Wednesday, October 26, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:



தலையில்லாமல் ஒரு கோழியால் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்க முடியும்?
தலை வெட்டப்பபட்ட பிறகு ஒரு கோழி இரண்டு ஆண்டுகள் வரை உயிருடன் இருந்துள்ளது. கோலாரிடா மாநிலத்தின் ஃபுருய்டா என்ற ஊரில் 1945 செம்பம்பர் 15 அன்று ஒரு கொழு கொழு என்றிருந்த இளம் கோழியின் தலை வெட்டப்பட்ட பின்னரும் அது உயிரோடு இருந்தது. நம்பமுடியாதபடி, அதை வெட்டிய கத்தி அதன் தலைக்கு ரத்தத்தை எடுத்துக் செல்லும் முக்கிய ரத்தக்குழாயை வெட்டத் தவறி விட்டதுடன், அதன் கழுத்துடன் இணைக்கப்பட்ட மூளையின் ஸ்டெம் செல் பாதிக்காமல் இருந்ததால், அது உயிர் தப்பியதுடன், வளரவும் செய்தது.
மைக் என்று அழைக்கப்பட்ட அந்தக் கோழி தேசிய அளவில் புகழ் பெற்றதாக ஆகிவிட்டது. நாடு முழுவதும் சுற்றுப் பயணமாக கொண்டு செல்லப்பட்ட அதன் புகைப்படங்கள் டைம்ஸ் மற்றும் லைஃப் இதழ்களில் இடம் பெற்றன. அதன் உரிமையாளரான லாயிட் ஓல்சன் என்பவர் அந்தக் கோழியை பார்ப்பதற்கு 25 சென்ட் வசூலித்தார். தலையில்லாத அதிசயக் கோழி மைக் என்ற கண்காட்சி அமெரிக்கா முழுவதிலும் நடத்தப்பட்டது. காய்ந்து போன கோழித் தலையுடன் (அதுதான் அதன் தலை என்று கூறப்படும்)  மைக் தோற்றமளிக்கும். ஆனால், உண்மையில் அதன் அசல் தலையை ஓல்சனின் பூனை தூக்கிக் கொண்டு போய்விட்டது. மைக்கின் புகழ் உச்சகட்டத்தில் இருந்த போது ஓல்சனுக்கு மைக்  மாதம் 4,500 டாலர் சம்பாதித்துக் கொடுத்தது. அதன் விலை 10,000 டாலர் என்று மதிப்பிடப் பட்டது.
இதைப் பார்த்துவிட்டு பலரும் தங்கள் கோழிகளின் தலைகளை வெட்டினர். ஆனால் அவற்றில் எதுவும் ஓரிரு நாட்களுக்கு மேல் உயிருடன் இருக்கவில்லை. கண்ணுக்கு சொட்டு மருந்து போடும் ஒரு பில்லர் வழியாக மைக்குக்கு உணவு அளிக்கப்பட்டது. அது தன் தலையை இழந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, அதன் எடை ஆறு பவுண்டுகள் இருந்தது. தனது தொண்டையால் உணவைக் கொத்திக் கொண்டும், இறக்கைகளைக் கோதிக்கொண்டும்  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. மைக்கை நன்கு அறிந்திருந்த ஒருவர் கூறினார்: தனக்கு தலை இல்லை என்பதை அறியாமல் இருந்த பெரிய கொழுத்த கோழி அது என்று கூறினார்.
அரிசோனா மாநிலம் போனிக்சில் இருந்த ஓட்டல் ஒன்றில் ஓரிரவில் சோகம் தாக்கியது. மைக்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது; முதல் நாள் கண்காட்சி நடந்த நடந்த இடத்திலேயே மைக்குக்கு உணவளிக்கும் பில்லரை மறந்து வைத்துவிட்டு வந்ததை ஓல்சன் அப்போதுதான் உணர்ந்தார். மைக்கினுடைய மூச்சுக் குழாய் அடைப்பைப் போக்க முடியாததால், மைக் மூச்சுத் திணறலால் இறந்து போனது.
கோலார்டோவில் மைக் இன்றும் நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே மாதமும் தலையில்லாத கோழி மைக்  தினம்  ஃப்ருய்டாவில் கொண்டாடப்படுகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...