Monday, November 28, 2011

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த இயக்கமும் அதன் சமூக தாக்கங்களும் பற்றிய கருத்தரங்கம் - ஒரு பார்வை


தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் உருவாகி சாதனை படைத்த சமூக சீர்திருத்த இயக்கத்தின் செயல்பாடுகளால் தமிழகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிய ஓர் கருத்தரங்கம் சிங்கப்பூரில்  17-11-2011 அன்று நடைபெற்றது.
நமது விருந்தினரான முக்கிய பேச்சாளர் டாக்டர் கி.வீரமணி அவர்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுக உரையினை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற் காசிய ஆய்வுத் திட்டத் தலைவரும் இணைப் பேராசிரியருமான யாங் முன் செயோங் ஆற்றினார். அதற்குப் பின் தொடர்ந்த, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மரியாதைக்குரிய வேந்தர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் 40 கல்வி நிறுவனங்களைப் பற்றிய ஒளிப்படக் காட்சி டாக்டர் கி.வீரமணி அவர்களின் பெரும் பயன் நல்கிய பங்களிப்புகளின் ஆழத்தைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பவையாக இருந்தது. நமது பெருமைக்குரிய விருந்தினரைப் பற்றிய அறிமுக உரைக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுத் திட்ட பேராசிரியர் டாக்டர் எஸ்.பி.திண்ணப்பன் ஆக்கம் சேர்த்தார்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் சிங்கப்பூரில் அவர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்திருக்கிறேன். இங்கு அவர் ஆற்றிய முத்திரை பதிக்கக் கூடிய தமிழ் உரைகளையும் கேட்டிருக்கிறேன். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதை முதன் முதலாக இந்தக் கருத்தரங்கில்தான் கேட்க நேர்ந்தது.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுத் திட்ட மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்களும் அடங்குவர். இதில் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர். அவர் உரையாற்ற இருக்கும் கூட்டத்தில் தமிழ் அறியாதவர்களும் பார்வையாளர் களாகக் கலந்து கொள்ள இருந்ததால் தனது ஆங்கில உரையை, தமிழில் வணக்கம் என்று கூறி தொடங்கினார்.
சமூக சீர்திருத்த இயக்கத்தைப் பற்றி மட்டுமல்லாமல், முதலில் சுயமரியாதை இயக்கம் என்றிருந்து, பின்னர் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்ற இந்த இயக்கம் பிறக்கக் காரணமாக இருந்த, இந்திய சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருந்த அகண்ட சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் ஒரு விரிவான, ஆழ்ந்த தோற்றத்தை அளிப்பதாக இந்த கருத்தரங்கு அமைந்தது. ஜாதி அமைப்பின் காரணமாக சமூகத்தின் அனைத்து நிலை களிலும் பாகுபாடு காட்டப்படும் பல்வேறு பிரச்சினைகளை தெளிவாகவும், சுருக்கமாகவும் தனது உரையில் ஆசிரியர் அவர்கள் எடுத்துக் கூறினார். குறிப்பாக,   தொடக்க நா ட்களில் சமூகத்தில் நிலவி யிருந்த பெண்ணடிமைத்தனம் தந்தை பெரியார் அவர்களை மிகுந்த கவலை கொள்ளச் செய்தது. இந்திய மக்களின் இத்தகைய அவலங்களுக்கு அவரவர் விதிதான் காரணம் என்று கூறப்பட்டதை பெரியார் கடு மையாக எதிர்த்தார். ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு எதிராக மட்டுமல்லாது,  ஜாதி நடைமுறையின் காரணமாக ஒட்டு மொத்தமாக காட்டப்பட்ட பாகுபாடுகள் மற்றும் அதன் உண்மை நிலைக்கு ஒவ்வாத, ஏற்றுக் கொள்ள இயலாத விதிகளை மக்கள் கூட்டம் மவுனமாகப் பின்பற்றி வந்ததற்கு எதிராகவும் சோர்வின்றி, தொடர்ந்து, துணிவுடன்  தந்தை பெரியார் எவ்வாறு போரிட்டார் என்பதைப் பற்றி அவர் விளக்கிக் கூறினார். பெண்களின் விதவை நிலையைப்பற்றி ஜாதி நம்பிக்கை உள்ளவர் களின் மனிதத் தன்மையே அற்ற நடவடிக் கைகள் பற்றி பார்வையாளர்கள் அறிந்து கொண்டனர்.
