதியிருக்கிறார். என்ன அந்த இரண்டு கேள்விகள்? அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால், தன் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராகவே இருக்கிறார்.
கேள்வி-1: இவ்வளவு நிகழ்ச்சிகளிலும், தி.க. அறிக்கைகளிலும், சொற்பொழிவுகளி லும், அனைத்துக் கட்சிக் கூட்டறிக்கையிலும் அரசு நடத்திய அனைத்துக் கட்சிகள் கூட்டத் திலும் - மருந்துக்காவது, பிற்படுத்தப் பட்டோ ருக்கு இப்போது அளிக்கப்படுகிற இடஒதுக் கீட்டு அளவை உயர்த்த வேண்டும் என்றோ, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 31இலிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்றோ என்றா வது திராவிடர் கழகத்தாரால் கோரிக்கை வைக்கப்பட்டதா?
கேள்வி-2 : 3.7.1979 முதல் 31.1.1980 முடிய உள்ள நெடிய காலத்தில் விடுதலை நாளிதழில் அல்லது உண்மை மாதமிரு இதழில் அல்லது ‘The Modern Rationalist’ ஆங்கில மாத இதழில் 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்துங்கள் என்று, என்றைக்காவது திராவிடர் கழகத்தின ரால் எழுதப்பட்டதா?
அப்படி எழுதியிருந்தால் - எந்தெந்த நாளில், எந்தெந்த ஏட்டில், எத்தனையாவது பக்கத்தில் திராவிடர் கழகம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 விழுக் காட்டிலிருந்து உயர்த்திடுக! என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தது என்று வெளியிட முடியுமா? சான்று உண்டா? என்று சவால் விடுத்துள்ளார். சபாஷ் சரியான கேள்வி! வரவேற்கிறோம் - சான்று உண்டு. தோழர் ஆனைமுத்து அவர் களே சான்றுண்டு. இதோ அந்தச் சான்று.
14.7.1979 சனியன்று சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பிற்படுத்தப் பட்டோர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ:
தீர்மானம்-3: பிற்படுத்தப்பட்டவர்கள் மக்கள் தொகையில் சுமார் 75 சதவிகிதத்திற்கு மேல் இருந்தாலும், அவர்களுக்கு 31 சதவிகித அளவுக்குத்தான் இட ஒதுக்கீடு தற்போது தரப்படுவதானது, சமூக நீதி கண்ணோட் டத்தில் பெருத்த அநீதியாகும். சமவாய்ப்புச் சமுதாயம் அமைய வேண்டுமானால் மேடு பள்ளங்கள் சமன் செய்யப்பட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசரம், அவசியம் என்பதை இம்மாநாடு ஒரு மனதாகத் தெரிவித்துக் கொள்கிறது என்பதுதான் அத்தீர்மானம்.
தேதி சொல்லியாயிற்று, இடம் சொல்லியாயிற்று, தீர்மானத்தின் எண்ணும், தீர்மானமும் சொல்லியாயிற்று.
விடுதலையில் வெளிவந்ததா?எந்தத் தேதியில் வெளிவந்தது? எத்தனையாவது பக்கத்தில் வெளிவந்தது? அதையும் சொன்னால் தான் தோழர் ஆனைமுத்து திருப்திப்படுவார் - தன் தோல்வியையும் ஒப்புக் கொள்வார் - எழுதியது தவறுதான் என்றும் ஏற்றுக் கொள்வார்.
இதோ ஆதாரம்: விடுதலை 15.7.1979 பக்கம் - முதற்பக்கம். போதுமா? இந்தச் சவால்கள் எல்லாம் கறுப்புச் சட்டைகளிடம் வேண்டாம்! அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் மருந்துக்காவது இப்பொதுள்ள இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்று தி.க. சொன்ன துண்டா என்று சவால் விடுத்துள்ளார்.
