Sunday, November 27, 2011

இவர்தான் ஆச்சாரியார்!


விரைவில் மத்திய ஆட்சியில் சுதந்தரா, ஜனசங்கம் தி.மு.க வந்து விடும். இந்த மூன்று கட்சிகளும் நன்றாக அய்க்கியமாகி விடும். இந்த கட்சிகளிடையே வேறுபாடுகள் இருப்ப தாக கூறுவது மேலுக்குத்தான். உள்ளே மூன்று கட்சிகளும் ஒரே நோக்க முடையவை. சுதந்தரா கட்சி தேசப் பொருளாதாரத்தை நன்கு உணர்ந்தது!
ஜனசங்கம் மக்களை ஊக்குவிப்ப திலும் ஒற்றுமையை வளர்ப்பதிலும் அக்கறை கொண்டது.
தி.மு.கவும் அப்படித்தான். ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை வேறுமாதிரியாக இருப்பதால் தி.மு.க தமிழ்நாட்டிலேயே இருக்கட்டும்.
மத்திய ஆட்சியில் இந்த மூன்று கட்சி கூட்டாட்சி ஏற்பட்டதும் கஷ்டங்கள் குறையும், மோசங்கள் நீங்கும்; அதுவரை எப்படிக் காலந்தள்ளு வது என்று கவலைப்படாதீர்கள். கடவுள் அதற்காக அருள் செய்வான். எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று பயந்துகொண்டு குடும்பக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டு மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி விடாதீர்கள். நிறைய குழந்தைகளைப் பெறுங்கள். இதுவரை கடவுள் எப்படிக் காப்பாற் றினானோ அதுபோல இனியும் காப்பாற் றுவான். வயோதிகர்கள் வியாதியஸ்தர் களுக்குத் தான் இது சாத்தியமாகாமலிருக் கலாம். வாலிபர்களுக்கு சொல்லத்தான் சொல்லுகிறேன். நிறைய குழந்தைகள் இருந்தால்தான் ஏதாவது அவசர காலங்களில் வீட்டுக்கு 4,5 ஆட்கள் அனுப்ப முடியும். இரண்டு, மூன்று குழந்தைகள் என்றிருந்தால் பிறகு அழவேண்டிய நிலைதான் வரும். நான் அண்ணாத்துரைக்காக சொல்லவில்லை; இது என் சொந்த கருத்து
இந்த ஆட்சியை எப்படி கீழே இறக்குவது என்று பல ஆண்டுகளாக நான் யோசித்தேன் முன்காலத்தைப்போல ரத, கஜ. துரக, பதாதிகளை (ராணுவத்தை)க் கொண்டே ஆட்சியை மாற்றுவார்களே. அப்படிக்கூடச் செய்யலாமா என்று யோசித்தேன் பிறகு ஜனங்களாகவே மாற்றுவதுதான் சாத்தியம் என்று எனக்குப்பட்டது-
தேர்தல் முடிந்து சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (26.2.1967) சுதந்திரா கட்சியின் தலைவர் ராஜாஜி பேசிய பேச்சுதான் இது.
தி.மு.க.வை எப்படியும் ஜனசங்கத் தோடு சேர்த்துதன் வலைக்குள் சிக்க வைத்து விட வேண்டும் என்று ஆச்சாரியார் முயன்றார் - முற்றிலும் தோல்வியைச் சந்தித்தார். ராஜதந்திரி என்று ஆச்சாரியாரைச் சொல்லு வார்கள். ஆனால் இந்த ராஜதந்திரி அண்ணாவின் அறிவுக்குமுன் வெறும் பூச்சியம் என்பது நிரூபணம் ஆகி விட்டதே!   ஆச்சாரியாரின் இந்தவு ரையில் மேலும் இரு முக்கிய தகவல் கள் -_ அவரின் பிற்போக்குத்தனத்துக் கான வெளிச்சம்! மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கு எதிரானவர் இவர் என்று அம்பலமாகி விட்டது. இன் னொன்று ஜனநாயக ஆட்சிமுறையை இராணுவ பலம் கொண்டு தகர்க்கும் மனப்பான்மை கொண்ட மக்கள் விரோதி ராஜாஜி என்பதையும் தனக்குத்தானேஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டார். இவர்க்குப் பெயர் தான் மூதறிஞராம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...