Thursday, December 22, 2011

உடலின் நீர்ச்சத்துக் குறைவு ஏற்படும்போது எந்த பானத்தை நீங்கள் பருகக்கூடாது?


பேராசிரியர் ரான் மாகான்
உங்கள் உடலில் நீர்ச்சத்துக் குறைவு ஏற்படும்போது எந்த பானத்தை வேண்டு மானாலும், சாராயமானாலும் சரி, தேநீர், காப்பி ஆனாலும் சரி, நீங்கள் அருந்தலாம்.
எந்த பானமும் உங்கள் உடலின் நீர்ச்சத்துக் குறைவைப் போக்கவே உதவும். ஆனால் கடல் தண்ணீரை மட்டும் அருந்தவே கூடாது.
தண்ணீரைத் தவிர மற்ற பானங்கள் நீர்ச்சத்துக் குறைவை ஏற்படுத்துகிறது என்ற வியப்பளிக்கும் கருத்துக்கு எந்த வித அறிவியல் அடிப்படையும் கிடையாது. காஃபின் அதிக நீரிழப்பை ஏற்படுத்துகிறது.  ஆனால் நீங்கள் காபி அருந்துவதால் ஒரு சிறிதளவு காஃபின் மட்டுமே உங்கள் உடலில் சேர்கிறது. தேநீர், காபி, பால், பழரசம் ஆகிய அனைத்துமே குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து இழப்பை  சம அளவில் போக்குகின்றன.
ஆபர்டன் மருத்துவப் பள்ளி பல்கலைக் கழக மனித உடலியல் பேராசிரியரான ரான் மாகான் (Ron Maughan) உடலில் நீரிழப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்பட்ட சாராயத்தின் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்ததில், மனிதரின் சராசரி நீர்ச்சத்து நிலையின் மீது மிகச் சிறிதளவே சாராயம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளார்.
4 விழுக்காட்டுக்கும் குறைவான சாராயம் உள்ள அடர்த்தி குறைவான லேகர் பீர் போன்ற பானங்கள் உடலின் நீர்ச் சத்துக் குறைபாட்டைப் போக்கப் பயன்படுத்தலாம் என்று Journal of Applied Physiology என்ற  இதழில் வெளியிடப்பட்டுள்ள அவரது சோதனையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு மாறாக, கடல் நீர் என்பது நீரிழப்பை ஏற்படுத்துவது என்பதால், நீங்கள் அதை அருந்தினால் உங்களுக்கு அது பெருங்கேட்டையே விளைவிக்கும்.  நீங்கள் சிறிதளவு கடல் நீரைக் குடித்துவிட்டாலும், உங்கள் உடலின் செல்களில் உள்ள எல்லா நீரும், அதிக அளவில் உப்பு கலந்திருக்கம் நீரை நோக்கியே, அதன் உப்புத் தன்மையைக் குறைக்கும் நோக்கில் (osmosis) சென்றுவிடும்.  இதனால் உங்கள் உடல் செல்கள் நீர்ச் சத்து அற்றவையாக ஆகிவிடும். சில நேரங்களில் மூச்சுத் திணறல், மூளை தன் செயல்பாட்டை இழந்துவிடுதல், கல்லீரல், சிறுநீரகங்கள் செயலற்றுப் போதல் ஆகியவையும் ஏற்பட நேரிடலாம்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...