ஒரு கோப்பை காப்பியில்தான் அதிக அளவு காஃபின் உள்ளது.
காப்பிக் கொட்டையில் இருப்பதை விட உலர்ந்த தேயிலையில் அதிக அளவு காஃபின் உள்ளது. ஆனால் ஒரே அளவுள்ள தேநீரில் இருக்கும் காஃபினை விட அதே அளவுள்ள காப்பியில் மூன்று மடங்கு காஃபின் இருக்கிறது. காப்பி தயாரிக்க அதிக கொட்டை வேண்டும் என்பதுதான் இதன் காரணம்.
காப்பி மற்றும் தேநீரில் உள்ள காஃபினின் அளவு பல உண்மைகளைப் பொருத்தது. நீரின் கொதி நிலை எந்த அளவில் இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான காஃபின் காப்பிக் கொட்டையில் இருந்தோ, தேயிலையில் இருந்தோ பெறப்படுகிறது. காய்ச்சி வடிகட்டும் காப்பியில் இருப்பதை விட, நீராவியின் அழுத்தத்தில் தயாரிக்கப்படும் எக்ஸ்பிரசோ காப்பியில் ஒவ்வொரு துளியிலும் அதிக காஃபின் இருக்கும். காப்பிக் கொட்டை அல்லது தேயிலை ஆகியவற்றுடன் எவ்வளவு நேரத்திற்கு தண்ணீர்தொடர்பு கொண்டிருக்கிறதோ, அதைப் பொருத்தே அவற்றில் உள்ள காஃபின் அளவும் மாறுபடும். நீண்ட நேரம் தொடர்பு இருந்தால் அதிக அளவு காஃபின் இருக்கும்.
அத்துடன் காப்பி அல்லது தேயிலை எங்கு வளர்க்கப்பட்டது, வறுக்கப்பட்டது, பறித்து பதப்படுத்தப்பட்டது என்பது போன்றவையும் முக்கியமானது.
காப்பிக் கொட்டை எவ்வளவு கருப்பாக வறுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதில் குறைவான காஃபின் இருக்கும். தேயிலையைப் பொருத்தவரை, பெரிய இலைகளில் இருப்பதை விட துளிர்இலைகளில் அதிக காஃபின் உள்ளது.
30 மில்லி ( ஒரு அவுன்ஸ்) எக்ஸ்பிரசோ காப்பியில் உள்ள காஃபின் அளவுதான் 150 மில்லி (5 அவுன்ஸ்) கொதிக்க வைத்த காப்பியிலும் உள்ளது. அதனால் ஒரு கோப்பை கொதிக்க வைத்த காப்பி அருந்துவதால் அதிக அளவு காஃபின் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஆனால், ஒரு கோப்பை இன்ஸ்டன்ட் காப்பியில், வடிகட்டிய காப்பியில் இருப்பதில் பாதி அளவு காஃபின்தான் இருக்கிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment