Wednesday, October 19, 2011

சிறந்த வெப்ப அல்லது மின் கடத்தி எது?


சிறந்த வெப்ப அல்லது மின் கடத்தி எது?

வெள்ளிதான் சிறந்த வெப்ப, மின் கடத்தியாகும்.
மிகச் சிறந்த வெப்ப, மின் கடத்தி, அனைத்து தனிமங்களையும் எதி ரொலிக்கக் கூடியதுமாகும்.  இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பது தான்.  நமது மின்சார சாதனங்களில் செம்பு உலோகத்தை நாம் பயன்படுத் துவதன் காரணமே அது வெள்ளிக்கு அடுத்தபடி இரண்டாவது சிறந்த வெப்ப, மின் கடத்தி என்பதும், விலை குறைந்தது என்பதும்தான்.

வெள்ளி அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படுவதுடன், புகைப்படத் தொழில்,  நீண்ட காலம் உழைக்கக்கூடிய பேட்டரிகள்,   சூரிய ஒளியைக் கொண்டு மின்னாற் றல் தயாரிக்கும்  தகடுகளிலும் வெள்ளி அதிகமாக பயன் படுத்தப்படுகிறது.

தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் வியப்பான குணத்தைக் கொண்டது வெள்ளி. இதற்கு சிறிதளவு வெள்ளியே போதுமானது. நூறுகோடி பங்குக்கு பத்து பங்கே போதுமானது. இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த உண்மை கி.மு. 5 ஆம் நூற்றாண்டு காலம் தொட்டு அறியப்பட்டிருந்தது. ஒரு சிறப்பான ஓடையிலிருந்து எடுக்கப்பட்ட நீரைக் கொதிக்க வைத்து, வெள்ளி பாத்திரங்களில் அடைத்து எடுத்து வரப்படும் தண்ணீரையே பெர்சிய அரசர் சைரஸ் என்னும் மாமன்னர் பயன்படுத்தினார் என்று ஹீரோடோடஸ் தெரிவிக்கிறார்.

வெள்ளிப் பாத்திரங்களில் வைக்கப்படும் தண்ணீரோ, உணவோ அவ்வளவு எளிதாகக் கெட்டுப் போவதில்லை என்று ரோமர், கிரேக்கர் இருவருமே அறிந்திருந்தனர். நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்பாகவே வெள்ளியின் நுண்ணுயிரிகளுக்கு எதிரான பலத்த ஆற்றல் தன்மை பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங்கால கிணறுகளின் அடிப்பகுதியில் வெள்ளி நாணயங்கள் அடிக்கடி காணப்பட்டதன் காரணத்தையும் இந்த உண்மை விளக்குகிறது.

உங்களின் வெள்ளிப் பெட்டியை நிரப்ப நீங்கள் முற்படும் முன் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை:

முதலாவதாக, சோதனைச்சாலையில் வெள்ளி நுண்ணுயிரிகளைக் கொல்வது நிச்சயமானது என்றாலும், நமது உடலில் அது இவ்வாறு செயல்படுமா இல்லையா என்பது முரண்பட்ட கருத்துகளைக் கொண்டதாகும். வெள்ளியினால் ஏற்படக்கூடிய பயன்கள் என்று கூறப்படுவது அனைத்தும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. வெள்ளியின் ஆரோக்கியப் பயன்களைப் பற்றி தனியார் நிறுவனங்கள் விளம்பரம் செய்ய, அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது.

இரண்டாவதாக,   வெள்ளித் துகள்கள் கலந்த தண்ணீரைப் பருகுவதால் அர்கிரியா என்னும் நோய் ஏற்படக்கூடும்  என்று கருதப்படுகிறது. இந்த நோயின் அடையாளமே நோயாளியின் தோல் நீல நிறம் கொண்டதாகிவிடும்.

இதற்கு மாறாக, நீச்சல் குளங்களைத் தூய்மையாக வைத்திருக்க குளோரினைப் பயன்படுத்துவதற்கு பதிலாக வெள்ளி உப்புகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.  அமெரிக்காவில் விளையாட்டு வீரர்கள் தங்கள்  கால்களில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கால்  உறைகளினுள் வெள்ளித்துகள்களைப் பேட்டு வைப்பர். மின்சாரத்தை தண்ணீர் மிக அரிதாகவே கடத்தும் என்பது உண்மை.

குறிப்பாக,  தூய்மையான தண்ணீர் ஒரு  மின்தடைச் சுற்றாகவே (Insulator) பயன் படுத்தப்படுகிறது. மின்சாரத்தைக் கடத்துவது தண்ணீரில் உள்ள இரண்டு பங்கு ஹைட்ரஜன் காற்று, ஒரு பங்கு உயிர்க் காற்று ஆகியவற்றின் மூலக்கூறுகள் அல்ல; நீரில் கரைக்கப்பட்ட வேதியியல் பொருள்களே மின்சாரத்தைக் கடத்துகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக சாதாரண உப்பைக் கூறலாம்.

தூய தண்ணீரை விட கடல் நீர் நூறுமடங்கு மேலான மிகச் சிறந்த மின்சாரக் கடத்தியாகும். ஆனால் அது வெள்ளியின் மின்கடத்தும் திறனை விட பத்து லட்சம் மடங்கு மோசமானது.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ 
பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...