Sunday, November 20, 2011

ஒளியை விஞ்சிய வேகம் புதிய ஆராய்ச்சிகள்


அணுவிலும் சிறிய துகள் கள் சில ஒளியை விட அதிக மான வேகத்தில் பயணிக் கின்றன என்று அண்மையில் காட்டிய பரிசோதனையை வேறு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் செய்து பார்த்தபோது ஆம் துகள்கள் ஒளியை விட வேகமாகப் பயணிக்கின்றன என்ற முடிவேதான் இம்முறையும் வந்துள்ளது. ஒளியின் வேகம் தான் இந்தப் பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் அதைவிட வேகமாக எதுவாலும் பயணிக்க முடியாது என்பது பல காலமாக அறிவியல் சமூகம் நம்பிவந்தது.
அப்படியிருக்க கடந்த செப்டம்பரில் முதல் தடவையாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி யானபோது அதனைப் பலரும் சந்தேகித்தனர். அணுவாராய்ச்சிக்கான அய்ரோப்பிய மய்யத் தின் நிபுணர்கள் மாற்றியமைக்கப்பட்ட வகையில் இந்த பரிசோதனையை செய்து பார்த் தனர். நியூட்ரினோஸ் என்று சொல்லப்படுகிற அணுவிலும் சிறிய துகள்கள் ஒளியை விட சற்று அதிகமான வேகத்தில் செல்வதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு பரி சோதனைகள் தொடரவுள்ளன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...