தங்களின் சமூக சீர்திருத்த இயக்கம் தேர்தல்களில் பங்கேற்பதில் ஏன் ஆர்வம் கொள்ளவில்லை என்பதைப் பற்றியும் அவர் சுருக்கமாக விளக்கிக் கூறினார். முரண் பாடுகள் மிகுந்த இந்த தலைப்பு பார்வையாளர் களை கருத்தரங்க முடிவில் பல கேள்விகள் கேட்கச் செய்தது. பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு ஆகிய கோட் பாடுகளை தந்தை பெரியார் அவர்களின் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகிறது. தாய் அமைப்பான திராவிடர் கழகத்திற்கும், அரசிய லுக்காக அதில் இருந்து பிரிந்து சென்ற தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைப் பற்றி தங்களுக்குத் தெரியாத தகவல்கள் பல வற்றைத் தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் விரும்பினர். தாங்கள் தேர்தலில் கலந்து கொள் வது என்று முடிவு எடுத்தால், பெரும்பான்மை யான ஜாதி மக்களின் வாக்குகள் மூலம் அவர்களின் ஆதரவைத் தங்களால் பெற முடியும் என்று நகைச் சுவை உணர்வுடன் ஆசிரியர் பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறினார்.
அரசியலில் ஈடுபட தாங்கள் முடி வெடுத்தால், தங்களின் சீர்திருத்தக் கொள்கைகளை நிலைநாட்டுவதில் சமரசம் செய்து கொள்ளாமல்  தங்களால் உறுதியாக இருக்க முடியாது என்பதையும்,  சமூக சீர் திருத்தப் பாதையில் தாங்கள் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நிலைபெறச் செய்யவே, அரசியலில் நடுநிலை வகிப்பது என்ற முடிவை தந்தை பெரியார் எடுத்தார் என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார். தந்தை பெரியார் அவர்களின் சீடரான, முன்னாள் தமிழக முதல்வரான அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரை, எவ்வாறு பெரியார் அவர் களின் ஆசியுடனும் வழிகாட்டுதலுடனும் ஆட்சி அமைத்தார் என்பதையும், தனது வெற்றியை பெரியார் அவர்களுக்கு எவ்வாறு அர்ப்பணித்தார் என்பதையும் ஆசிரியரின் பேச்சிலிருந்து நாங்கள் அறிந்து கொண் டோம்.
தான் ஒரு எண்ணமுதல்வாதி (Idealist) அல்ல என்றும், அவ்வாறு தன்னைப் பற்றி கூறுவது, தனது முயற்சிகளின் பயனாக பொதுமக்களுக்கு விளைந்த நன்மைகளை எதிரொலிப்பதாக அமையாது என்பதை டாக்டர். கி.வீரமணி அவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார்.  கொள்கைத் திட்டங்கள்  என்பவை எப்போதும் இணைந்து செல்பவை அல்ல என்பதால்,  ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டையேதான் பின்பற்றுவதாக அவர் கூறினார். அதற்கு அவர் ஒரு லட்சியவாதி என்று பொருள்படாது. சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் தமிழ்நாட்டு அளவில் மட்டுமே தொடர்புடையது என்ற ஒரு எண்ணத்தைப் பார்வையாளர்களுக்கு இந்தக் கருத்தரங்கத் தலைப்பு ஏற்படுத்தியுள்ளது. அதன் செல்வாக்கு இந்தியா முழுமையாக மட்டுமல்லாமல், இந்திய எல்லைகளைக் கடந்து, முன்பு மலேயா என்றழைக்கப்பட்ட தற்போதைய சிங்கப்பூர், தற்போது மியான்மா என்றழைக்கப்படும் முன்னாள் பர்மா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது என்பதை வலி யுறுத்தி தனது கருத்தை விளக்கினார். டில்லியில் உள்ள அய்ந்து அடுக்கு பெரியார் மய்யக் கட்டடம் இந்த இயக்கத்தின் வியக்கத் தக்க தாக்கத்துக்கும், செல்வாக்குக்கும் சரியான சான்றுகளாகும் என்று அவர் கூறினார். தமிழவேள் கோ.சாரங்கபாணி போன்ற எண்ணற்ற பெரியார் பற்றாளர்கள் சிங்கப்பூரில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். சமூக சீர்திருத்தம் பற்றிய விழிப்புணர்வை இந்தியாவுக்கு வெளியே பரப்பும் அமெரிக்க நாட்டில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பு, மலேசிய திராவிடர் கழகம், அரசு பதிவு செய்யத் தவறிய சிங்கப்பூர் திராவிடர் கழகம், சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கம் போன்றவைகளுக்குப் பிறகு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மய்யம் போன்ற அமைப்புகளும் உள்ளன என்று கூற விரும்புகிறேன் என்று தெரிவித்தார். 