Tuesday, November 22, 2011

தாய்லாந்து நாட்டு தலை நகரத்தின் பெயர் என்ன?

கிரங் தாபே என்பதுதான் தாய்லாந்து நாட்டின் தலைநகரமாகும். அன்றாடம் வழங்கும் இந்நகரத்தின் பெயர் தேவதைகளின் நகரம் (City of Angels) என்று பொருள்படும். (Los Angels நகரத்தின் பெயரும் இது போன்றதே.) இந்த நகரம்தான் உலகிலேயே மிக நீண்ட பெயர் கொண்ட  நகரமாகும். அதன் சுருக்கம்தான் தேவதைகளின் நகரம் என்னும் இப்பெயர்.
இதைப் பற்றி அறிந்திராத அயல்நாட்டினர்தான் அதனை பாங்காக் என்று அழைப்பார்கள்.  தாய்லாந்து நாட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாங்காக் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதில்லை. அனைத்து அய்ரோப்பியர்களும், அனைத்து என்சைக்ளோபிடியாக்க ளிலும் தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக் என்று அழைப்பது, இங்கிலாந்து நாட்டை பில்லிங்ஸ்கேட் அல்லது வின்செஸ்டர் என்று அழைப்பதற்கு நிகராகும் என்று தாய்லாந்து நாட்டு மக்கள் கூறுகின்றனர்.
இந்த குருங் தபே என்பது வழக்கமாக க்ரங் தேப் என்று உச்சரிக்கப்படுகிறது.
பாங்காக்  உள்ள இடத்தில்  ஒரு சிறிய மீன்பிடித் துறைமுகம் முன்பு இருந்தது. 1782 இல் தனது தலைநகரை முதலாம் ராமா என்னும் அரசன் இந்த இடத்துக்கு மாற்றி, அங்கு ஒரு நகரை உருவாக்கி அதற்கு பாங்காக் என்று பெயரிட்டான்.
க்ரங் தேப் நகரின் முழு பெயர் க்ருங் தேப் மஹானாகோன் அமோர்ன் ரட்டனாகோசின் மஹிந்தரா யுத்தய்யா மஹடிலோக் போப் நோபார்ட் ராஜதானி புரீரோம் உதோம்ரஞ்நிவாஸ் மஹாசத்ரன் அமோர்ன் பிமரன் அவல்தார்சடிட் சகட்டியா விசாங்குரம் பிரசித் என்பதாகும்.
தாய் மொழியில் இந்தப் பெயர் 152 எழுத்துகளும், 64 ஒலிவடிவங்களும் கொண்ட ஒரே சொல்லில் எழுதப்படுகிறது.
இதன் பொருளாவது : தேவதைகளின் மாபெரும் நகரம், தெய்வீக நகைகளின் உயர்ந்த கருவூலம், வெற்றி கொள்ள முடியாத மாபெரும் நாடு, முக்கியத்துவம் பெற்ற மாபெரும் ஆட்சி எல்லை கொண்ட, ஒன்பது பெருமை பெற்ற கோமேதகங்கள் கொண்ட மகிழ்ச்சி நிறைந்த தலைநகரம், மிக உயர்ந்த பேரரசர் உறையும் மாபெரும் அரண்மனை, தெய்வீகம் பொருந்திய உறைவிடம், புத்துயிர் பெற்ற ஆன்மாக்களின் உறைவிடம்.
பாங்காக் என்னும் பெயரில் உள்ள பாங் என்ற சொல் கிராமம் என்ற பொருள் கொண்டது. காக் என்ற சொல், ஒரு பழமையான சொல்லான, ஒருவகையான பழம் என்ற பொருள் படும்  மகாக் என்பதிலிருந்து வந்திருக்கும் என்று கருதப்படுகிறது. (ஆலிவ் அல்லது பிளம் பழமாக அல்லது  ஒரு மாதிரியான இந்த இரண்டின் கலவையாக இருப்பது.) அதனால் . ஆலிவ் கிராமம் என்றோ அல்லது  பிளம் கிராமம் என்றோ அதன் பெயர் இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக அது எது என்பதை எவரும் அறிந்திருக்கவும் இல்லை; கவலைப்படவும் இல்லை.
க்ரங் தேப் (அல்லது நீங்கள் வலியுறுத்தினால் பாங்காக்) நகரம்தான் தாய்லாந்தில் உள்ள ஒரே நகரமாகும். அதற்கு அடுத்தபடியாக பெரியதாக உள்ள ஊரைவிட இது நாற்பது மடங்கு பெரியது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  ‘  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...