மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்!
பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார்களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.
தெய்வத்தன்மை பொருந்திய நீர் நிலைகளிலும், ஆறுகளிலும் வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்து கொள்கின்றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலைகளில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையை பார்த்தால் போற்றத்தக்க நீர் நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடையதாகிறது. மந்திர நீரை விட முடி மழிப்பாளனின் கை நீர் மேன்மையானது. தலைமொட்டையானாலும் தாழ்வான எண்ணங்களும் சாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்கபடுவதில்லை அல்லவா?
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா
- ஆந்திர சீர்திருத்தவாதி வேமண்ணா
பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!
பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண்டும். அய்யருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை. பையனுக்கு கல்யாணம்! அழை அய்யரை; சாந்தி முகூர்த்தம்; கூப்பிடு அய்யரை! பொண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி; கூப்பிடு அய்யரை! பிள்ளை பிறந்தது; கூப்பிடு அய்யரை! பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாவம் போகத் தானம் கொடுக்க, அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு; இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்; கூப்பிடு அய்யரை! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடி போக, பிற, பிற; அழை அய்யரை கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையா சம்பந்தியாக, கிரக தோஷத்திற்கு தர்ப்பைபுல் கொண்டு கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டு சங்கராச்சாரிய ஸ்வாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு விஜயம் செய்வதுண்டு.
- புரட்சிக் கவிஞர், (பாரதிதாசன் கதை பக்கம்: 42)
No comments:
Post a Comment