Monday, November 7, 2011

ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம்


ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம் ஒவ்வொன்றாய் அம்பலத்துக்கு வருகிறது 4 பேர் என்கவுண்டரில் பலி!

சிறப்புப் புலனாய்வு குழு உறுதி செய்தது!

அகமதாபாத், நவ 7- குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக் கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படு கொலைகள் ஒவ்வொன் றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ் ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய் தது.

குஜராத்தில் அகம தாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத் தில் கடந்த 2004இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவர்கள் நான்கு பேரும் மும்பையிலி ருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்த தாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறை யினரிடமிருந்து தப் பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறை யினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப் பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறி வித்த என்கவுண்டர் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மாஜிஸ்திரேட் விசாரணை

இந்த குற்றச்சாட்டு காரணமாக எஸ்.பி. தமாங் என்ற பெருநகர மாஜிஸ்திரேட் விசா ரணை நடத்தினார். 2009 ஆம் ஆண்டில் அவர் விசாரணை அறிக் கையை தாக்கல் செய் தார். அதில் அவர், காவல் துறை என்கவுண்டர் என்பது பொய்யாக புனையப்பட்டது என் றும், அந்த என்கவுண் டர் காவல்துறையினர் நடத்திய பச்சை இரத்த படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கொல்லப்பட்ட நான்கு பேரும் மிக அரு கிலிருந்து சுடப்பட்டி ருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது அந்த நான்கு பேரும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வசம் பாதுகாப்பில் இருந்தி ருக்கிறார்கள் என்றும், அதன்பிறகு சுட்டுக் கொல்லப்பட்டிருக் கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த படுகொலைக்கு அந்த நேரத்தில் டி.ஜி.பி.யாக இருந்த கே.ஆர்.கவுஷிக் உட்பட குற்றப்பிரிவைச் சேர்ந்த 21 காவல்துறையினர் காரணமாக இருந்தார் கள் என்று குற்றம் சாட் டிய தாமங், பதவி உயர்வு பசி கொண்ட அதி காரியால் இந்த போலி என்கவுண்டர் அரங் கேற்றப்பட்டது என்றும் தாமங் தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

சிறப்பு புலனாய்வு முழு

இந்த காவல்துறை என் கவுண்டர் பற்றி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது என்கவுண்டர் பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதிக்குள் விசா ரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி, சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்தது.

டில்லியில் உள்ள அகில இந்திய மருத் துவக் கழகம் மற்றும் மத்திய மரபணு சோதனை ஆய்வகம் ஆகியவற்றின் அறிக்கையின் அடிப் படையில் சிறப்பு புல னாய்வு குழு தனது விசா ரணை நடத்தி தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாணவி இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் மிக அருகாமையி லிருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டதை பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.

குஜராத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப் பட்டிருப்பதற்கு முரணாக ஆவண ஆதாரங்கள் உள்ளன.

இஸ்ரத் ஜஹான் உட்பட 4 பேர்கள் மிக அண்மையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட் டதாக மாஜிஸ்திரேட் தாமங் அறிவித்திருப் பதை பிரேத பரிசோ தனை அறிக்கை போன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

இந்த 4 பேரும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக குற்றப்பிரிவு காவல்துறையினரின் வசம் இருந்திருக் கிறார்கள் என்பதையும் ஆவணங்கள் வெளிப் படுத்துகின்றன. அதையே வாய்மூல சாட் சியங்களும் உறுதி செய் கின்றன.

எனவே, பெருநகர நீதிபதி தமாங் சமர்ப் பித்த விசாரணை அறிக்கை சரிதான் என் பது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆய் வில் உறுதி செய்யப் படுகிறது.

மேற்கண்டவாறு சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...