Tuesday, October 25, 2011

விடுதலைக்கு சந்தாக்கள் அளிப்பது விடுதலைக்காக அல்ல நமக்காக

விடுதலைக்கு சந்தாக்கள் அளிப்பது விடுதலைக்காக அல்ல நமக்காக, நம் மான வாழ்விற்காக
ஈரோட்டில் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் விளக்கம்


ஈரோடு, அக். 25- விடுதலை ஏட்டிற்கு சந்தாக்கள் அளிப்பது விடுதலைக்காக அல்ல. நமக்காக, நம் இனத்தின் மானவாழ்விற்காக என்று கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது  உரையில் குறிப்பிட்டார். திருச்சியில் நடை பெற்ற கழகப் பொதுக் குழு கூட்டத்தில் எடுக் கப்பட்ட தீர்மானத்தின் படி விடுதலை ஆசிரி யர், கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்கள் விடுதலைக்கு பொறுப்பேற்று 50 ஆண்டுகள் அடைவதை யொட்டி விடுதலை ஏட்டிற்கு 50,000 சந் தாக்கள் அளிப்பது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கலந்துரையாடல் கூட்டம்
இதனை நிறைவேற் றும் பணியில் நாடெங் கும் கழகத் தோழர்கள் முழுவீச்சில் ஈடுபட்டி ருக்கின்றனர். இதற்காக முதல் கட்டமாக கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்று  வரு கிறது. இதில் ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டங்களில் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று எழுச்சியுரை யாற்றினார்.
ஈரோடு
ஈரோடு பெரியார் மன்றத்தில் ஈரோடு, கோபி, நாமக்கல் ஆகிய கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் பொதுச்செய லாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை யில் 22.10.2011 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. மண்டல தலைவர் பொத்தனூர் க.சண்முகம், மண்டல செயலாளர் த.சண் முகம், ஈரோடு மாவட்ட தலைவர் ப.பிரகலாதன், கோபி மாவட்ட தலை வர் இரா.சீனிவாசன், நாமக்கல் மாவட்ட தலைவர் வெங்கரை மு. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி தோழியர் மகேஸ்வரி தொடக்கத் தில் கடவுள் மறுப்பு கூறினார்.
அடுத்து கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி கழகத் துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி விளக்கவுரையாற்றி னார். அடுத்து கோபி மாவட்ட துணை செய லாளர் அ.பாட்டுசாமி, மாநகர தலைவர் கு.சிற்ற ரசு, பொதுக்குழு உறுப் பினர் கோ.பாலகிருஷ் ணன், பெரியசாமி, கோபி மாவட்ட ப.க. செயலாளர் சீனு.தமிழ்ச் செல்வி, மாநில இளை ஞரணி துணைச் செய லாளர் பா.வைரம், ஈரோடு மாவட்ட செய லாளர் நற்குணன், கொடுமுடி ஒன்றிய செயலாளர் கைலாசம், பொதுக்குழு உறுப் பினர் கோபி க.யோ கானந்தம், பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து இறுதியாக கழகப் பொதுச்செய லாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரை யாற்றினார்.
இதில் கோபி மாவட்ட செயலாளர் ந.சிவலிங்கம், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன், கோபி மாவட்ட ஆட்சி யர் மல்லிகா பாட்டுச் சாமி, ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம், நீல மலை மாவட்ட தலை வர், கோவை மண்டல செயலாளர் திருப்பூர் ஆ.பாண்டியன், கோபி நகர தலைவர் ஆனந்தன், ஈரோடு மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலை வர் ப.சத்தியமூர்த்தி, சித்திரைச்செல்வன், நாமக்கல் மாவட்ட செயலாளர் அ.குமார், குமாரபாளையம் நகர செயலாளர் சரவணன், கோபி சீனு.மதிவாணன், உள்ளிட்ட முக்கிய கழக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
