Monday, November 7, 2011

பகவான் ரமணரிஷி தமது சொத்தை தம்பிக்கு எழுதி வைத்தார்


பகவான் ரமணரிஷி தமது சொத்தை தம்பிக்கு எழுதி வைத்தார்


பெரியாரோ தனது சொத்தை பொதுமக்களுக்கே வழங்கினார்
வேலூரில் பெரியாரின் மனிதநேயத்தை விளக்கி தமிழர் தலைவர் உரை


வேலூர், நவ.6-பகவான் ரமணரிஷி ஆசிரம சொத்தை தனது சொந்த தம்பிக்கு உயில் எழுதி வைத்தார். ஆனால் தந்தை பெரியார் தமது அறக்கட்டளை சொத்தை பொதுமக்களுக்கு பயன்படும்படி ஆக்கினார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
வேலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 4.9.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
வேலூருக்குப் பக்கத்தில் இருப்பது திருவண்ணாமலை. இந்த திருவண்ணாமலையில் ரமணரிஷி ஆசிரமம் என்று ஒன்று உண்டு. வெங்கட்ராமன் என்ற அய்யர் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்தவர். அவர் திருவண்ணா மலைக்கு வந்து அவர் சிறிய வயதில் கோவிலை சுற்றி வரும்பொழுது மயக்கம்போட்டு கீழே விழுந்து விடுகின்றார்.
முதலில் கோபத்தோடு ஒரு இடத்தில் உட்கார்ந்தார். அவரை சுற்றி ஒரு ஆசிரமம் வளர்ந்தது. வெளிநாட்டுக்காரர் வந்தார்கள். ஏராளமான சொத்துக்கள் இன்னமும் ரமணாஸ் ரமத்திற்கு உண்டு.
திருவண்ணாமலையில் அதிகமாக சொத்து சேர்ந்த  ஒரு மடம் என்று சொன்னால் அது ரமணாஸ்ரமம் தான்.
இந்திராகாந்தி காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் ரமணரிஷியைப் பார்க்க வந்தார்கள் என்று சொன்னவுடனே அவருக்கு ஒரு தனி மரியாதை.
அந்த மடம் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வளர்ந்தவுடனே தன்னுடைய தம்பியைக்கொண்டு வந்து மடத்துக்குப் பொறுப்பாளராக ஆக்கினார்.
ரமணரிஷி சொத்தை தன் தம்பிக்கு எழுதி வைத்துவிட்டார்
ரமண ரிஷிக்கு பல சீடர்கள் இருந்தார்கள். பெருமாள்சாமி என்ற ஒரு சீடர் மிக முக்கியமான சீடர். அவர்தான் ரமண ஆஸ்ரமம் உருவாகக் காரணமாக இருந்தார். அவர்தான் இவரை ரமணரிஷி என்று ஆக்கினார்.
ரமணரிஷிக்கு இன்னும் புரமோசன் கொடுத்து பகவான் ரமண ரிஷியாக்
கினார். பகவானுக்கும் பக்கத்திலேயே சீட்டு கொடுத்துவிட்டார். பல கோடி ரூபாய் வந்த நிலைக்குப் பிற்பாடு அவர் தன்னுடைய தம்பியைக் கொண்டு வந்து அவர்தான் தனக்குப் பிறகு இந்த எல்லா சொத்துக்களுக்கும் வாரிசு என்று உயில் எழுதி வைத்துவிட்டார்.
இதை எதிர்த்து வழக்கு போட்டார்கள். 1939இல் இந்த வழக்கு போடப்பட்டது. நண்பர்
களே இன்னமும் இந்த வழக்கு முடியவில்லை. தெளி வாகத் தெரிந்துகொள்ளுங்கள். இது பல பேருக்குத் தெரியாது.
நம்முடைய நாட்டு நீதிமன்றங்களின் வழக்கை பார்த்தீர்களேயா
னால் அது வெள்ளிவிழா, பொன்விழா, அப்புறம் வைர விழா, நூற்றாண்டு விழாவை எல்லாம் கொண்டாடுகின்றனர். (கைதட்டல்). வழக்கு போட்டவர் செத்து போவார். வழக்கிற்காக வாதாடிய வக்கீலும் செத்துப்போவார்.
காஞ்சிபுரம் யானை நாம வழக்கு
காஞ்சீபுரத்தில் உள்ள யானைக்கு எந்த நாமம் போடுவது என்று வழக்கு. 125 வருடமாக வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை.
யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா? என்பதில் பிரச்சினை. காஞ்சிபுரத்து கோவில் யானைகள் மூன்று செத்துப்போய்விட்டன. நான்காவது யானைக்கும் பிரச்சினை முடியவில்லை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் இன்னமும் தகராறு. மனிதர்களுக்கே நாமம் போடுவது என்பதே நல்ல சொல் இல்லை. யாராவது பணம் கொடுத்து வரவில்லை என்று சொன்னால் என்ன சொல்லுகிறார். என்னய்யா எனக்குநாமம் போட்டு விட்டுப் போகலாம் என்று பார்க்கிறாயா என்று கேட்கிறார்.
நல்ல சொற்றொடராகவே இல்லை அது. காஞ்சிபுரம் கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் பிரச்சினை. அதே போல ரமணரிஷி வழக்கும் முடிந்த பாடில்லை. எண்ணிப் பார்க்க வேண்டும். ரமணரிஷி ஆசிரமத்தின் மர்மங்கள் என்பது புத்தகமாகவே வந்திருக்கிறது. ரமணரிஷி அவர்களை நீதிமன்றத்திற்கு வர வழைக்க முடியாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்த பொழுது நீதிமன்றமே கமிஷனரை நியமனம் செய்தது. அட்வகேட் கமிஷனர். அட்வகேட் கமிஷனர் சென்றுஅவரே நேரடியாக குறுக்கு விசாரணை செய்தார்.
பகவான் ரமணரிஷியிடம் கேள்வி
பகவான் ரமணரிஷியிடம் வழக்குரைஞர் கேள்வி கேட்டார். நீங்கள் எப்படி இந்த சொத்தை உங்கள் சொந்த தம்பிக்கு உயில் எழுதி வைத்தீர்கள் என்று கேட்டவுடனே ரமணிரிஷி சொன்னார். நான் சந்நியாசமே வாங்கவில்லை என்று சொல்லி விட்டார். பகவான் ரமணரிஷியிடம் கொடுத்த சொத்து அவருடைய சொந்த பந்தங்களுக்குக் கொடுக்கப் பட்டது. ஆனால் பெரியாரிடம் கொடுக்கப்பட்ட சொத்து அவருடைய சொந்த பந்தங்களுக்குப் பயன்படவில்லை. மக்களுக்கே விடப்பட்டது என்று சொன்னால் கடவுளை மற! மனிதனை நினை என்ற தத்துவம் எவ்வளவு சரியான தத்துவம் என்பதை தாய்மார்கள், பெரியவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். கீதையில் சொல்லுகிறார். கடவுள் பரமாத்மா நான்கு வர்ணத்தையும் நான்தான் உண்டாக்கினேன் என்று.
கடவுள் உண்டாக்கிய ஜாதி
சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் நான்கு ஜாதிகளையும் நானே உண்டாக்கினேன். பிராமணன் முகத்தில் இருந்து பிறந்தான். சத்திரியன், தோளில் இருந்து பிறந்தான். வைசியன் தொடையிலிருந்து பிறந்தான். சூத்திரன் காலில் இருந்து பிறந்தான். பஞ்சமன் அய்ந்தாவது ஜாதி. அவன் எங்கே பிறந்தான் என்று கேட்டபொழுது அதற்கு விடை கிடையாது. அது அவர்ணஸ்தர் என்று ஒதுக்கினார்கள்.
பஞ்சமன் எங்கே பிறந்தான்?
தாய்மார்களுக்கு, இளைஞர்களுக்கு சொல்லு கின்றேன். பெரியாரிடம் கேள்வி கேட்பார்கள். கூட்டம் முடிந்தவுடனே அப்படி வரும்பொழுது அய்யா அவர்களிடத்திலே ஒருவர் கேள்வி கேட்டார். அய்யா நீங்கள் சொன்ன வர்ணதர்மத்தில் ஒருவன் தலையிலிருந்து பிறந்தான். தோளிலிருந்து பிறந்தான். தொடையிலிருந்து பிறந்தான். காலி லிருந்து பிறந்தான் என்றெல்லாம் சொன்னீர்களே!
இந்த பஞ்சமன் என்று இருக்கிறான் பாருங்கள். நமது ஆதிதிராவிட சகோதரன் இவன் எங்கேயிருந்து பிறந்தான் என்று தெரியவில்லையே. அந்த இடம் எங்கேயிருக்கிறது என்று கேட்டார்கள். அய்யா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்.  அவன்தான் அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்திருப்பான் என்று சொன்னார். (கைதட்டல்).
மக்களை சிந்திக்க வைத்தவர் பெரியார்
இப்படி எல்லாம் மக்களை சிந்திக்க வைத்தவர் பெரியார். அவரிடம் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காசும் இன்றைக்கு மக்களுக்குப் பயன்படுகிறது. அதிலே ஜாதி இல்லை. மதம் இல்லை. வேறு எந்த விதமான வேறுபாடும் இல்லை.
