Wednesday, October 26, 2011

நாட்டுப் பாடல் பிறந்த கதை


பிரதமர் நேரு, 1961, அக்டோபர்  ஒன்றாம் தேதி, புது டில்லியில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு மாநாட்டில், இந்தியாவின் நாட்டுப்பாடல்  எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை கூறினார். இந்தியாவுக்கான நாட்டுப் பாடலை இயற்றித் தரும்படி கவிஞர் ரவீந்தரநாத்தாகூரை, நேரு கேட்டுக் கொண்டார். ஆனால், அடுத்த சில மாதங்களில் கவி_தாகூர் இயற்கை எய்தினார். 1946இல், அரசு சாரா, தூதுக் குழு, நேருவின் சகோதரியான, திருமதி விஜயலட்சுமி பண்டிட் தலைமையில் அய்.நா. சபைக்கு சென்றது. அமெரிக் காவின் உணவகம் ஒன்றில், அவருக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது. அந்த உணவகத்தினர், அவர்கள் வைத்துள்ள, இசைக் குழுவினர் மூலம், இந்தியாவின் நாட்டுப் பாடலை இசைக்க வேண்டி யுள்ளதால் அந்த பாடலை அளிக்கும் படி கேட்டனர்.  விஜயலட்சுமி பண்டிட் டுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது நடந்தது. இந்தியா விடுதலை அடையும்முன். ஆனால் அவரிடம் ஜனகனமன பாடலின் இசைத் தட்டிருந்தது. இந்த இசைத் தட்டை, இசைக் குழுவினருக்கு அளிக்க, எண்ணம் தோன்றியது. அந்த இசைத்தட்டை வைத்து இசைக் குழுவினர், இசையை அமைத்து, இசைத்தனர். அங்கு இருந்த அனை வரும் அதைப் பெரிதும் விரும்பினர். அதைத் தொடர்ந்து, அந்தப் பாடலில் சிந்தனை சென்றது. மிகவும் கவனத் துடன் அந்த பாடலைப் படித்து பார்த் தார்கள். அதனால் பல கவிஞர் களுக்கும், இசை அமைப்பாளர்களுக் கும் அனுப்பினார்கள். இங்கிலாந்து  நாட்டு ஒலிபரப்பு நிலையத்துக்கும் (ஙிஙிசி) (லண்டன் நகரம்) அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு இந்த பாடல், இந்திய அரசியல் சாசன சட்டவரைவு சபைக்கு அளிக்கப்பட்டது. அதனு டைய ஒப்புதல் பெற்று, நாட்டுப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- (நன்றி: தி இந்து 3.10.2011) தகவல்: பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...