அதற்கும் பதிலடி இதோ:
வருமான வரம்பு ஆணை தொடர்பாக எம்.ஜி.ஆர். அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே கூட (21.1.1980) திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒன்றை முக்கியமாகச் சுட்டிக் காட்டியுள்ளாரே!
கல்வி நிலையங்களிலும் உத்தியோகங்களிலும் பிற்படுத்தப் பட்டோருக்கு 25 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தது. 75 சதவிகிதம் இருக்கும் மக்கள் தொகைக்கு. அவர்கள் விகிதாச்சாரப்படி இந்த இடஒதுக்கீடு போதவே போதாது! என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லையே தமிழர் தலைவர். முழுவதையும் அறியாமல் அரைகுறையாக எழுதுவது யார்? வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.
(5) கடைசியாக நெருக்கடி நிலையை நான் ஆதரித்தேனா? பொய், சுத்தப் பொய் என்று சத்தியம் செய்கிறார்.
நெருக்கடி காலத்தில் அவர் வெளியிட்ட சிந்தனை யாளன் இதழ்களைப் புரட்டினால் ஒவ்வொரு வாரமும் பிரதமர் இந்திரா அம்மை யாரைப் பாராட்டும் ஏதாவது ஒரு தகவல் இடம் பெற்று இருப்பதைப் பார்க்க முடியும்.
இந்திய நிலைமைக்கு ஏற்ற சோஷலிசம் எனும் தலைப்பில் சிந்தனையாளன் அட்டைப் படத்தின் அரை பக்கத்தில் பெரியார் படம் போட்டு, மீதி அரைப் பக்கத்தில் பிரதமர் இந்திரா காந்தி படம் போட்டு அவரின் கருத்துரைகள் (சிந்தனையாளன், 19.6.1976-அட்டைப்படம்)
அடுத்து பெரியார் தந்த வேலைத் திட்டம் ஒரு முழு பக்கம், இன்னொரு முழு பக்கத்தில் பிரதமர் இந்திராவின் 20 அம்ச பொருளாதாரத் திட்டம் பிரசுரிப்பு. (சிந்தனையாளன், 19.6.1976).
காங்கிரஸ் ஊழியர்களிடையே நிதி அமைச்சர் சி.எஸ். எனும் தலைப்பில் தலையங்கம்.
தி.மு.க. மந்திரிகளுக்குக் குட்டு, சி.சுப்பிரமணியம் பேச்சுக்கு சொட்டு. காங்கிரஸ் மக்கள் மட்டத்தில் செல்ல வேண்டுமானால் என் னென்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரை கள் வேறு! (சிந்தனையாளன், 4.12.1976)
இது போல் எத்தனை எத்தனையோ உண்டு.
நெருக்கடி நிலை காலத்தில் தோழர் ஆனைமுத்து அவர்களின் நிலைப்பாடும் மகா மகா ராஜதந்திரங் களும் எந்த நிலை யில் இருந்தன என்பதற்கான சாட்சியங் கள் இவை! இவை எவற்றில் வடிகட்டப்பட்டவை என்பது தோழர் ஆனைமுத்து அவர்களுக்கே வெளிச்சம்!
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் கோரிக்கைகளால்தான் 31 சதவிகித இட ஒதுக்கீடு உயர்த்தப் பட்டது குருடனுக்கும், செவிடனுக்கும், ஊமையனுக்கு கூட தெரியு மாம். எழுதுகிறார் தோழர் ஆனைமுத்து - ஆத் திரத்தின் அடி வயிற்றிலிருந்து. குருடன் செவிடன் ஊமையன் என்ற சொற்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்பது நாகரீகம், மனிதநேயம் அறிந்தவர் களுக்கு நன்றாகவே தெரிந்த ஆரம்பப் பாடம்.
நாம் அவ்வாறெல்லாம் அந்த முதியவரைச் சொல்லப் போவதில்லை. அந்தக் குறைபாடுகள் எல்லாம் இல்லாது இருந்தும் பார்வை சரியில்லையே - வார்த்தைகளிலும் வாய்மை இல்லையே. அதற்காகப் பரிதாபப்படுகிறோம்.