மனிதநேயம்தான் பயன்படுகிறது. பெரியா ருடைய இயக்கம் சுயமரியாதை இயக்கம். மனிதனை மனிதன் அடிமைப் படுத்தக்கூடாது. இன்றைக்கு ஈழத்தில் எம் தமிழர் இனம் இவ்வளவு பெரிய சங்கடத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. நாமெல்லாம் குரல் கொடுக்கின்றோம்.
அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய்
ஆனால் ஒரு பெரிய சாபக்கேடு ஒரு பெரிய தீமை என்னவென்றால் தமிழர்கள் அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டைகள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் தமிழர்கள் ஒன்று சேர்வதில்லை. வடக்கே ஒரு பக்கம் கிழக்கே ஒரு பக்கம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சஞ்சீவி பருவதத்தின் சாரல் என்பதிலே ஓ என் சகோதரரே ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
என்று சொல்லுகின்ற இடத்தில் வரும்.
ஏக மனதாகி அவர் நம்மை
எதிர்ப்பதெங்கே? எல்லோரும்
அங்கே தனித்தனிதான்
என்கிற வார்த்தை வரும்.
பெரியாருடைய மனிதநேயம் என்ன?
தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மனிதர்கள் மனிதநேயத்தோடு காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வருகிறோம் என்றால் இன்றைக்கு அரசியலில் ஏதோ நான்கு வாக்கு வரும். அல்லது இதைப் பேசினால் செல்வாக்கு வரும் என்று கருதிக்கொண்டு சொல்வதல்ல நண்பர்களே! இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரியாருடைய இயக்கம் நாடு கடந்தது. பெரியாருக்கு இருந்த பற்று மனிதநேயப் பற்று என்று சொன்னார்கள் அல்லவா? மனிதாபிமானம் என்பது எப்படிப்பட்டது? என்பதை சொல்லும் பொழுது அண்ணா அழகாகச் சொன்னார். அநீதியை எங்கே காணுகிறாரோ  அதை எல்லாம் கண்டிப்பார் பெரியார் அவர்கள்.
1939 குடிஅரசு
எதிர் நீச்சல் போட்டே பழகுவார். இதற்கு  உதாரணம் ஒன்று சொல்லுகின்றேன். 1939 குடிஅரசு. இது வரையிலே குடிஅரசு 30 தொகுதிகள் வந்துவிட்டன. இன்னும் நான்கு தொகுதிகள் இருக்கின்றன. நம்முடைய வேந்தர் அவர்களிடம் சொன்னேன். இதில் எல்லாம் பார்த்தால் நிறைய செய்திகள் கிடைக்கும் என்று.
இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை
1939 மே மாதம் முதற்கொண்டு டிசம்பர் முடிய அந்தத் தொகுதியில் இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது. அன்றைக்கு இலங்கைத் தமிழர் என்று சொல்லுகிறார்கள். இன்றைக்கு ஈழத்தமிழர் என்று சொல்லுகிறார்கள்.
அய்யா அவர்கள் அப்பொழுது ஒரு தீர்மானம் போட்டிருக்கின்றார். மனிதநேயம், மானிடப் பற்று என்பது பற்றி அன்றைக்கு என்ன சூழல் இருந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதைப் படிக்கின்றேன்.
இலங்கையில் உள்ள தமிழர்களைப் பற்றி இலங்கை சர்க்கார். (அன்றைக்கே வெள்ளைக் காரன் இருந்த காலத்திலேயே இந்த கொடுமை நடந்திருக்கிறது. இன்றைக்கு சிங்கள ஆட்சி வந்தவுடனே அதைக்கேட்பதற்கே ஆள் இல்லை) எடுத்து வரும் தப்பான நடவடிக்கையை இம்மா நாடு வன்மையாய் கண்டிக்கிறது (மாநாடு போட்டு அய்யா அவர்கள் இப்படி கண்டித்திருக்கின்றார்)