1929 இல் தந்தை பெரியார் முதன் முதலாக சிங்கப் பூருக்கு வந்திருந்ததையடுத்து தமிழர் சீர் திருத்த சங்கம் உருவாக்கப்பட்டது. சிங்கப் பூரில் பெரியார் சமூக சேவை மய்யம் தொடங்கப்படும் வரை, தந்தை பெரியார் தொடர்பான விழாக்களை இந்த சங்கத்தின் காலடிகளைப் பின்பற்றி தமிழவேள் நற்பணி மன்றம் தொடர்ந்து செய்து வந்தது. இவர் களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட விழாக் களில் குறிப்பிடத்தக்கது சிங்கப்பூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட   தந்தை பெரியார் அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் விழாவாகும். இந்த விழாவில் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி, பிரபல தமிழ் திரைப்பட நடிகர் இனமுரசு சத்யராஜ் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நல்வாய்ப்பாக, மூன்று முக்கியமான தலைவர் களின் பிறந்த நாட்களும் தொடர்ந்து வந்தன.  அறிஞர் அண்ணா பிறந்த நாள் 15 அன்றும், சிங்கப்பூரின் முன்னாள் தலைமை அமைச்சர் லீ குவான் யியூ அவர்களின் பிறந்த நாள் 16 அன்றும்,தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் 17அன்றும் வந்தன. சிங்கப்பூரில் நடை பெற்ற இந்த விழாவில் மூன்று மாபெரும் தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டா டும் ஓர் அரிய வாய்ப்பினை தமிழவேள் நற்பணி மன்றம் நன்கு பயன்படுத்திக் கொண்டது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும் ஒப்பிட்டு ஆசிரியர் பேசினார். அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் எவ்வாறு அறிமுகமானார்கள் என்பதையும், அவர்கள் இருவரும் ஒன்று போலவே கொண்டிருந்த கொள்கைகள் பற்றியும், எவ்வாறு ஒருவரின் செயல்பாடுகள் மற்றவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் அவர் விரிவாக எடுத்துக் கூறி எங்களைத் தெளிவுபடுத்தினார். தீண்டத் தகாதவர்கள் என்றும், பார்க்கவே தகாதவர்கள் என்றும் இழிவுபடுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக தந்தை பெரியார் அவர்கள் மேற்கொண்ட வைக்கம் போராட்டம் பற்றிய சுவையான ஆர்வ மளிக்கும்  தகவல்களை அவர் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்துவதற்கு பெரியார் இந்த வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதே முக்கிய கருவியாக ஆனது. இந்த சமூக சீர்திருத்த இயக்கம் எவ்வாறு எந்த மதத்தின் அடிப்படையிலும் அமையவில்லை என்பதை யும்,  எந்த மதத்திற்கும் எதிரானதும் அல்ல அது என்பதையும் வியக்கத்தக்க எடுத்துக் காட்டுகளுடன் டாக்டர் கி.வீரமணி சுட்டிக் காட்டினார். சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்ட இரு இணையர்கள் இந்தக் கருத் தரங்கிற்கு வந்திருந்தனர். இவர்கள் மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். தங்களின் இயக்கம் மனித சமத்துவத்திற்காக மட்டுமே போராடுகிறது என்பதையும், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் எதிராக அல்ல என்ப தையும் அவர் தெளிவுபடுத்தினார். அதனால் தான், கோவில் அர்ச்சகர்களாக சில ஜாதி யினர் ஆகக்கூடாது என்பதற்கு எதிரான போராட்டம் தங்கள் கொள்கைக்கு முரண் பட்டது என்று கூறமுடியாது என்பதை அவர் விளக்கினார். மொத்தத்தில், அனைத்து மனிதர்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்திக்  கொள்வது என்பதும், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு தனிசலுகைகள்  தரப்படக்கூடாது அல்லது சில பிரிவு மக்க ளுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதும்தான் தங்களின் நோக்கம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்ட  ஜாதி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது தந்தை பெரியார் அவர்களின் இயக்கத்தின் போராட்டங்கள் மற்றும் செல்வாக்கினாலும் தான் என்பதை அவர் விளக்கிக் கூறினார். பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிசீலிக்க மண்டல் ஆணையம் நியமிக்கப்பட்ட வரலாற்றின் அனைத்து விவரங்களையும் ஆசிரியர் எங்களுக்கு தெரிவித்தார்.
