Tuesday, November 1, 2011

அத்தைக்கு மீசை முளைக்கும் முன்பே...


அத்தைக்கு மீசை முளைக்கும் முன்பே...


அத்தைக்கு மீசை முளைப்பதற்கு முன்பே பி.ஜே.பி.யில் அடிதடி களேபரமாகக் கிளம்பி விட்டது. அடுத்த பிரதமர் அத்வானியா - மோடியா என்ற மோதல் ஒருபுறம் இருக்கட்டும்.
ரத யாத்திரை புறப்பட்ட அத்வானியின் பக்கத்தில் பொதுக் கூட்ட மேடையில் யார் உட்காருவது என்கிற உள் குத்தும் ஆரம்ப மாகி  விட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் அனந்த குமார் - செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இவர்களுக் கிடையேதான் இந்தப் போட்டி.
சத்தீஸ்கர் மாநில ராய்ப்பூர் பொதுக் கூட் டத்தில், அத்வானிக்கு முன்பாக யார் பேசுவது என்பதில் குடுமிப் பிடி சண்டையாம்! பொது மேடையிலேயே இந்தக் கூத்து - மக்கள் என்ன நினைப்பார்கள்? அத்தைக்கு மீசை முளைக்கு முன்பே இந்த உள் குத்து என்றால் மீசை முளைத்தால் என் னாவது என்றுதானே நினைப்பார்கள்?

சுழி!
மதுரை - மேலூர் நகராட்சியின் 15ஆவது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஜோதிலட்சுமி பெற்ற வாக்குகள் சுழி! (பூச்சி யம்) ஏன் அவர் வாக்கு என்னாயிற்று? அந்த வார்டில்  அவருக்கு வாக்கு இல்லையாம்!

முருகன் சக்தி?


திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹாரமாம் விழாவுக்காக மேடை அமைக்கப்பட்டு பிரமுகர்கள் (அமைச்சர்கள் உட்பட) உட்கார்ந்திருந்தனர். கூட்ட நெரிசலால் பளு தாங்காமல் மேடை சரிந்ததால் பிரமுகர் களும் சரிந்தால் - சிலருக்குக் காயமாம். திருச்செந்தூர் முருகன் அம்பு பிரமுகர்கள் பக்கம் திரும்பி விட்டதோ!
எந்த சூரனைமுருகன் சம்ஹாரம் செய்தார்? அர்ச்சகப் பார்ப்பான் தானே ஒரு பொம்மைமீது அம்பை எய்தான். பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங்கனார் இதைத்தான் சொன்னாரோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...