கடைசியாக ஒன்று. அவரே கையொப்ப மிட்டு திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு எழுதிய கடிதம்.
திராவிடர் கழகத் தலைவர் தோழர் கி.வீர மணி அவர்களுக்கு, வணக்கம் என்று குறிப் பிட்டு (23.10.2006) தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் எழுதிய அச்சிட்ட கடிதத்தில் எடுத்த எடுப்பிலேயே என்ன குறிப்பிட்டுள்ளார்?
இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமைகளைப் பெற்றுத்தரவும், காப்பாற்றிடவும் உங்கள் தலைமையில் உள்ள கட்சியும், இயக்கமும் ஆற்றியுள்ள பங்களிப்புக்கு மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், அனைத்திந்திய ஒடுக்கப் பட்ட வகுப்பினர் பேரவையின் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படி எழுதியவர்தான் தோழர் ஆனைமுத்து அவர்கள். விளக்கம் தேவையா?
- - - - - - - - - - - - -
ஊரை, உலகத்தை ஏய்க்கும் பொய்யர் யார்?
அரசின் 01.02.1980 நாளிட்ட ஆணைபற்றி விடுதலை நாளிதழில் 25.1.1980, 26.1.1980இல் அரைகுறை மனத்துடன் வெளியிடப்பட்ட முதல் பக்க தலைப்புச் செய்தியாக (Banner News) பாராட்டத் தக்க 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உத்தரவை - தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும் என்று ஒரு வழமையான பாராட்டுச் செய்தியாகத்தான் வெளி யிட்டுள்ளனர் என்று எழுதுகிறார்.
அரசின் 01.02.1980 நாளிட்ட ஆணைபற்றி விடுதலை நாளிதழில் 25.1.1980, 26.1.1980இல் அரைகுறை மனத்துடன் வெளியிடப்பட்ட முதல் பக்க தலைப்புச் செய்தியாக (Banner News) பாராட்டத் தக்க 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உத்தரவை - தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும் என்று ஒரு வழமையான பாராட்டுச் செய்தியாகத்தான் வெளி யிட்டுள்ளனர் என்று எழுதுகிறார்.
பாராட்டத்தக்க 50 சதவிகித இட ஒதுக்கீடு உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவேண்டும் என்று தலைப்புப் போட்டது தோழர் ஆனைமுத்து அவர்களின் கண்ணோட்டத்தில் ஒரு வழமையான பாராட்டுச் செய்தியாம். தீவிரமாகச் செயல்படுத்தக் கூடாது என்று போட்டிருக்க வேண்டுமோ! (ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்பார்கள்!)
இதில் இன்னொரு இருட்டடிப்பும் இருக்கிறது. 25 ஆம் தேதியல்ல அதற்கு முதல் நாள் 24 ஆம் தேதியே விடுதலை தலைப்புச் செய்தியாக வெளி யிட்டது, என்ன தெரியுமா?
வெற்றி! வெற்றி! கழகக் கோரிக்கை மகத்தான வெற்றி! ஒன்பதாயிரம் ரூபாய் வரம்பாணை ரத்து! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 50 சதவிகிதம் என்று தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டதே விடுதலை - அதனை ஏன் மறைத்து எழுதிட வேண்டும்?
ஆதாயமில்லாமலா? அதில் வெற்றி! கழகக் கோரிக்கை மகத்தான வெற்றி - என்று இருக் கிறதே - அதனை அவரால் இருட்டடிக்காமல் வெளி யிட முடியுமா? அப்படி வெளியிட்டால் திராவிடர் கழகத்துக்கும், அதன் பொதுச்செயலாளருக்கும் அல்லவா பெருமையைச் சேர்த்துவிடும்.