தந்தை பெரியாரது வெளியீடுகளில்,   நாளிதழ்களுக்கும், மற்ற வார, மாத இதழ் களுக்கும், நூல்களுக்கும் சிந்தனையைத் தூண்டும் தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்ற  ஓர் ஆர்வமளிக்கும் குறிப்பை ஆசிரியர் சுட்டிக்காட்டினார். குடிஅரசு (தமிழ்), திராவிடன் (தமிழ்), புரட்சி  (Revolt ஆங்கிலம்), புரட்சி (தமிழ்), பகுத்தறிவு (தமிழ்), விடுதலை (தமிழ்), நீதிக் களம் (Justice Cite- ஆங்கிலம்), நவீன பகுத்தறிவாளர் (The Modern Rationalist - ஆங்கிலம்), உண்மை (தமிழ்) ஆகியவை அதற்கான சில எடுத்துக் காட்டுகளாகும்.
அத்துடன் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அவரது இளமைப் பருவம், அவரது செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பப் பின்னணி, பணத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு, இயக்கத்திற்காக தன் வாழ்க்கையே அவர் தியாகம் செய்த மாண்பு ஆகியவற்றை விரிவாக ஆசிரியர் எடுத்துக் கூறினார். 1970 இல் அய்க்கிய நாடுகளின் கல்வி, கலாச்சார, அறிவியல் அமைப்பான UNESCO தந்தை பெரியாருக்கு அளித்த புகழுரையை (Citation) ஆசிரியர் படித்துக் காட்டினார்.
வருங்காலத்தை ஊகித்துரைக்கும்     தொலைநோக்காளர்,     புது யுகத்தின் ஞானி தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்,சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற      பழக்க வழக்கங்கள்
இழிந்த எண்ணங்கள்,செயல்பாடுகளுக்குக் கடும் பகைவரானவர் பெரியார்.
இந்து மதத்திற்கு எதிரான நாத் திகர் என்று மட்டும்தான் பெரி யாரைப் பலரும் பார்க்கின்றனர். ஆனால் அவரைப் பற்றியும், அவரது இயக்கத்தைப் பற்றியும் ஒரு புதிய தோற்றத்தையும், எண்ணத்தையும் உருவாக்கி, அறிந்திராதவர்களின் கண்களைத் திறப்பதாக இந்த கருத்தரங்கம் அமைந்தது. கருத்தரங்கம் முடிந்த பிறகு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுத் திட்டத்தின் சகமாணவர்களுடன் மேற்கொண்ட சிறு உரையாடல்களிலிருந்து, தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், நிலவும் பெரும் பாலான அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு இக்கருத் தரங்கால் தங்களுக்குக் கிடைத்தது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளது எனக்குத் தெரிய வந்தது. ஒரு கருத்தரங்கின் மூலம் தங்களின் கல்வியுடன் தொடர்பு உடைய செய்திகளைப் பற்றி தாங்கள் கற்றறிந்து கொள்வது இதுதான் முதன் முறை என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் ஆய்வுகளில் குறிப்பாக தமிழ் நாட்டின் மீது கவனம் குவிக்கும் சில குறிப்பிட்ட சிறப்பு பகுதிகளும் உள்ளன. நேரடியாக அனுபவம் பெற்ற ஒருவரிடமிருந்து மதிப்பு மிக்க தகவல் களைத் தாங்கள் பெறுவதற்கு உதவிய தகவல் களஞ்சியமாக விளங்கிய இந்தக் கருத்தரங் கினை ஏற்பாடு செய்து நடத்திய துறைக்கு தங்களின் உண்மையான பாராட்டுதல்களை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
பாலியல் பாகுபாடுகள், சமூக வேறுபாடுகள், அரசியல், ஆட்சி, சமூகம், கலாச்சாரம், வறுமை, சமத்துவமின்மை, அதிகாரம், மதம் ஆகியவை சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுத் திட்டத்தின் பல்வேறு பாட திட்டங்களாகும். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டதன் மூலம் அனைத்துப் பிரிவுகளிலும் பயிலும் மாணவர்களும் தங்கள் குறிப்பிட்ட சிறப்புப் பாடப்பிரிவு தொடர்பான சில  தகவல்களை அறிந்து கொண் டனர் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். கேள்வி-பதில் பகுதியில் கருத்தரங் கினால் தூண்டப்பட்ட பார்வையாளர்களின் சிந்தனையில் வெளியான பல கேள்விகள் அனைத்துக்கும், நமது சிறப்பு விருந்தினர் மிகுந்த ஆர்வத்துடன் தகுந்த பதில்களை அளித்தார். ஒவ்வொரு கேள்வியும்,  பல்வேறு தலைப்புகளில் அவருக்குள்ள சிந்தனை யையும் அறிவையும் வெளிப்படுத்தும் வகை யில் அமைந்திருந்தன.
