Thursday, October 20, 2011

கேரளாவில் பெரியார் கொள்கை முழக்கம் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு பங்கேற்பு


கேரளாவில் பெரியார் கொள்கை முழக்கம் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு பங்கேற்பு


மலப்புரம், அக். 18- கேரள மாநிலத்தின் மல பார் பகுதி இசுலாமியர் நிறைந்த பகுதி. அப் பகுதியின் மாவட்டத் தலைநகர் மலப்புரத் தில் கேரள யுக்திவாதி சங்கத்தின் மாவட்ட மாநாடு 17.10.2011 ஞாயிற் றுக் கிழமை காலை 10.30 முதல் மாலை 5 வரை சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட என்.ஜி.ஓ. சங்கத்தின் பெரிய கூட்ட அரங் கில் நடைபெற்ற மாநாட் டின் தொடக்க உரை யாற்றிக் கழகப் பொதுச்  செயலாளர் சு. அறிவுக் கரசு கலந்து கொண்டார்.
நீதிக்கட்சி துவக்கம்
மாவட்டப் பகுத்தறி வாளர் (யுக்திவாதி) சங் கச் செயலாளர் பரக்கல் முகமது அறிமுக உரை யாற்றி அனைவரையும் வரவேற்றார். 1916 இல் திராவிடர் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு நீதிக்கட்சி தொடங்கப் பட்டதையும் பின்னர் 1944இல் அதுவே திரா விடர் கழகம் எனப் பெரி யாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பகுத்தறி வுப் பிரச்சாரம் செய்து வருகிறது எனவும் சிறப் பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மாநாட்டின் தலைவ ரான (கோழிக்கோடு பல் கலைக் கழக கணிதப் பேராசிரியர்) டாக்டர் பி.டி.ராமச்சந்திரன் உரை யாற்றினார்.
சு.அறிவுக்கரசு
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
நாயரில் தொடங்கி தந்தை பெரியாரையும் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றையும் சிறப்பாக அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி தெரிவித்த அவர், டாக் டர் நாயரின் தொண்டி னைப் பற்றிச் சிறப்பித் துப் பேசினார். தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட வெற்றி, தமி ழர் தலைவர் சென்ற 2009 ஆம் ஆண்டு நடத்திய 85 ஆம் ஆண்டு வெற்றி விழாச் சிறப்பு ஆகிய வற்றை விளக்கினார். கடவுள், மத நம்பிக்கை, ஜாதிப் பாகுபாடுகள் போன்றவை மனித இன முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதை எடுத்துக் காட்டுகளுடன் விளக் கினார். இறப்பு என்பது வாழ்வின் முடிவு என் றும் அதற்கும் பிறகு மத வாதிகள் கூறும் வாழ்வோ, மோட்ச, நரகமோ ஏதும் கிடையாது என்பதை யும் விளக்கினார். இந் திய அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்கா தர திலக் என்றும் அதே பாதையில் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்றவை செயல்படுவது, திரிசூலம் வழங்கியதைக் கண்டிக் காத காங்கிரசு, அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் மதச் சார்புத் தன்மை, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப் படுவதைக் கண்டித்துப் போடப்பட்ட வழக்கு போன்ற பல பகுத்தறிவுக் கருத்துகளை விளக்கி னார். ஒவ்வொரு பகுத் தறிவாளரும் அடிப்படை யில் மனிதநேயர் என் பதை கடவுளை மற; மனிதனை நினை எனும் வாசகத்தைக் கொண் டும், தமிழர் தலைவரின் நான் ஹவே க்ஷசயாஅ, க்ஷநஉயரளந ஐ யஅ ஞசடி ழரஅய எனும் வாசகத்தையும் சுட்டிக் காட்டிவிட்டு மனித நேயமும், பகுத் தறிவும் நாத்திக நன் னெறிக்கு அனைவரை யும் அழைத்துச் சென் றிட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைப் போம் என்று வேண்டு கோள் விடுத்தார்.
யுக்தி வாதி சங்கத் தலைவர்
மாநாட்டில் இதயச் சிறப்பு மருத்துவர் டாக் டர் கே.ஆர்.வாசுதேவன், கே.ஏ.ஜப்பார், மாணவி ஹரிதா ஆகியோர் பேசி னர். சிறப்புரையை கேரள யுக்திவாதி சங்கத் தலை வர் யு.கலாநாதன் நிகழ்த் தினார்.
அனைவருக்கும் மதிய உணவு வழங்கப் பட்டது. உணவு இடை வேளையின் போது நிறைய கல்லூரி மாண வர்களும், பணி புரியும் இளைஞர்களும் பொதுச் செயலாளரிடம் அளவ ளாவிய நம் கழகம் பற்றி விசாரித்து அறிந்து கொண்டனர். ஒரு பொறி யாளர் தம் தந்தையார் பெரியார் பேச்சை திண் டிவனத்தில் கேட்டுப் பகுத்தறிவாளராக மாறி யதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். 35 வய துள்ள சிவக்குமார் (எனும் ஆட்சி அலுவலர்) நாம் எல்லோரும் திராவிடர் கள் என்று மற்வர்களி டம் கூறியதைக் கேட்ட போது பெருமையாக இருந்தது. பெரியார் தந்தை இனப் பெயரை இளைய சமுதாயம் நினை வில் வைத்திருப்பதை நினைத்து நாம் கர்வப் படலாமே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...