Friday, November 25, 2011

இங்கர்சால் மணிமொழிகள்!



தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.

************

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

************

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.
************
முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

************

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

************

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்டவனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...