இந்த விசயத்தில் சென்னை கவர்னரும் (அந்த காலத்தில்) இந்திய வைஸ்ராயும் (இந்திய அரசு) தலையிட்டு தக்கது செய்ய வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஏதாவது தொல்லைகள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் கஷ்டங்களுக்கு சென்னை அரசாங்கத்தாரும், (அப்பொழுது ஆச்சாரியார் ஆட்சி) இந்திய அரசாங்கத்தாரும் பொறுப்பாய் இருக்க வேண்டும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது என்று சொன்னார்கள்.
1939லே நடந்த அக்கிரமத்தையே எதிர்த்தார்
இது 1939லே பெரியாருடைய தொலைநோக்கு எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள். அன்றைக்கு நடந்த அக்கிரமத்தையே பெரியார் எதிர்த்தார். இன்றைக்கு நடப்பதை பார்த்தால் ஒப்பிடவே முடியாது.
இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை இவ்வளவும் தாண்டி அய்.நா. சபையே போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை அறிவித்து அவரைக் கூண்டிலே ஏற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை ஏற்பட்டி ருக்கிறது.
இன்னமும் நம்முடைய மத்திய அரசு வீண் பூச்சாண்டியைக் காட்டி, பாகிஸ்தான் பூச் சாண்டியைக் காட்டி இப்படி பல நேரங்களிலே இந்திய அரசு சிங்கள அரசுக்குத் துணை போகக் கூடிய அரசாக இருக்கிறது. தமிழர்கள் நாம் குமுறிக்கொண்டிருக்கின்றோம்.
தமிழர்கள் கொதித்தெழவில்லை
ஆனால் அதே நேரத்தில் தமிழர்கள் கொதித் தெழவில்லை. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பக்கத்தில் கர்நாடகாவில் என்ன நிலைமை. தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்பதில் அங்கு எல்லா கட்சியும் ஒற்றுமையோடு இருக் கின்றார்கள்.
அவர் ஏணி என்றால் இவர் கோணி
முன்னாள் முதலமைச்சர் இந்நாள் முதலமைச்சர் அந்நாள் முதலமைச்சர். எந்த கட்சியினராக இருந்தாலும் பொதுவானவர்கள் ஆனால் நம் முடைய நாட்டில் என்ன நிலை? அவர் ஏணி என்று சொன்னால் இவர் கோணி என்று சொல்லுவது.
இவர் கோணி என்றால் அவர் ஏணி என்பார். இதுதான் தமிழகத்தின் நிலை. பெரியார் யாருக்காக உழைத்தார்? என்பதை எண்ணிப்பார்த்து நாம் ஒன்று சேர வேண்டாமா?
திராவிடர்களின் சமுதாயத்தைத் திருத்தி மானமும் அறிவும் உள்ளவர்களாக ஆக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளை சுய மரியாதையோடு பாதுகாக்க வேண்டாமா? அதுதானே மானமும், அறிவையும் உருவாக்குவதாக இருக்கும்.
பாலாறு திட்டமாக இருந்தாலும் சரி, அல்லது முல்லைப்பெரியாறு அணைத்திட்டமாக இருந்தா லும் சரி, காவிப்பிரச்சினையாக இருந்தாலும் சரி ஈழப்பிரச்சினையாக இருந்தாலும் சரி, இன்றைக்கு என்ன நிலவரம்?
தமிழர்கள் ஒத்த கருத்துள்ளவர்களாக
எனவே பெரியாடைய விழாவிலே பெரியாரு டைய பணிகளை மட்டும் நாம் பேசிவிட்டுப் போவதாக இருக்கக் கூடாது. இன உணர்வோடு, மொழி உணர்வோடு ஒத்த கருத்துள்ளவர்களாகத் தமிழர்கள் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். எது நம்மை இணைக்கிறது என்று பாருங்கள். இணைப்பதை நாம் அகலப்படுத்துவதுதான் பெரியாருடைய தத்துவம். இணைப்பதை அகலப் படுத்துவோம். நம்மை பிரிப்பதை அலட்சியப் படுத்துவோம். அதுதான் நமக்கு சிறப்பானது. எது நம்மை இணைக்கிறது என்று பாருங்கள்
நம்மில் ஒரு சிலவற்றில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். எது நம்மைப் பிரிக்கிறது என்று பார்க்காதீர்கள். எது நம்மை இணைக்கிறது என்று பாருங்கள். அப்பொழுதுதான் சரியான இனஉணர்வு வரும்.