மரியாதைக்குரிய பல்கலைக் கழக வேந்தருடன் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கருத்துப் பகிர்வு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுத் திட்டத்தின் கீழ் சில குறிப்பிட்ட துறைகளில் மேலும் கல்வி கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவுமான ஆர்வத்தை பல மாணவர்களிடையே தோற்று வித்தது. மிகுந்த ஆர்வம் அளிக்கும் ஒரு தலைப்பைப் பற்றிக் கற்றறிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பினைப் பெற்றது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த பயனாகும். இணைப் பேராசிரியர் யோங் அவர்கள் குறிப்பிட்டபடி, மிகக் குறுகிய கால அவகாசத்தில் இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போதிலும், இதற்கு மாபெரும் வரவேற்பு இருந்தது. முன் கூட்டியே திட்டமிட்டு, டாக்டர் கி.வீரமணி அவர்களால் நடத்தப்படும் இது போன்ற பல கருத்தரங்குகளை துறை ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன். அவரது பேச்சைக் கேட்க இன்னும் அதிகமான மக்கள்  வருவார்கள் என்று நான் நம்புகிறேன். அவரது பேச்சு நிச்சயமாக அனைவரிடமும் பெரிய தாக் கத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும், அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள தங்களின் கல்வி நிலையங்களை வந்து பார்க்கும்படி  கேட்டுக் கொண்டு ஆசிரியர் தனது உரையை நிறைவு செய்தார்.
எனது தாழ்மையான வேண்டுகோள் ஒன்றினை வேந்தர் அவர்கள் முன் வைக்க நான் விரும்புகிறேன். அய்யா, இக் கருத்தரங் களில் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை உரு வாக்கிக் கொண்டு வெற்றி பெறத் தூண்டும் வகையில் பேசவல்ல ஒரு பேச்சாளராக தங்களைக் கண்டேன். வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பற்றி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டும் தங்கள் வாழ்வியல் சிந்தனைகள் தொடர் விடுதலையில் வெளி வருகிறது. அவை தொகுக்கப்பட்டு நூல் களாகவும் வெளிவந்திருக்கின்றன.
வாழ்க்கையில் நல்லதொரு நோக்கத்தை உருவாக்கிக் கொள்ள இயன்ற இத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை இளைஞர் களுக்காக என்று இரு மொழிகளில் எழுதவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.
ஓர் உயர்ந்த முறையில் பார்வையாளர் களைச் சிந்திக்கச் செய்து தன் பின்னே அணிவகுக்கச் செய்யும் ஆசிரியரின் திறமை என்னைப் பெரிதும் கவர்ந்தது. நல்லதொரு நோக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் தொடரினை ஆசிரியர் அவர்கள் எழுதினால், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருள்ளும் பொதிந்து மறைந்திருக்கும் ஆற்றலை  வெளிக் கொண்டு வர அது உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
- (தமிழில்: த.க.பாலகிருட்டினன்)


Seminar on The Social Reform Movement in
Tamil Nadu and its societal impact – A Review
- Irshath Mohamed
(This is the letter written by the  under graduate student to the organisers of the Seminar on “The Social Reform Movement in Tamil Nadu and its societal impact” in which Dr.K.Veeramani, President of Dravidar Kazhagam delivered his address on 17th November, 2011)
The seminar started with a brief  introduction of our guest speaker, Dr. Krishnasamy Veeramani, by the Head of South Asian Studies Programme (SASP) of the National University of Singapore (NUS), Associate Professor Yong Mun Cheong. A slideshow presentation of the 40 educational institutions that are headed by Honourable Chancellor of Periyar Maniammai University, which followed the introduction, gave the audience an enriching insight to Dr. K. Veeramani’s contributions. Dr.S.P. Thinappan, Fellow of the SASP, added on to the introduction of our guest speaker.