இந்தப் பிரச்சினையில் கூடுதல் தகவல்கள் உண்டு. ஏதோ வழமையான பாராட்டுச் செய்தியாக விடுதலை வெளியிட்டுள்ளது என்கிறாரே - அது உண்மையா?
தோழர் ஆனைமுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ள அதே தேதி விடுதலையில் கையொப்பமிட்டு தலையங்கம் தீட்டினாரே - திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
தலைப்பு என்ன தெரியுமா? தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நமது பாராட்டுதலும், நன்றியும்! என்பதுதானே அந்தத் தலையங்க அறிக்கையின் தலைப்பு!
அந்தத் தலையங்கத்திலேயேகூட ஒன்று முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதே!
பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் 68 முதல் 72 சதவிகிதமாகும். (முஸ்லிம்கள் அத்தனைப் பேரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் உள்ளனர் என்பதையும் கணக்கெடுத்துப் பார்த்தால்) தற்போது தமிழக அரசு ஒதுக்கியுள்ள 50 சதவிகித இடங்கள் அதிகமானது என்று எவரும் கூப்பாடு போட முடியாது. 72 சதவிகிதத்தினர் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பங்கு கிட்டவில்லையே என்ற ஆதங்கம் இன்னமும் நமக்கு உண்டு என்று எழுதினாரே!
மேலும் ஒரு முக்கிய தகவல் உண்டு. எம்.ஜி.ஆர். அரசின் இந்த ஆணைக்காக தமிழ்நாடு முழுவதும் எட்டு நாட்கள் (1980 பிப்ரவரி 10 முதல் 17 முடிய) பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை காப்பு - நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டங்களை நடத்தச் சொல்லி அறிக்கை வெளியிட்டாரே திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் (விடுதலை 28.1.1980, பக்கம் 1). அவ்வாறு நடந்தவும் பட்டதே!
அந்த அறிக்கையிலே முக்கியமாகக் காணப் படுவது என்ன தெரியுமா?
பார்ப்பன ஏடுகள் துவக்கியுள்ள இட ஒதுக்கீடு பற்றிய பனிப்போர் (Cold War on Reservation) புரட்டினையும் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பான அக்கூட்டங்களில் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் எழுதியுள்ளாரே!
பிற்படுத்தப்பட்டோர் வெற்றி பெற்றுவிட்டனர் என்ற மயக்கத்தில் விரைவில் உருவாகத் துடிக்கும் பார்ப்பன எதிர்ப்பை அலட்சியப்படுத்தக் கூடாது நாம்! என்றல்லவா அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஏன் இந்தக் கவலை இந்தத் தலைவருக்கு? அரும்பாடுபட்டு மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த நாற்றாங்காலை நள்ளிரவு திருடர்கள் அபகரித்துவிடக் கூடாதே!
உழைத்த உழவனுக்கு தானே வெள்ளா ண்மையைக் காப்பாற்றுவதிலும் கவலை இருக்க முடியும்?
லாட்ஜ்களில் உட்கார்ந்துகொண்டு மடம் கட்டியவர் களுக்கும் வெறும் விமர்சன கர்த்தாக் களுக்கும் ஏது கவலை?
50 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டதில் தி.க. ஆற்றியதாக எந்தப் பங்களிப்பும் இல்லை. அதற்குப் பிறகும் அவர்கள் உரிமை கொண்டா டினால் அது ஊரையும், உலகத்தையும் ஏய்க்கும் பொய்யே! பெரும் புளுகே! என்று எழுதியுள்ளாரே!
யார் பொய்யர்?
யார் பொய்யர்?
உண்மைகளும், தகவல்களும் இவ்வாறு குவிந்திருக்க, அவற்றை இருட்டடிக்கும் இவர்தான் மெய்யன்பரோ!
ஊரையும், உலகத்தையும் ஏய்க்கும் பொய்யே! பெரும் புளுகே! என்பதை - அதன் உற்பத்தியாளரே திரும்பப் பெற்றுக் கொள்வாராக!
No comments:
Post a Comment