Tuesday, October 18, 2011

காவிரி தீர்ப்பாயம் அளித்தது என்ன?


காவிரி நதிநீர் தீர்ப்பாயம் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. கருநாடகத்துக்கு 270 டி.எம்.சி.
தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி.தண்ணீரையும், கருநாடகத்துக்கு 270 டி.எம்.சி. தண்ணீரையும் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் தனது 2007 ஆம் ஆண்டு தீர்ப்பில் வழங்கியது. என்றாலும் ஒரு ஆண்டில் கருநாடகம் 192 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே உண்மையில் தமிழ்நாட்டுக்கு விடும்.
பல விசாரணைகளை மேற்கொண்ட இத் தீர்ப்பாயம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தனது தீர்ப்பை அளித்துள்ளது. இதில் கேரளா வுக்கு 30 டி.எம்.சி. தண்ணீரையும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரையும் அளித்துள்ளது.
1990 இல் அமைக்கப்பட்ட இந்த தீர்ப்பாயம் தனது இடைக்கால  ஆணையில் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஓய்வுபெற்ற நீதியரசர் என்.பி.சிங் தலைமையிலான இந்த மூன்று உறுப்பினர் தீர்ப்பாயம் காவிரியில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டி.எம்.சி. என்று கணக்கிட்டுள்ளது. உண்மையில் கருநாடகா வினால் தமிழ்நாட்டுக்கு விடப்படும் 192 டி.எம்.சி. தண்ணீர் கருநாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள பிலிகுண்டு நீர்த்தேக்கத்தில் அளக்கப் படும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

தனது இறுதித் தீர்ப்பில் கருநாடகா தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் விடவேண்டிய தண்ணீரை வரையறுத்துள்ளது. ஜூன்: 10; ஜூலை: 34; ஆகஸ்ட்: 50; செப்டம்பர்:50; அக்டோபர் : 22; நவம்பர்: 15; டிசம்பர்: 8; ஜனவரி: 3: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே: 2.5 டி.எம்.சி. வீதம். காவிரி நதி நீரில் பெருமளவு உரிமை பெற்றிருப்பவை கருநாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் என்பதால், ஒரு சாதாரண ஆண்டில் மேற்குறிப்பிட்ட அளவு தண்ணீரை அந்தந்த மாதங்களில் மாநிலங்களுக்கிடையே உள்ள பிலிகுண்டு நீர்த்தேக்கத்தில் இருந்து கருநாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.
192 டி.எம்.சி. என்று நிர்ணயித்திருப்பதில் 182 டி.எம்.சி. தமிழ்நாட்டுக்கு உரிய பங்காகும்; 10டி.எம்.சி. சுற்றுச்சூழல் நோக்கங்களுக்கானது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...