Thursday, November 10, 2011

பதினெட்டாம் நூற்றாண்டு கடல் போர்களில் அதிக அளவு மாலுமிகள் கொல்லப்பட்டது எதனால் ?

தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:

பதினெட்டாம் நூற்றாண்டு கடல் போர்களில் அதிக அளவு மாலுமிகள் கொல்லப்பட்டது எதனால் ?


கூரான மரம் அல்லது உலோகச் செதில்கள்தான் மாலுமிகளை அதிக அளவில் கொன்றன என்பது வியப்பைத் தருகிறதா?

ஆமாம். போரில் வீசப்பட்ட பீரங்கி குண்டுகள் அதிக அளவு மக்களைக் கொல்லவில்லை. ஆனால் அக்குண்டுகள் கப்பலைத் துளைக்கும்போது அதன் உடல் பகுதியில் இருந்து நாலாபக்கமும் அதிகவேகத்தில் சிதறடிக்கப்பட்ட கூரான மரத் துண்டுகள் அப்பகுதியில் இருப்பவர்களின் உடல்களைக் கிழித்துக் கொன்றுவிடும்.

அக்காலத்தில் இருந்த ஆங்கிலேய போர்க் கப்பல்கள் எல்லாம் பழையனவாகவும், பழுதடைந்தவையாகவும் கடற்பயணம் மேற்கொள்ளத் தகுதியற்றவையாகவும் இருந்தன. அவர்களின் அதிகாரிகளில் பலருக்கும் எவ்வாறு கப்பலில் பயணம் செய்வது, போர் செய்வது, மனிதர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது  என்பது போன்றவைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. நனைந்து போகும் பெரும் பரப்பளவிலான பாய்மரத் துணிகளைக் கையாளும் பணியாளர்களுக்கு ஏற்படும் ஹெரன்யா எனும் குடல் இறக்க நோய்க்காக இடுப்புக் கச்சைகள் அளிக்க வேண்டிய கட்டாயம் கப்பல் படைக்கு ஏற்பட்டது. அனைத்துக்கும் மேலாக ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எவருக்கும்  ஊதிய உயர்வே வழங்கப்படவில்லை.

நெருங்கிய தூரத்தில் இருந்து ஒரு 32 பவுண்டு பீரங்கிக் குண்டினால் 60 செ.மீ. (2 அடி) ஆழம் வரை மரத்தைத் துளைத்துக் கொண்டு செல்ல முடியும். இவ்வாறு குண்டுகளால் மரச் செதில்கள் சிதறாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, அமெரிக்க அய்க்கிய நாடுகளின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வகையான மரத்தைப் பயன்படுத்து வதுதான். இந்த மரம் குண்டு தாக்குதலில் செதில்களைச் சிதறடிக்காது.

அனைத்து மரங்களையும் விட மிகவும் உறுதியான லைவ் ஓக்ஸ் மரம் ஜார்ஜியா மாகாணத்தின் தேசிய மரமாகும். தென் மாகாணங்களின் பலம் மற்றும் உறுதித் தன்மைக்கு அடையாளமாக விளங்குவது இது.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...