Saturday, November 26, 2011

எது பண்பாடு?


கேள்வி: தி.மு.க. ஆட்சி யில் துவக்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படுவதன் மூலம் தமிழ்ப் பண்பாட்டுச் சின் னங்கள் அழிக்கப்படுகின்றன என்று கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில்: தமிழக சட்ட சபைக் கட்டடம், லைப்ரரி கட்டடம்   இவற்றில் தமிழ்ப் பண்பாடு அடங்கியிருக் கிறது என்றோ, இவை பண் பாட்டுச் சின்னம் என்றோ சொல்ல முடியாது கலை ஞரைத் தவிர.
துக்ளக் 30.11.2011
சோ ராமசாமி அய்யரின் தந்திரமான பதிலை ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று சொல்லக்கூட இந்தப் பார்ப் பனருக்கு மனம் வரவில்லை; குறைந்த பட்சம் நூலகம் என்றுகூட எழுதிட இவாளுக் குக் கை வருவதில்லை. லைப்ரேரியாம் (பார்ப்பனக் கொழுப்பு).
ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகத்தை மிகச் சாதாரணமாக லைப்ரரிக் கட்டடம் என்று சிறுமைப் படுத்தும் சிறு நரிக் கூட்டம் அப்படித்தான் எழுதும்.
பண்பாட்டுச் சின்னம் என்கிறபோது தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய சட்டத்தை வேண்டு மென்றே  மறைத்து எழுதும் மறையவர்களின் மண்டைக் குள் புதைந்து கிடக்கும் துவேஷத்தைக் கவனிக் கத் தவறக் கூடாது.
தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்களுக்கானது அல்லவா? தமிழ்ப் புலவர் பெரு மக்கள் 500 பேர் கூடி இன்றைக்கு 90 ஆண்டு களுக்குமுன்பு எடுத்த முடிவு அல்லவா? இது பண்பாட்டுப் பிரச்சினையல்லவா!
சித்திரை தொடங்கி பங்குனி முடிய கூறப்படும் தமிழ்ப் புத்தாண்டு என்பது ஏற்கத்தக்கது தானா?
இவர்கள் கூறும் பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடிவுறும் அறுபது ஆண்டு களில் ஒரே ஒரு ஆண்டுக் காவது தமிழ்ப் பெயர் உண்டா?
தமிழ்ப் பெயரே இல்லாத ஆண்டுகள் எப்படி தமிழர் களுக்கு உரியதாகும்? தமி ழில் அவை இல்லாததால் தான், அதுதான் தமிழர் களின் புத்தாண்டு என்று பார்ப்பனர்கள் சொல்லுவது புரிகிறது.
தமிழில் பெயர் சூட்டி னால் கேலி செய்யும் கூட்டம் அல்லவா! பெயர்ப் பலகைகளில் தமிழ் வேண்டும் என்று சொன்னால் அது மொழி நக்சலிசம் என்று எழுதும் கூட்டத்திற்கு தமிழ்ப் பண் பாடு என்று சொன்னாலே குமட்டத்தான் செய்யும்.
தமிழன் வீட்டுத் திருமணங்களில் சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லப்பட வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களால் கட்டப் படும் கோவில்களில் தமிழில் வழிபாடு கூடவே கூடாது கண்டிப்பாக சமஸ்கிருதத் தில்தான் அது இருக்க வேண்டும் - தை முதல் நாள் பொங்கலைக்கூட சங்க ராந்தி என்றுதான் குறிப்பிட வேண்டும் - இப்படியெல்லாம் செய்தால்தான் தமிழ்ப் பண் பாடு என்று கூறும் ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக் கத்தான் செய்கிறது - தமிழர்களும் அனுமதித்துக் கொண்டுதான் இருக்கி றார்கள்.
வாழ்க தமிழர்களின் பொறுமையின் பெருமை!
  - மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...