I have attended numerous functions over the past 10 years where he delivers his signature speech in Tamil. Personally, this was the first seminar that I have attended where Asiriyar delivered his speech in English.
Among those who attended this seminar where students in the SASP, researchers, staff and professors of NUS. There were several members of the public who joined in, too. Although he was going to address the group of people which consists of non-Tamils too, he started off with wishing everyone with “Vanakkam”.
The seminar provided a detailed and interesting insight not only to the social reform movement but the broader societal problems that has plagued the Indian society which was the phenomenal reason for the birth of the social reform movement, Dravidar Kazhagam (DK) which was previously known as “Self-respect Movement”. Asiriyar delivered his speech in a clear and concise manner describing the various issues such as discrimination at all levels of the society due to the caste system and especially towards women that have prevailed in the early years which disturbed Thanthai Periyar and led him to oppose the “so-called” fate of Indians. He explained how Thanthai Periyar was a relentless and courageous fighter who not only went against a certain group of people but against the entire caste system and its unrealistic and unacceptable rules which have been naively followed by the masses. The audience learnt about the dehumanizing behaviours of the caste believers with respect to widowhood.
He also gave a brief explanation why their social reform movement is not interested in taking part in elections. This controversial topic also fetched several questions from the audience at the end of the session. Thanthai Periyar’s movement propagated rationalism, self-respect, women’s rights and eradication of castes. The audience were interested to find out more about the link between the parent association, DK and its political branches the Dravidar Munnetra Kazhagam (DMK) and All India Anna Dravidar Munnetra Kazhagam (AIADMK). He approached these questions in a humorous way by telling the audience that he could get lots of support through votes from most castes, if he decides to take part in elections. He emphasised the point that if they had decided to enter politics, they could not be strong in upholding their reform values without making some compromises and in order to continue on their success path, Thanthai Periyar made the decision to remain politically neutral. We learnt how the, then Chief Minister of Tamil Nadu, Mr. C.N. Annadurai, commonly called as Aringar Anna, being the disciple of Thanthai Periyar, formed his government with the blessings and advise of Thanthai Periyar and he dedicated the victory to his respected leader.
Dr. Veeramani reemphasised his point that he is not an idealist and describing him as such would mean that the pragmatic side of his efforts are not  reflected. Ideal and programmes do not go together and he follows a certain ideology. That does not mean he is an idealist. The topic of this seminar gave an  idea to the audience that the social reform movement’s impact was constrained to Tamil Nadu alone. He clarified this point and reiterated that its influence reached out not only to the entire India but across borders to then Malaya, present day Singapore, Malaysia and Burma (present-day Myanmar). The five-storey Periyar Centre in New Delhi is a testimony to the admirable impact of the movement. He also pointed out that there were numerous Periyar followers in Singapore such as Thamizhavel G. Sarangapani. I also reckon that there are organisations such as Periyar International (United States), Malaysia Dravidar Kazhagam (Malaysia), Dravidar Kazhagam of Singapore (failed to register with the Government), Tamil’s Reform Association (Singapore) and Periyar Community Service of Singapore (Singapore) which are organisations that perpetuate the awareness of social reforms outside of India. The Tamil’s Reform Association was formed after Thanthai Periyar’s first visit to Singapore in 1929. Thamizhavel Narppani Mandram followed the footsteps of the Association to organise functions pertaining to Thanthai Periyar until the formation of Periyar Community Service of Singapore. There were significant functions organised by Thamizhavel Narppani Mandram such as Periyar’s 125th Birthday that was commemorated in Singapore. Asiriyar Dr. K. Veeramani and prominent South Indian actor Mr. Sathyaraj were special guests invited. Coincidentally, the birthdays of three prominent leaders falls on consecutive days. They are Aringar Anna, Former Minister Mentor of Singapore Mr. Lee Kuan Yew and Thanthai Periyar whose birthdays fall on September 15, 16 and 17 respectively. Thamizhavel Narppani Mandram takes the golden opportunity to commemorate the birthdays of the three great leaders in a single function.
