Saturday, October 22, 2011

அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் தமிழக அரசு அறிவிப்பு


அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, அக்.22- அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது:-
2012- ஆம் ஆண்டில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நாள்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

1. புத்தாண்டு தினம் - ஜனவரி 1 (ஞாயிறு)

2. பொங்கல் - ஜனவரி 15 (ஞாயிறு)

3. திருவள்ளுவர் தினம் - ஜனவரி 16 (திங்கள்)

4. உழவர் திருநாள் - ஜனவரி 17 (செவ்வாய்)

5. குடியரசு தினம் - ஜனவரி 26 (வியாழன்)

6. மிலாடி நபி - பிப்ரவரி 5 (ஞாயிறு)

7. தெலுங்கு வருட பிறப்பு - மார்ச் 23 (வெள்ளி)

8. வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு - ஏப்ரல் 2 (திங்கள்)

9. மகாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 5 (வியாழன்)

10. புனித வெள்ளி - ஏப்ரல் 6 (வெள்ளி)

11. தமிழ் புத்தாண்டு தினம் - ஏப்ரல் 13 (வெள்ளி)

12. டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம் - ஏப்ரல் 14 (சனி)

13. மே தினம் - மே 1 (செவ்வாய்)

14. சுதந்திர தினம் - ஆகஸ்டு 15 (புதன்)

15. ரம்ஜான் - ஆகஸ்டு 20 (திங்கள்)

16. கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 8 (சனி)

17. விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர் 19 (புதன்)

18. வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு - செப்டம்பர் 29 (சனி)

19. காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 (செவ்வாய்)

20. ஆயுத பூஜை - அக்டோபர் 23 (செவ்வாய்)

21. விஜய தசமி - அக்டோபர் 24 (புதன்)

22. பக்ரீத் - அக்டோபர் 27 (சனி)

23. தீபாவளி - நவம்பர் 13 (செவ்வாய்)

24. முகரம் - நவம்பர் 25 (ஞாயிறு)

25. கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 (செவ்வாய்)

மேற்கண்ட பொது விடுமுறை நாள்கள், அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், மாநகராட்சிகளுக்கும், வாரியங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...