Sunday, November 27, 2011

வி.பி. சிங்

பள்ளி மட்டத்தில் சீர்தி ருத்தம் செய்வது உண்மை யானதாக இருக்கும் என் பதை ஒப்புக் கொள்கிறேன். அருகாமைப் பள்ளிகளை அறிமுகப்படுத்துங்கள். அனைவருக்கும் கிடைக்கக் கூடிய தரமான கல்வியைத் தாருங்கள். அனைவரும் ஒரே வகையான பள்ளிக் கூடங்களுக்குச் செல்லட் டும். இடஒதுக்கீட்டிற்குத் தேவை இருக்காது.

தகுதி, திறமை என் பது அனைவர் மனதையும் இன்று ஆக்கிரமித்திருக் கிறது. ஆனால் கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் பொழுது யாரும் கேள்வி எழுப்புவதில்லை. கல்விக் காக ஆகும் செலவு அதி கரிக்கும் பொழுது அது செல்வருக்கு உரியதாகி விடுகிறது. அவர்களே முடிவு எடுப்பதில் முன்னு ரிமை உரியவர்களாக ஆகி விடுகிறார்கள்.
ஜாதி முறை திற மைக்கு எதிரானது. திறமை வெளிப்படுவதற்கு உரிய இடத்தை அது சுருக்கி விடுகிறது. இந்த இடத்தை விரிவாக்கும் போது பொழுது நாடு முழுமைக்கும் மறைந் துள்ள திறமை வெளிப்படு வதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டவர்கள் ஆகிறோம். மக்களில் 20 விழுக்காட்டினர் இந்த அளவு சாதிக்க முடியும் என்றால் 100 விழுக்காட் டினரும் பங்கேற்பதால் உருவாகும் வளர்ச்சியை எண்ணிப் பாருங்கள்

இடஒதுக்கீடு திற மைக்கு எதிரானதல்ல; திறமையை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் அது (தி இந்து 15..2006)
 
- இப்படிப்  பேசக் கூடியவர் கூட இந்தியாவில் இருக்கிறார்களா? அதுவும் அரசியலில் இதுபோல் எதிர்பார்க்கத்தான் முடி யுமா? ஆம் சொன்னவர் இந்தியாவில்தான் இருந் தார்; அரசியலிலும் இருந் தார் - ஏன் பிரதமராகவும் இருந்தார்.

மண்டல் குழுப் பரிந் துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவருக்கு  27 விழுக்காடு இடங்களைப் பிரகடனமும் படுத்தினார். அதற்காகப் பிரதமர் நாற் காலியையும்  தூக்கி எறிந்  தது தமக்குக் கிடைத்த பெருமை என்றும் கூறியவர்.

இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் தாழ்த்தப்பட்ட வரோ, பிற்படுத்தப்பட்ட வரோ அல்ல; பார்ப்பனர் அல்லாத - உயர் ஜாதி சமூ கத்தில் - அதுவும் மன்னர் குடும்பத்தில் பிறந்து சமூக நீதிக்காகப் பதவியை இழக் கத் தயாரான அதிசய மனிதர் இவர்!

அவரின் நினைவு நாள் இந்நாள் (2008); அவர் யாராகத்தான் இருக்க முடி யும் - சமூகநீதிக் காவலர் வி.பி. சிங்கைத் தவிர?
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...