He drew parallels with Dr. Ambedkar and Thanthai Periyar. He enlightened us with detailed information on how they got to know one another, the similar ideologies they upheld and how actions of one made an impact on the other. There was an interesting topic on the Vaikom Satyagraha, which was a movement to secure the rights of the depressed classes which were seen as “untouchables” and even “unsee-ables”. Periyar’s involvement in this movement was instrumental to uplift the status of the backward classes. Dr. K. Veeramani also pointed out interesting examples in the session of how his social reform movement is not based on any religion nor is it against any religion. There were two couples who were present in the seminar who were married to each other under the “reformist marriages” and one of the couple were of different religions. He made it clear that their movement fights for human equality and not against a certain religion. Thus, their fight against not allowing people from certain castes to become priests was not necessarily against their ideology. After all, their aim is to make sure all human beings are treated equally and there is no favouritism towards a certain group or discrimination against certain group prevails.
He presented the various amendments in the constitution to protect the lower castes that was certainly made possible due to the influence of Thanthai Periyar’s movement. He also provided us with the insights about the Mandal Commission which was set up for the reservation of educational and job opportunities for the backward classes.
There was an interesting observation regarding the publications of Thanthai Periyar that Asiriyar pointed out. His daily newspapers, magazines, journals and books were named in a certain thought provoking way. Some examples are “Republic” (“Kudiarasu”-Tamil), “Dravidian” (“Dravidan”-Tamil), “Revolt” (English) and “Revolt” (“Puratchi”-Tamil), “Rationalism” (“Pagu tharivu” - Tamil), “Liberty” (“Viduthalai”-Tamil), “Justice Cite” (English), “The Modern Rationalist” (English) and “Truth” (“Unmai”-Tamil). Moreover, Asiriyar also elaborated on the history of Thanthai Periyar, his early years, his rich family background, his devotion of his wealth and sacrifice of his life to the movement. Asiriyar also read out the citation of UNESCO which they conferred in 1970 which reads as such:
“Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitions; meaningless custom and
base manners”.
For many who only saw Thanthai Periyar as an Atheist who stands against Hinduism, this seminar was an eye-opener which created a whole new image and impression of Thanthai Periyar and his social reform movement. From the short conversations after the seminar with fellow students from the SASP, I learnt that they have been exposed to substantial readings that cover mostly about political, social and economic issues in South Asia, particularly India. However, this is their first time that they are learning something that is related to their area of study through a seminar. In their modules, there are certain specialisations that focus on Tamil Nadu specifically. The students expressed their genuine appreciation for the department for organising such an informative seminar as they have gotten valuable information from a person with first-hand experience. Gender & Society, Discrimination, Politics, Governance, Society & culture, Poverty, Inequality & Power and Religion are the various specialisations within the SASP and it is overwhelming to know that students from all specialisations had something to bring back from this session.
The question-and-answer segment of the seminar triggered many thoughtful questions by the audiences and our guest speaker promptly replied to all questions enthusiastically. Each question opened up a different topic for our speaker to express his thoughts and knowledge.
The sharing by our respected Chancellor has instilled the interest for many students to further their studies or their research on certain fields in the SASP. Personally, I had an enriching experience learning about an interesting topic. As Assoc Prof Yong mentioned, despite the fact that this seminar was arranged on a short notice, there was overwhelming response. With advanced planning, I hope that the department will organise more of such seminars to be conducted by Dr. K. Veeramani. I believe his speech has to be attended by more people and it will definitely have a great impact on all. He concluded by inviting all of those who were present at the seminar to visit the educational institutions in Thanjavur and Tiruchi, when we go to Tamil Nadu.
I would like to take this opportunity to put forth a humble request to Chancellor Sir. During the seminar, I discovered a motivational cum inspirational speaker. I reckon that he writes the “Vaazhviyal  Sinthanaigal” – Thoughts for Life which serves as a great tool to make reader’s think about issues of daily life. The articles which are published in “Viduthalai” daily have been compiled into volumes. My humble request is for him to write a bilingual motivational series specifically targeted at youths. I admired his capability to rally his audience to think in a higher order. I strongly believe that if he writes the motivational series of articles, he will be able to unleash the hidden potential in each and every individual.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...