சிறப்பாக வாழுங்கள்
ஆகவே தாய்மார்களே, உங்களுடைய அற்புத மான ஒத்துழைப்பு, உங்களுடைய வழிப்புணர்வு இவைகளில் எல்லாம் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். அறுபது மணித்துளிகள் எனக்கு கொடுத்தார்கள். ஏறத்தாழ 60 மணித்துளிகளை நெருங்கிவிட்டேன். நான் எப்பொழுதும் கட்டுப் பாட்டிற்குட்பட்டவன். கட்டுப்பாடுள்ள ஒரு தலைமையின் கீழ் பணியாற்றிக்கொண்டிருக் கின்றேன். பெரியாருடைய மாணவன்தான் நான் இன்னமும். எனவே இவ்வளவு உற்சாகத்தோடு வந்திருக்கக் கூடிய உங்களுக்கு எல்லாம் மீண்டும், மீண்டும் நான் நன்றி செலுத்துகின்றேன்.
பெரியாருக்கு நன்றித்திருவிழா
பெரியார் விழா இதுவெறும் விழா அல்ல. இது மனித சமுதாயத்திலே மிக முக்கியமான அங்கம். அந்த வகையிலே நீங்கள் ஏராளம் வந்திருக்கிறீர்கள். இது ஒரு நன்றித்திருவிழா. பெரியாருக்கு நன்றித் திருவிழா. பெரியாருக்காக நாம் பெரியாருடைய கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அருமைத் தாய்மார்களே, அருமை பெரி யோர்களே, மாணவச் சிங்கக்குட்டிகளே உங்களைப் பார்த்துச் சொல்லு கின்றோம். பெரியாருக்காக பெரியார் கொள் கையை பின்பற்ற வேண்டும். பெரியார் பெருமைக் காகப் பின் பற்றுங்கள் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்.
உங்கள் விடுதலைக்காக
உங்களுக்காக பெரியாரைப் பின்பற்ற வேண்டும். உங்கள் விடுதலைக்காக நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் முன்னேற்றத்திற்காக பெரியாரைப் பின்பற்ற வேண்டும். மருந்து சாப்பிடுகிறோம். மருந்தை கண்டு பிடித்தவர் வருத்தப்படுகிறார்  அதற்காக மருந்தை சாப்பிடுகிறேன் என்று யாராவது சொல்வாரா?  இல்லை, மருந்து கடைக்காரர்களிடம் மருந்து வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக சாப்பிடு கிறோம் என்று சொல்வீர்களா?
நம் நோய்க்காக, நோயைப் போக்கிக்கொள் வதற்காக மருந்து சாப்பிடுவதைப் போல அறியாமை என்ற நோயைப் போக்க வேண்டுமானால், மூடநம்பிக்கை நோயைப் போக்க வேண்டுமானால் ஜாதி வெறி என்ற நோயைப் போக்க வேண்டுமானால் மதவெறி என்ற நோய் போக வேண்டுமானால் பெரியார் தேவை. பெரியார் ஒரு தனிமனிதர் அல்ல.
அவர் ஒரு தத்துவம். மனிதனுக்கு மரணக்குறிப்பு உண்டு. பெரியார் என்ற தத்துவம் என்றைக்கும் வாழக்கூடியது. பெரியார் என்பது ஒரு ஜீவநதி. அந்த ஜீவ நதி வற்றாது. அது யாருக்காகவும் வளையாது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் மனிதநேயம் பெற்றவர்களாக வளரவேண்டும் என்று கேட்டு வாய்ப்பளித்த வேலூர் தமிழ்ச்சங்கத் திற்கும் என்னை வற்புறுத்தி இவ்வளவு பெரிய மகிழ்ச்சியான வாய்ப்பை வழங்கிய எங்களுடைய பணியை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கின்ற நம் முடைய தமிழ்ச் சங்கத்தின் புலவராகவும், தலைவராகவும் இருக்கின்ற வேலூர்-வேந்தர் அவர்களுக்கும் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை மகிழ்ச் சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.





 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்


 
 

1000 எழுத்துகள் மீதமுள்ளன

 

Security code
Refresh


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...