டிசம்பர் 5ஆம் தேதிக்குள்
கூட்டத்தில் 50 ஆண்டுகாலம் விடுதலை ஏட்டிற்கு ஆசிரியராக இருந்து உலகச் சாதனை படைத் திருக்கும் தமிழர் தலை வர் அவர்களின் அய ராத உழைப்பிற்கு, ஈடு இணையற்ற தொண் டிற்கு நன்றி செலுத்தி பாராட்டுகளை தெரி வித்தும், எதிர்வரும் டிசம்பர் 5ஆம் தேதிக் குள்ளாக தங்கள் மாவட்ட கழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கினை முடித்து சந்தாக்களை வழங்குவ தென்றும், கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் கலந்துகொண்டு பேசிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில் குறிப் பிட்ட போது...
விடுதலை ஏட்டிற்கு 50,000 சந்தாக்கள் அளிப் பது என்று திருச்சியில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத் தில் எடுக்கப்பட்டிருக் கும் முடிவை நீங்கள் அறிவீர்கள். 50 ஆண்டு காலம் உலகில் ஆசிரிய ராக இருந்து ஒரு ஏட்டை, லட்சிய ஏட் டினை நடத்தி வருபவர் நமது தமிழர் தலைவர் அவர்கள் மட்டுமே. இதுவரை வேறு யாரும் இவ்வளவு ஆண்டுகள் ஆசிரியராக நீடித்தது கிடையாது. அப்படிப் பட்ட நிகரற்ற ஒரு தலைவருக்கு விடுதலை சந்தாக்களை அளிக்கி றோம். சந்தாக்களைத் தவிர வேறு எதைக் கொடுத்தாலும் நமது தலைவர் மனநிறைவு கொள்ளமாட்டார்.
குன்றக்குடி அடிகளார்
தமிழன் வீடென்ப தற்கு அடையாளம் விடுதலை இருப்பது தான் என்றார் அடி களார், அதனை நாம் நிறைவேற்ற வேண் டாமா? 50,000 தமி ழர்களின் வீடுகளை அடையாளம் காண் போம். விடுதலைக்கு நிகரான ஒரு ஏட்டினைக் காட்ட முடியுமா? நம்மை விட்டால், விடு தலையை விட்டால் தமிழர்களுக்கு நாதி உண்டா? அரசு அலு வலர்களுக்கு ரகசியக் குறிப்பேடு (ஞநசளடியேட கடைந) ஒழிவதற்கு விடுதலை அல்லவா காரணம். அங்குலம் அங்குலமாக பார்ப்பனர் அல்லாத மக்களை பொத்திப் பொத்தி உயர்த்தியது விடுதலை அல்லவா? விடுதலைக்கு சந்தாக் கள் அளிப்பது விடுத லைக்காக அல்ல. ஆசிரி யருக்காக அல்ல. தமிழர் களின் மான வாழ் விற்காக, நமக்காக, நம் வளர்ச்சிக்காக என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்.
பல முதல்வர்களை வீட்டுக்கனுப்பியது
விடுதலை பல முதலமைச்சர்களை உருவாக்கியிருக்கிறது. பல முதலமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியி ருக்கிறது. விடுதலை யால் பயன்  அடையாத தமிழர்களில் ஒருவரைக் காட்ட முடியுமா? ஏன் பார்ப்பனர்கள்கூட இருக்கிறார்களோ, விடுதலையால் பயன் பெற்றிருக்கிறார்களே. பார்ப்பன பெண்கள் கூட இன்று சுதந்தி ரமாக நடமாடுவதற்கு விடுதலை அல்லவா விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறது.
எனவே தோழர்களே இது நம்மை நாமே பரி சோதித்துக்கொள்ளும் ஒரு முயற்சி. நம்முடைய பலத்தை எதிரி மட்டு மல்ல. நாமும் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு. உடனே செய லில் இறங்குங்கள். நமது தலைவருக்கு நன்றி காட்ட கிடைத்திருக் கும் நல்ல வாய்ப்பு இது என்று கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...